skip to main |
skip to sidebar
"நேர்மையான அரசியல்வாதிகளும் ,
நேர்மையான அதிகாரிகளும் ,
இந்தியாவில் இருக்கத்தான் செய்தார்கள்......."
நாளை செல்வி ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கப் போகிறார் ! ஐந்தாவது முறையாக பதவி ஏற்கிறார் !
இதனை எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது! உச்சநீதி மன்றமல்ல-சர்வெத அளவில் விசாரணை வைத்தாலும் எதுவும் நடக்கப்போவதில்லை ! சட்டத்தில் ஓட்டை ! விசாரணையில் ஒட்டை ! விசாரித்த் அதிகாரிகளே எங்கு ஓட்டை இருக்கிறது என்று சொல்லும் வாய்ப்பும் உள்ளது ! விசாரித்த அரசியல் தலைமை வழக்கை விட அதனால் ஏற்படும் அரசியல் லாபத்தைகணக்கில் கொண்டதும் காரணம் !
எல்லாவற்றையும் விட செல்வி ஜெயலலிதாவின் சொந்த வாழ்க்கைப்ற்றிய வெகுஜன நம்பிக்கை ! காமராஜருக்கு குடும்பமில்லை ! பணம் சேர்க்க வேண்டிய கட்டாயம் இல்லை ! தனி நபர் !
செல்விஜெயலலிதாவும் தனி நபர் ! யாருக்காக அவர் சொத்து சேர்க்க வேண்டும் ! அவரை சுற்றி இருப்பவர்கள் சம்பாதித்தால் அவர் எப்படி பொறுப்பாகமுடியும் என்ற பொதுப்புத்தி அவரை எப்பொதுமே காப்பாற்றும் சக்தியாக மக்களீடையே பதிந்துள்ள ஒன்று !
இந்திய வரலாற்றில் மோசடி செய்த முதலாளி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது ஓரே ஒருமுறதான் நடந்தது !
ராம்கிருஷ்ண டால்மியா இன்சூரன்ஸ் துறையில் செய்த மோசடியில் சிக்கினார் ! இதனை நாடாளுமன்றத்தில் எழுப்பியவர் ஃபெரோஜ் காந்தி ! அப்பொது நிதி அமைச்சராக இருந்தவர் சி,டி தேஷ்முக் ! இருவருமே அப்பழுககற்ற நேர்மையான அரசியல் வாதிகள் !
இன்சூரன் கட்டுப்பாட்டு துறையில் பணியாற்றிய ராஜகோபாலன்,காமத் ,போன்ற அதிகாரிகளின் நேர்மை !
இவர்களீன் நேர்மையின் மிது நம்பிக்கை வைத்து அவர்கள் முடிவுகளீல் தலயிடாத பிரதமர் எல்லமாக செர்ந்து டால்மியாவை சிறையில் தள்ளீயது !
அன்றய பிரதமருக்கே தேரியாமல் இன்சூரன்ஸ் துறையை தேசீயமயமாக்கியதும்,அதனை பிரதமர் ஏற்றுக்கொண்டதும் ஒரு ஹாலிவுட் thriller படம்போன்ற நிகழ்வாகும் !
அந்த நேர்மையும், நியாமும் இன்னமும் மிச்சமிருக்கத்தான் செய்கிறது !
நாம் அதனை இளையதலைமுறைக்கு எடுத்து சொல்வோம் !
அவர்கள் சாதித்து விடுவார்கள் !!!
3 comments:
எங்கே இருக்கிறது நேர்மை? கனவுகளில் கூட இல்லை.
/// இந்திய வரலாற்றில் மோசடி செய்த முதலாளி ஒருவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது ஓரே ஒருமுறதான் நடந்தது ! ///
அப்ப சத்யம் ராமலிங்க ராஜு, சஹாரா சுப்ரதோ ராய், சுரங்க அதிபர்கள் ரெட்டி சகோதரர்கள் இவர்கள் எல்லாம் தொழில் அதிபர்கள் இல்லையா?
இளைய தலைமுறை திரையரங்குகளிலும் டாஸ்மாக்கிலும் விழுந்து கிடக்கிறது அய்யா.
Post a Comment