Sunday, May 24, 2015

எல்.ஐ.சி சங்கமும்,

சமையல் எரிவாயுவும் ...!!!

1972ம் ஆண்டாக இருக்கலாம் ! மதுரை மாவட்ட கூட்டுறவுபண்டகசாலை மேற்கு வெளிவீதி- வடக்கு வெளிவீதி சந்திப்ப்பில் ,பெரிய பொஸ்ட்டாஈசுக்கு எதிரில் இருந்த அழகப்பன் ஹாலில் இருந்தது ! 

முதன் முதலாக மின் பற்றாக்குறை வந்து பல தொழில்கள் உற்பத்தியில் சுணக்கம் ஏற்பட்டதும் அப்போது தான் !  ஏரும் விலைவாசியை கட்டுப்படுத்த பண்டக சாலை மூலமாக நியாயமான விலையில்  அத்தியாவசிய பொருட்கள வழங்க ஆரம்பித்தார்கள் !

எல்.ஐ.சி ஊழியர்களிடையே  சினி தட்டுப்படு பெரிய பிரச்சினையாக எழுந்தது ! சங்கதலைமை தலையிட்டு செயல்வீரர்கள்   மூலம்  எதிர்கொள்ள முடிவு செய்தது ! 

மாவட்ட கூட்டுற்வு இயக்குனர் மதுரை வந்த போது அவரை சந்தித்தனர் !  மாதம் இரண்டு மூடை சீனி நியாய்விலையில்கொடுக்கப்படும் ! அதனை ஊழியர்கள் பங்கு வைத்து எடுத்துக்கொள்ளலாம என்று முடிவாகியது ! 

அதே போல் மண் எண்ணை யும் வினியோகமானது !  தொழிற்சங்கம் இதனை செய்வது சரியா

 என்ற கேள்வி எழுப்பப்பட்டு  விவாதிக்கப்பட்டது ! 

உழியர்களின் நலன் தான் முக்கியம் ! அவர்களின் அன்றாட பிர்ச்சினைகளுக்கும் நிவாரணம் பெற்று தரவேண்டியது சங்கத்தின் கடமைகளீல் ஒன்றூ ! ஆகவே சரிதான் !

அதுமட்டுமல்லாமல் இந்த நடவ்டிக்கை சங்க உருப்பினர்களிங்குடுமப் உறுப்பினர்களீன் ஏகோபித்த ஆதரவையும் சங்கத்தின் பால்திருப்பியதும் முக்கியமானதாகும் !

இந்த சமயத்தில் தான் செய்தி ஒன்ரு டெல்லியிலிருந்து வந்தது ! வரும் பட்ஜெட்டில் சமயலெரிவாயுவிற்கான "சிலிண்டர்' வைப்பு பனம் 30/- ரூ லிருந்து 50 /-ரூ யாக்கப்பொகிறார்கள் என்று அறிவிக்கப்படும் என்பது தான் அது ! பிப்ரவ்ரி மாதம்20 தேதி செய்தி வந்தது ! அப்போது எரிவாயு வினியோகம் கூட்டுறவு பண்டக சலையுடன் இருந்தது ! 

செயல் வீரர்கள் மீண்டும் இயக்குனரை சந்தித்தனர் ! ஊழியர்கள் எரிவாயு வேண்டும் என்று வெகுவாக ஆசைப்பட்டனர் ! எரிவாயு அடுப்பு, குக்கர், சிலீண்டர், ஸ்டாண்டு என்று எல்லாவற்றுக்கும்  பணம் வேண்டுமே ! வங்கியில் கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது ! 

நானும் அப்பொதுதான் வங்கினேன் ! குஜரத்தில் செய்த "லக்ஷ்மி "அடுப்பு, குக்கர், ஸ்டாண்டு, ரப்பர் கனெக்டர், என்று வாங்கினேன் ! சிலிண்டர் வைப்பு பணம் 30 /-ரூ செர்த்துமொத்தம் 207 /-ரூ ஆனது 

காஸ் விலை 12.50 காசு !

கிட்டத்தட்ட 40 வருடம் ஆகிவிட்டது !  

திமுக,அதிமுக ஆட்சி மாறி மாறி வந்தது !

மத்தியில் காங்கிரஸ் பாஜக வந்தது ! 

சிலிண்டர் வப்பு பணம் 1800/-ரூகட்டியுள்ளேன்

இந்தமாதம் எரிவாயு வாங்கினேன் ! 

ஆதார் அட்டை,வங்கி கணக்கு எல்லாக்க்கழுதையும் கொடுத்து விட்டேன் !

சிலிண்டர் கொண்டு வந்த பையன் பில்லை கொடுத்தான் !

706 /-ரூ என்று இருந்தது !

கொடுத்தேன் !!!

1 comments:

www.eraaedwin.com said...

பொறாமையா இருக்கு தோழர்