எங்கே அவர்கள்........?
அவர் எனக்குமிகவும் நெருங்கிய நண்பர் ! தமிழக அரசுப்பணியில் இருந்தார் . அவருடைய மகள் மிகவும்புத்திசாலி . +2 தேர்வில் 1140 க்கும் அதிக மாக மதிப்பெண் பெற்றவர்.
B.Sc (Maths) அந்த குழந்தை விரும்பியது.மதுரையின் முக்கியகல்லூரிகளில் இரண்டு அவருக்கு இடம் கொடுத்தது .
நானும் அவரும் வசித்த குடியிருப்புகளின் அருகில் தான் "பாத்திமா "கல்லூரி இருந்தது.! நல்ல கல்லூரி.மகள்போக்குவரத்துக்கு சிரமப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் நண்பர் அங்கு சேர்க்க விரும்பினார்.
பாத்திமா கல்லூரி கணிதப் பெராசிரியை எங்கள் குடியிருப்பில் இருந்தார். என் துனைவியாருக்கு அவர் பழக்கம். அவர் மூலம் அந்த கல்லூரியில் சேர்ர்க்க முயற்சி செய்ய வேண்டினார்.
நண்பரின் தந்தை தமிழகம் அறிந்த பிரபலமான அரசியல் தலைவர்! " ஏன்யா 1 உங்க அப்பாவை விடவா நான் பெரியவன் ? அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே " என்றென்.
"வே ! இஷ்டம் நா செய்யும். ! வேறு பேச்சு வேண்டாம் ! " என்று கொபமாக கூறிவிட்டார்.என் மனைவி மூலமாகபெராசிரியையை அணுகினேன் !
" ஏம்மா ! அந்த பெண்ணொட தாத்தா எம்.பி யாமே . அவர் ஒருவார்த்தை சொன்னால் --அது கூட வேண்டாம்நீங்கள்யாரவதுநிர்வாகத்திடம்அவங்கதாத்தாஎம்பிசொன்னாலேபொதும்இடம்கிடைக்குமே " என்று பெராசிரியை கூறியதாக என் மனைவி சொன்னார்.
நானே நிர்வாகத்திற்குபோன் பண்ணலாமா என்று நினைத்தேன்.பிறகு பெரிய இடத்து விஷயமென்று விட்டு விட்டென் ,
இருந்தாலும் மனது கேட்கவில்லை ! நான் பணியாற்றும் "தீக்கதிர்" அலுவலக பொது மெலாளர் அப்துல் வஹாப் அவர்களிடம் சோன்னேன் ! அவர் சுதந்திர போராட்ட வீரர். அரசியல் வாதி.
"சாமா ! நீ அவங்க கிட்ட எதவது உறுதியா சொல்லி இருக்கியா? " என்று கேட்டார்
"இல்லை. அத்தா "
"நாளை எம்பி வருகிறார் ! பாப்பம் "
மறு நாள் அத்தா எதுவும் சொல்லவில்லை! இரண்டு நாள் கழித்து அத்தா" அந்த காலெஜ் சீட்டு..."
என்று இழுத்தேன் !
"நல்ல வேளை ! தோழர் ! எம்.பி கிட்ட கேட்டென். என்ன சொன்னர் தெரியுமா ? "
"என்ன சோன்னார் அத்தா ?"
"வே ! கட்சி என்னை எம்.பி ஆக்கினது எம்பேத்திக்கு காலெஜுல சீட்வாங்கவா ! அத்தா வேற வேலை இருந்தா பாரும் " நு நச்சுனு சொல்லிபுட்டாரு" என்றார் 1
அந்த எம்.பி யின் பெயர்
A.நல்ல சிவம் .
2 comments:
நல்ல சிவம் அவர்.
இப்போதும் எழுந்து நின்று அவரை வணாங்கிக் கொள்கிறேன்
இதுபோன்ற மனிதர்களும் இருந்திருக்கிறார்கள் என்னும் போது
தலை தாழ்ந்து வணங்கத்தான் தோன்றுகிறது
Post a Comment