Monday, July 27, 2015

ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் 

மறைந்தார்.....!



ஏ.பீ.ஜெ அப்துல்கலாம் மறைந்தார் . 

1998ம் ஆண்டு போக்ரான் பாலைவனத்திலிருந்து "புத்தன் சிரித்தான் " என்ற தகவல் அன்றய பிரதமர் வாஜ்பாய் அவர்களூக்கு வந்து "இந்தியா இரண்டாவதுமுறை "அணுகுண்டு சொதனை நடத்தியது ! ஆனானப்பட்ட அமெரிக்கா கூட அதனை கண்டு கொள்ளாமல் ரகசியமாக நடத்திக்காட்டிய விஞ்ஞானி அவர்.


தமிழகத்தைச்சேர்ந்த அவர் ராமெஸ்வரத்தில் ஒரு சாதரணகுடும்பத்தில் பிறந்தவர். ராமேஸ்வரத்தில் 

மார்க்சிஸ் கட்சியின் தாலூகா செயலாளராக இருந்த "ஆவுல் நாயனாவின்" நெருங்கிய உறவினர் . 


ஒரு முறை (1992) மதுரை வந்திருந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்தார். தீக்கதிர் பத்திரிகையின் சார்பில் தோழர் "தீக்கதிர் " நாராயணன் அவர்கள் சென்றிருந்தார்கள். மிகவும் வித்தியாசமான கேள்வியை அந்த ஏவுகணை விஞ்ஞானியிடம்கேட்டார்.


"வால்மீகி ராமாயணத்தில் " ராவணன்  சீதயை புஷ்பக விமானத்தில் கொண்டு செல்வதாக உள்ளது .அந்த புராணகாலத்தில் விமானம் இருந்திருக்க முடியுமா? ' என்று கேட்டார்.


"புராணகாலத்து மனிதனுக்கும் பறவையைப் பொல பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் 1 வால்மிகி என்ற கவிஞனுக்கும் இருந்திருகலாம் அல்லவா ! அவன் தன் படைப்பில் மனிதன் பறப்பதாக கற்பனை செய்திருப்பதன் பலன் தான் றைட் சகொதரர்களின் வெற்றிக்கான முதல் படி . விமானம் அன்றே இருந்ததா என்று சிந்திப்பது சரியல்ல. பறக்க வேண்டும் என்ற மனித குலத்தின் சிந்தனை அன்றே தோன்றிவிட்டதின் அறிகுறியே வால்மீகியின் கவிதை வரிகள்." என்றார்.


அவர் விஞ்ஞானி மட்டுமல்ல.  ஆசிரியரும் கூட. ஷில்லாங்கில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி உயிரிழந்தவர் .


அந்த மாமனிதருக்கு அஞ்சலி !!!

2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

எனது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா

”தளிர் சுரேஷ்” said...

மாபெரும் மனிதர் ஜோதியில் கலந்தார்! ஆழ்ந்த இரங்கல்கள்!