Monday, September 21, 2015

இந்த இந்தி காரன் படுத்தற பாடு ...?




இந்தி மேல எனக்கு என்ன வெறுப்பு . 1947 -48ல் "  பச்சொங்கி கிதாப் " படிச்சவன் தான் நான் ."  மங்க்னே ஹம்கு ஜன்ம தியாஹை . உசிகா தூத் பீ கர் ஹம படே ஹுவே  ஹைம் " நு பாடம் படிச்சவன் தான் .  

1957 ல் ஹைதிராபாத் வரும் பொது நான் எழுதர தபால்கார்டுல பின் பக்கம் " do not impose Hindi " நு பிரிண்ட் பண்ணி தான்  தபால் எழுதுவேன்.. 

விஷயம் இப்போ ரொம்ப மாறி போச்சு.இந்தி திணிப்பை எதுக்கேன் .இன்னிக்கும். அது சரிதான். இந்த இந்திக்காரங்க அநியாயத்துக்கு புளுகும் போது தங்கல .

உள்துறை அமைசருக்கு மண்டைல ஒண்ணும் இல்லை .பாத்தால  தெரியும்.
பிரதமருக்கு என்ன வந்தது.?

இந்திய கொண்டுவரலை நா " துளசி தாசரோட ராம சரிதா மனஸ் என்ற இந்தி நுலை  படிக்க முடியாம போகும் "காரு .

"வே ! ராம சரித மனஸ்  இந்தில எழுதல வே ! அது "அவதி " ங்கர மொழில எழுதப்பட்டது. 

 .2011 ம் ஆண்டு மக்கள் கணக்கெடுப்புல 60 லட்சம் பேரு தாய் மொழி  "
அவதி "நு அறிவிச்சிருக்காங்க !

இவங்க   கொண்டாடர இன்னொருத்தர் சூர் தாஸ் . அவரு கிருஷ்ண பக்தர்  அவருடைய பாடல்கள் இலக்கிய தரம் வாய்தவை . அவரு  இந்தில எழுதல ..
பிருஜ் பாஷா ங்கர மொழில எழுதினாறு .

அப்பம் இந்தி மிழி எப்பம் தான்  வந்திச்சு ?

முகலாயர் ஆட்சி கொஞசம்  கொஞசமா வலுவிழக்கும் போது . கிட்டதட்ட அவுரங்க சிப்  காலத்த ஒட்டி .

1600 -1700 ஆண்டு வாக்குல..


மொகலாயர் காலத்துல தான் சமஸ்கிருதம் உச்சில மீண்டும் வந்தது

அது பெரிய கதை அண்ணாச்சிகளா !!! 

   

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

வரலாற்றினை மறந்து விட்டுப் பேசுகிறார்கள் ஐயா