Tuesday, September 29, 2015

(நாட்டிய நாடகம் )


" குருட்டுக் கிணறு "

(அந்த் கூப் )

 

 

 

அந்த கிரமத்தின்  வரட்சி குடிக்க தண்ணீர் இல்லாத  நிலையை அடைந்தது. . ஏழை ,பணக்காரன், மேல்சாதி கீழ்சாதி என்று பேத மில்லாமல் குடிநீருக்காக தவித்தனர் .

ஐந்து மைல் காட்டுக்குள் சென்று தண்ணிர் கொண்டு வரவேண்டும். யார் என்ன சொல்லியும் சர்க்கார் கிணறு வெட்ட மறுத்துவிட்டது .பாதுகாப்புக்காக பெண்கள் நீரெடுக்க ஒன்றாகவே செல்வார்கள்.

 அந்த கிழவிக்கு அவ்ள் குடிசையின் அருகில் கொஞ்சம் நிலம் இருந்தது. அதில் ஒரு கிணறு வெட்ட வேண்டும் என்று ஆசைப் பட்டாள் .ஒரு சிலரிடம் சொல்லிப் பார்த்தாள் கிறுக்கு பிடிச்சவளே என்று அவமானப் பட்டாள்.

ஒருநாள்  கடப்பாரை, மண் வெட்டி, அள்ளிவர கூடை சகிதம் கிணறு வெட்ட தன்னந்தனியாக புறப்பட்டாள் .

தினம் அரை அடி ஆழம் வெட்டுவாள். இரண்டு மூன்ரு நாளுக்கு பிறகு தான் அவர்கள் கவனித்தார்கள் .சின்ன பிள்ளைகள் குட "கிறுக்கச்சி " என்று கூப்பிட ஆரம்பித்தன.

ஒருமாதம்  ஆகியது.கிட்டத்தட்ட 15 அடி பள்ளம் ஆகியது.

கிழவி தோடர்ந்து தொண்டினாள் . மேலும் ஒருமாதம் ஆகியது .இப்போது 30 அடி . சுக்காம் பாறை வந்தது.. பாறையை நெம்பினால் நீரூத்து கிடைக்கலாம். கிழவி மறுநாள் காலை  பாறையை உடைக்க ஆரம்பித்தாள் . மிகவும் சிரமமாக இருந்தது. 

வெய்யில் இறங்க ஆரம்பித்து விட்டது. .கடப்பாரையால் சுக்கான் பாறையில் ஒரு குத்து விட்டாள் . பாறை பிளந்தது. லேசாக ஈரம் கசிவது போல் உணர்ந்தாள் .

துள்ளி குதித்து மேலே ஏறிய கிழவி "தண்ணிவந்திட்டு -தண்ணீவந்திட்டு " என்று அலறினாள். 

ஊர் ஜனங்கள் கூடிவிட்டனர் இதற்குள் ஊத்திலிருந்து தண்ணிர் பெருக ஆரம்பித்து விட்டது. ஜனங்கள் மகிழ்ச்சியில் கூத்தாடினர் .  கிழவி  கிணற்றில் இறங்க ஆரம்பித்தாள்." இறங்காதே ! அது "கங்கா ஜல் "! தீட்டாகிவிடும் !நாங்கள் பூஜை செய்து உனக்கு எடுத்து தருகிறோம்.! " என்று பூசாரியின் குரல் ஓங்கி கேட்டது.

கிழவி  செய்வதறியாது நின்றாள் .

நெட்டை மரமாய் மற்றவர்களும் நின்றனர் !

 

( மீரா நிருத்திய நிகேதன் என்ற அமைப்பு 40 ஆண்டுகளாக நாகபுரியில் செயல்பட்டு வருகிறது. இந்த நாட்டிய நாடகத்தை அவ்ர்கள் அரங்கேற்றினர்.  மீரா சந்திர சேகரன் . இந்த பள்ளியின் இயக்குனராவார்>காஸ்யபனின் சகோதரியின் மகள் தான் மீரா அவர்கள் )

 

 

 

 

 

 



 

 

 

0 comments: