Thursday, September 24, 2015

கண் புரை நோய் அறுவை சிகிச்சையும் ,

தமிழகமும்..............!!!



எழுத்தாளரும் மொழிபெயர்பாளருமான முத்துமீனாட்சி அவர்களுக்கு கண் புரை அறுவை சிகிச்சைநடந்தது. உதவியாளனாக நானும் சென்றிருந்தேன்..

தனியார் மருத்துவ மனை. நகரத்தில் பிரபலமானதும் கூட.

அவர்கள் உடனடியாக ஒரு அச்சடித்த தாளை கொடுத்து பூர்த்தி செய்து தரச்சொன்னார்கள்.அது இந்தி மொழியில இருந்தது.நான் முத்து மீனாட்சி அவர்களிம் கொடுத்து  எழதச்சொன்னேன். அவர் வாங்கி பார்த்து விட்டு ' "இது இந்தி அல்ல. மராட்டிய மொழியில் உள்ளது " என்று கூறி  திருப்பி தந்துவிட்டார்..

பெரிய டாக்டர் வந்ததும் அவரிடம் விஷயத்தை சொல்லி ஆங்கில மொழி தாளை கொடுக்கும் படி கேட்டென்.. அவர் செவிலியரை அழைத்து எனக்கு உதவச் சொன்னார்.

அந்த அம்மையார் மராட்டிய மொழி கேள்விகளை மொழி பெயர்க்க நான் பதில்களை எழுதினேன்.
அவர்களிடம் ஆங்கில படிவங்கள் இல்லை . பெரிய மருத்துவ மனைகளில் கூட ஆங்கில  படிவங்கள் இல்லை.

மாதா மாதம் வரும் மின்கட்டண  படிவமும் மராட்டிய மொழியில் தான் வருகிறது.சந்தேகம் வந்தால் அடுத்தவீட்டு மராட்டிய நண்பரின் உதவியை நாட வேண்டியதுள்ளது..

நண்பரிடம் கேட்டேன் ."ஏ ன் ஆங்கிலத்திலும் அச்சடித்தால் என்ன? என்று கேட்டேன்.

"ஆங்கிலேயனை விரட்டி விட்டோம். அவன் மொழியை ..." என்று இழுத்தார்.
இருந்தாலும் மராத்தி எங்கள் தாய்  மொழி அல்லவா. அதற்கு முதலிடம்"
தமிழர்கள் ஆங்கிலத்தில் கெட்டிக்காரர்களாக இருக்கிறிர்கள் " என்றார்.

பெருமையாக இருந்தது.

அடுத்து அவர்கேட்டார்" தமிழ் நாட்டில் பள்ளிகளில் ஆங்கிலம் . கட்டாய மாமே ?"
"ஆமாம்"
"பள்ளிகளில்  தமிழ் பேசினால் அடிப்பார்களா மே "

எனக்கு என்ன கிறுக்கா புடிச்சிருக்கு பதில்  சொல்ல !

என்னண்ணே நான் சொல்லுது !!!

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

மராட்டியர்களுக்கு ஒரு வணக்கம்