"அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் "
"அவிகளும் தனியா நின்னதாக
வரலாறு இல்லை ...!!!"
காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு மிக்க இளைஞராக இருந்தவர் அவர். காமராஜர்,மற்றும் இந்திராகாந்தி அம்மையாரின் அபிமனத்தையும் பெ ற்றவர்.
காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் ஆட்சியை பிடித்தால் காவல் துறை அமைசராக வருவார் என்று எதிர்பார்க்கும் அளவுக்கு பிரபலமானவர்.
காமராஜருக்கு பிறகு கருத்து வேறுபாடு காரணமாக தனிகட்சி ஆரம்பித்தார்
மதுரையில் உள்ள பத்திரிகை நிருபர்கள் பலருடன் எனக்கு நெருக்கமான பழக்கம் உண்டு. அந்த நிருபர் என்னை மிகவும் நேசிப்பவர்>"ஜி" என்று தான் என்ன அழைப்பார். மிகவும் அந்தரங்கமான விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொள்வார்.
" ஜி ! ஒரு யோசனை சொல்லுங்களேன் "என்றார்.
"என்னப்பா ?"
தனிகட்சி ஆரம்பித்த அந்த பழைய காங்கிரஸ் தலைவர் அவரிடம் ஒரு கோரிக்கை வைத்தாராம் . "உங்களுக்கு தான் மார்க்சிஸ்ட் கட்சி செய்லாளர் எ.பாலசுப்பிரமணியம் அவர்களை தெரியுமே ! அவரை சந்திக்க ஏற்பாடு செய்ய முடியோமா ? "என்று கேட்டிருக்கிறார் .
"உனக்கு என்ன வந்தது ?"
"இல்லை ஜி ! அவரு பழைய காங்கிரஸ் காரரு"
"இந்த பாரு ! இதெல்லாம் பெரிய இடத்து விஷயம் . சந்திக்க ஏற்ப்பட்டு செய்யறதுல உனக்கு என்ன நஷ்டம் "
அவர்கள் இருவரும் சந்தித்தனர் !
1977 ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தலில் அண்ணா திமுக, ,மார்க்ஸ்சிஸ்ட் கட்சி, பார்வர்டு ப்ளாக் கட்சி கூட்டணி உருவாக்கி எம்.ஜி ஆர் அவர்கள்முதன் முதலாக முதலமைச்சரானார். (அதிமுக 138 ,மார்க்சிஸ்ட் 12,பா.பி 1 சுயேச்சை 1 )
அடுத்து 1980 தேர்தலில் அதிமுக 129,மார்க்சிஸ்ட் 11 இடங்களை பெற்றது..
1989ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காங்கிரஸோடு சேர்ந்தது..
மதுரையில் இந்த கூட்டணிக்கு முதல்கட்ட பேச்சு வார்த்தையை துவக்கியவர்
இன்று முதுபெரும் தலைவரான பழ.நெடுமாறன் அவர்கள்.
அந்த நிருபர் "தீக்கதிர்" நாராயணன் ஆவார்.
(இந்த தேர்தலில் எம் ஜி ஆர் அவர்களீன் வேட்புமனுவை முன் மொழிந்தவர் எங்கள் என்.நன்மாறன் ஆவார் )
1 comments:
/// 1989ம் ஆண்டு தேர்தலில் அதிமுக காங்கிரஸோடு சேர்ந்தது.. ///
தவறு. 89ல் ஜே அணி, ஜா அணி (+ சிவாஜி கட்சி), திமுக, காங்கிரஸ் (மூப்பனார் தலைமை) என்று 4 முனைப் போட்டி ஏற்பட்டு திமுக வென்றது. அதிமுகவோடு ஒரு கம்யூனிஸ்டும், திமுகவோடு இன்னொரு கம்யூனிஸ்டும் கூட்டணி என்ற கூத்தும் நடந்தது. (ஜெயலலிதா ஆதரவு பெற்ற கேடிகே தங்கமணிக்கு வாக்களியுங்கள் என்ற போஸ்டரைப் பார்த்து திமுக தொண்டர்களே வருத்தப்பட்டார்கள்.. கேடிகே எவ்வளவு பெரிய ஆள்... ஜெ ஆதரவு பெற்ற கேடிகே-யாம் என்று).
இதில் ஜெ அணி, காங் இரண்டும் இருவத்தி சொச்சம் சீட்டு பெற்றன. பின்னர் காங்கிரஸ் தலைமை மாற்றப்பட்டு, வாயப்பாடி தலைமை எற்றார். அதற்குள் அதிமுக அணிகள் ஒன்றுபட்டு மீண்டும் இரட்டை இலை பெற்றன. உடனே கலைஞர் ஆட்சியைக் கலைத்து, 91ல் வந்த தேர்தலில்தான் ஒன்றுபட்ட அதிமுகவோடு காங்கிரஸ் மீண்டும் கூட்டணி வைத்து, அந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியும் பெற்றது.
Post a Comment