Sunday, May 15, 2016





570கோடி -கண்டெய்னர் நு 

புலம்பாதீங்க சாமிகளா ?






1971ம் ஆண்டு . டெல்லி விமான நிலையத்துல சஞ்சய் காந்தி கிட்ட 60லட்சம் ரூயை கொடுக்க வந்த நகர்வாலா ங்கிரவன   போலீஸ் பிடிச்சுது.

அப்பம் அது ஸ்டேட் பாங்கு பணம் னுதான் சொன்னாங்க . 

நகர்வாலா ஸ்டேட் வங்கி அதிகாரி மல்கோத்ராகிட்ட மோசடியா 60லட்சம் ரூ வாங்கிபுட்டா று நு கேசு. 

ஸ்டேட் வங்கி    அதிகாரி மல்கோத்ரா "ஆமாம் ஆமாம் " நு மண்டய ஆட்டினாறு . 

கைது செய்ப்பட்ட நகர்வாலா மர்மமான முறைல செத்தாரு.

 அத விசாரிக்க வந்த டி ஸ் பி  காஸ்யப ஆக்ரா ரோட்ல லாரி மோதி செத்தாரு. 

அதகேக்கவந்த ராமநாதன் ங்கிற போலிஸ் அதிகாரி விபத்துல இறந்தாரு. 

ஸ்டேட்பாங்கு அதிகாரி மல்கோத்ரா வேலையே விட்டு புட்டு மாருதி கம்பெனில பெரிய அதிகாரியா போயிட்டாரு .

டில்லி பட்டண  பாங்கியிலே 
கொள்ளை போன 60லட்சம் 
கள்ளப்பணமா ? வெள்ளைபணமா?
காங்கிரஸ்காரன் கொள்ளைப்பணமா ?
டில்லி ராணியே இந்திராவே 
அல்லி  ராணியே என்ன பதில் ? 

என்று தணீகைசெல்வன் எழுதிய கவிதையை  கோஷமாக போட்டுக்கொண்டு நாங்கள் மதுரை நான்கு மாசிவீதியிலும் ஊர்வலமாக போனதுதான் மிச்சம்  சாமிகளா !!!



1 comments:

சிவகுமாரன் said...

வயிறு எரிகிறது அய்யா.