skip to main |
skip to sidebar
மாணிக் சர்க்கார் என்ற
அந்த மாணவர் ......!!!
பிமன் பாசு , சியாமள் சக்ரவர்த்தி, நிருபம் சென் , சுபாஷ் சக்ரவர்த்தி என்று இன்றைய மேற்கு வங்க அரசியல் நட்சத்திரங்கள் கல்லூரி, பள்ளீ மாணவர்களாக இருந்த காலம் அது .
பஞ்சாப், டெல்லி,திரிபுரா ,கேரளம் ,தமிழ்நாடு என்று மாணவர் அமைப்புகள் இருந்தன.அவற்றை ஒருங்கிணைத்து இந்திய மாணவர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கும் யோசனை வந்தது.
பல்வேறு மாநிலத்தில் உள்ள மாணவர்களின் பிரதிநிதிகளை அழைத்து ஆலோசிக்க கலகத்தாவில் 1970ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு கூட்டம் நடந்தது .கேரளத்திலிருந்து பாஸ்கரன்,திரிபுராவிலிருந்து மாணிக் சர்க்கார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழ்நாட்டில் தமிழக மாணவர் சங்கம் என்று ஒரு அமைப்பு இருந்தது. அதன் மாநில தலைவராக பழநியை சேர்ந்த ராமசாமி என்ற மாணவன் இருந்தார் .மாநில செயலாளராக தியாகராஜர் கல்லூரியில் B .sc மாணவரான நாராயணன் (தீக்கதிர் நாராயணன் ) இருந்தார்.மாணவரமைப்பை செயற்குழு உறுப்பினர் K .முத்தையா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள்.
கல்கத்தா கூட்டத்திற்கு K.M தலைமையில் இந்த இருவரும் சென்றார்கள். இது பற்றி தோழர் நாராயணன் சொல்கிறார்.
"விடலை கல்லூரி மாணவனாக நான் அங்கு சென்றேன். பிமன் பாசுவும் ,மற்றவர்களும் அகில இந்திய தலைவர்களோடு சரிசமமாக விவாதிப்பதையும் ,பேசுவதையும் கண்டு நான் பிரமித்து விட்டேன். ஒரு வகையில் தாழ்வு மனப்பன்மை வந்து விட்டதோ என்று அஞ்சினேன்."என்கிறார்.
"அகில இந்திய அமைப்பினை உருவாக்குவது என்ற முடிவோடு நாங்கள் திரும்பினோம். இந்திய மாணவர் சங்கம் என்ற அமைப்பை உருவாக்கவும் அதன் முதல் மாநாட்டை திருவனந்தபுரத்தில் நடத்தவும் பல்வேறு மட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இறுதி முடிவு எடுக்க மாணவர்கள் அக்டோபர் மாதம் மீண்டும் கல்கத்தா அழைக்கப்பட்டர்கள். "
இதற்கிடையே தமிழக் மாணவர் அமைப்பின் தலைவராக இருந்த ராமசாமி நக்சலைட் சார்பு கொண்டவராக மாறியதால் அவர் விடுவிக்கப்பட்டார். மீண்டும் K . M அவர்களும் நாராயணனும் கழகத்தா சென்றார்கள்.
"நாங்கள் கல்கத்தாவில் கிட்டத்தட்ட பதினைந்து நாட்கள் தங்க வேண்டியதாயிற்று. மாநாட்டு,நிகழ்ச்சிநிரல், அறிக்கை என்று விவாதித்தோம். மாலை நான்குமணிக்கு மேல் எங்களை விட்டு விடுவார்கள். நான் தாழ்வு மனப்பான்மையில் இருப்பதை மாணிக்சர்க்கார் என்ற திரிபுரா மாணவர் கவனித்திருக்கிறார்.தினம் என்னோடு ஒரூ மணி நேரமாவது பேசுவார்.மாலை நேரத்தில் இருவரும் கைலியை கட்டிக்கொண்டு கல்கத்தா நகரத்து விதிகளில் நடப்போம் . வரலாறு, தத்துவம், கட்சி திட்டம், சுதந்திர போராட்டம் என்று எனக்கு கற்றுத்தருவார் " என்கிறார் நாராயணன்.
திருவனந்தபுரம் மாநாட்டிற்கு செல்லும் நேரம் வந்தது.அப்போது தீக்கதிர் அலுவலகத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தேன் . ஒருநாள் K .M அவர்களும் ,A .பாலசுப்பிரமணியம் அவர்களும் என்னை அழைத்தார்கள்."மாணவர் அமைப்பின் முழுநேர ஊழியராக நீ டெல்லி செல்ல வேண்டும். அல்லது மதுரை தீக்கதிரில் முழுநேர ஊழியராக செயல்படலாம். மாணவர் இயக்கத்திற்கு ஆள் கிடப்பது எளிது. பயிற்சி பெற்ற உன் போன்றவர்கள் தீக்கதிருக்கு கிடப்பது எளிதல்ல. நாங்கள் உன்னை வற்புறுத்தவில்லைஉனக்கு எது சரி என்று படுகிறதோ அதை முடிவு செய்து கொள் என்றார்கள்.. திருவனந்தபுரம் மாநாட்டிற்கு செல்லவும் அனுமதித்தாரகள்."
மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பாக தோழர் N .ராம் அகில இந்திய துணைதலைவராக தேர்ந்தடுக்கப்பட்டார்.
இறிதி நாளில் மாணிக் சர்க்கார் கைகளைக்குலுக்கி விடை பெறும் பொது என் கண் கலங்கியதைப்பர்த்து
"We will meet again " என்றார்.
முதலமைச்சராக சில ஆண்டுகளுக்கு முன்னால் வந்த பொது என் மகள்களையும் அழைத்துச் என்று பார்த்தேன்.
இயக்கத்தில் அவர்களும் செயல்படுவது கேட்டு
வாழ்த்தினார் .!!!
0 comments:
Post a Comment