skip to main |
skip to sidebar
"கச்சத் தீவும் "
கருணாநிதியும் .....!!!
1974ம் ஆண்டு இந்தியா போக்ரானில் அணுகுண்டு வெடித்து சோதனை வெற்றிகரமாக நடத்தியபோது உலகம் வியந்தது. அமெரிக்காவும் பிரி ட்டனும் மட்டும் ஆத்திரத்தில் கொந்தளித்தது. தங்களைமீறிய இந்தியாவை தண்டிக்க விரும்பியது.
ஐ.நா வின் பாதுகப்பு சபையை கூட்டி பொருளதார தடை விதிக்க ஏற்பாடு செய்தது. பாதுகாப்பு சபையில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் உண்டு ,தவிர பதினைந்து தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் உண்டு.ஐநா பாதுகாப்பு சபைகூடங்களுக்கு மாதம் ஒருவராக முறைவைத்து தலைமை தாங்குவார்கள். இந்த குறிப்பிட்ட மாதம் இலங்கையின் முறை.
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் அப்போது அவ்வளவு சீரிய உறவு இல்லை . 71ம் ஆண்டு நடந்த வங்கதேச விடுதலைபோரில் கராச்சியிலிருந்து அரபிக்கடல்,இந்துமாகடல் ,வங்காளவிரிகுடா தண்டி டாக்க செல்லும் அளவுக்கு பாகிஸ்தானிடம் விமானம் இல்லை .அதனால் கொழும்பில் இறங்கி எரிபொருள் நிரப்பிக்கொண்டு செல்ல இலங்கை அனுமத்திதது . இது இந்தியாவின் கோபத்திற்கு காரணம்
இலங்கையில் சிறிமாவோ பண்டார நாயகா பிரதமராக இருந்தார் அரசியல் ரீதியாக அவருடைய செல்வாக்கு மங்கி இருந்த நேரம். செல்வாக்கை உயர்த்த அவருக்கு தேவை இருந்தது.
இந்திரா அம்மையாருக்கு இலங்கையின் ஆதரவு வேண்டி இருந்தது ! இருவரும் கலந்து பேசினர்.
கச்சத்தீவு இலங்கைக்கு என்று பேரம் முடிந்தது.
இந்திய எல்லைக்கு உட்பட்ட நிலத்தை அரசியல் தலைவர்கள் இப்படி பேரம் பேசுவார்கள் என்று அறிந்த அண்ணல் அம்பேத்கர் அதனைத்தடுக்கும் விதமாக அரசியல் சட்டத்தில்சிலதடைகளை வ்வைத்திருந்தார்.
ராமநாதபுரம் சமஸ்தானம் இந்தியாவோடு இணைந்தபோது அதன் பாத்தியதைக்கு உட்பட்ட கச்சத்தீவி போன்ற சிறு நிலப்பகுதிகள் இந்தியாவோடு சேர்ந்தது.அந்த ஆவணங்கள் எல்லாம் டெல்லி வசம் சென்றது. சட்ட பூர்வமாக கச்சத்தீவை விட்டுக் கொடுக்க முடியாது.
சட்ட "வல்லூறுகள்" மண்டையை குழப்பிக் கொண்டன. கச்ச்த்தீவு இந்தயாவுக்கா இலங்கைக்கா என்று சர்ச்சை உள்ளது அதனால் அது ஒரு "disputed tritory " அதனால் அதனை அரசியல்சட்டம்தடுக்கமுடியாது என்று சாதித்தனர்.
நாடளுமன்றத்தில் விவாதம் வந்தது. திமு.க உறுப்பினர் நாஞசில் மனோகரன் இதனை கடுமையாக எதிர்த்தார். தமிழகத்திலும் எதிர்ப்பு கிளம்பியது.
அப்போது தான் எம்.ஜி.ஆர் அவ்ர்கள் கருணாநிதி மிது ஊழல் குற்றச் சாட்டுகளை வீசி இருந்தார்.
இந்திரா அம்மையார் சர்தார் சவரன் சிங்கை தமிழகம் அனுப்பி கருணாநிதியிடம் பேசவைத்தார்.
ஸ்வரண் சிங் மிகச்சிறந்த negotiater .
எம்ஜி ஆர் கொடுத்த புகாரில் மிகவும் முக்கியமானது வீராணம் குழாய் பதிப்பு திட்டம் . பலகோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு அதுமட்டுமல்லாமல் காண்ட்ராக்ட் எடுத்த சத்யநாராயணா மர்மமான முறையில் இறந்துவிட்டார்.
சவரன் சிங் கச்சத்தீவி பற்றி கருணாநிதியோடு ஒரு வார்த்தை பேசவில்லை . மாறாக எம்.ஜி.ஆர் புகார் , வீ ராணம் திட்டம் ஆகியவை பற்றி பேசினார்.
கருணா நிதி ராஜ தந்திரி !
புரிந்து கொண்டார் .
விராணம் ஊழலா ? கச்சத் தீவா ? என்ற கேள்விக்கு விடை காண வேண்டிய தருணம் வந்துவிட்டதை உணர்நதவர்
கச்சத் தீவை கைகழுவி விட்டார்.
1 comments:
அடேங்கப்பா.
இன்னும் எவ்வளவு விவரங்கள் வைத்திரிக்கிறீர்கள்? தகவல் சுரங்கம் அய்யா நீங்கள்.
Post a Comment