skip to main |
skip to sidebar
நெஞ்சை நிமிர்த்து !
நாம் வெல்வோம் ...!!!
தாடிக்கார ராஜ நாயகம், நக்கீரன்,என்.டி.டிவி . நு சகட்டு மேனிக்கு கருத்து கணிப்புகள் சன் டிவி ல வந்துகிட்டிருக்கு.நாளைக்கு இன்னும் அதிகமா வரும்.
நிலைமை அப்படி இல்லை என்பது தெளிவு . மதுரைல "அண்ணன்" கூட்டம் போட்டிருக்காரு . உங்க தோதுக்கு வாக்கு போடுங்கப்பா நு சொல்லிபுட்டாரு .
யதார்த்தமான நிலைமை நல்லாவே இருக்கு .இந்த வருடம் 18 வயதானவங்க 20 லட்சம் பேரு வாக்காளர்களாக பதிஞசிருக்காங்க.
கடந்த ஏழு எட்டு வருடமா 18 வய்துலேருந்து 24 வயது வரை பதிஞ்சவங்க மட்டும் மொத்த வாக்காளர்களல 23% நு கணக்கிடறாங்க.
இவங்களுக்கு திராவிட இயக்கம் நா "தி.மு.க " "அ . தி.மு.க" தான் தெரியும். சென்ற ஜனவரி மாதம் நான் சென்னை வந்திருந்தேன் .
20 வயது பையன் - நண்பர் மகன் - "சார் ! பெரியார் பூமி ! பெரியார் பெரியார் நு எதுக்கெடுத்தாலும் சொல்றானகளெ ! அவரு என்ன தான் சார் செய்தாறு" நு கேட்டான் .
சமூக நீதிக்காக அவர் செய்ததை சொன்னேன்"இன்னிக்கி தலித் மக்கள் கொஞ்சமாவது நல்லா இருக்காங்க நா அதுக்கு அவரும் காரணம்" நு சொன்னேன்
With a derisive smile "ஆணவக்கொலைகளையும் சேத்துக்கவா ? சார் "
"நீ சொல்றது நியாயம் தான் தம்பி. மற்ற மாநிலங்களல உள்ள நிலைமைக்கு தமிழ்நாடு பரவா இல்ல . அங்க தலித்துகள் மனிதர்களாகவே மதிக்கப்படுவதுவதில்ல மத்தியபிரதேசம் ராஜஸ்தான் அரியானா நினச்சுப்பாக்கமுடியாது தம்பி. தலித் பெண்கள் பெண்டாள ப்படுவார்கள்.அண்ணன், அப்பன் என்று எவனும்கேக்கமுடியாது. நடகரதுல ஒரு சதம் தான் பத்திரிகைகளல வரும்."
"நம்ப முடியல சார் "
"நான் சுத்தி இருக்கேன் . பாத்திருக்கேன்,. செருப்பு தேச்சுக்கிட்டு இருகரவன காலால எத்தி உதைப்பான் பாத்திருக்கயா ? சரியா தைக்கலயாம்அத பாக்கும்போது தமிழ்நாடு பாதுகாப்புதான்.அதுக்குகாரணம் இடது சாரிகளின் செங்கொடி இயக்கமும் பெரியாரும் தான் அவ்ங்களொட சமூக நீதி யும் தான்."
இந்த திராவிட இயக்கம் பற்றிய இவர்கள் புரிதல் இன்றைய தி.மு.க.; அதிமுக வோடு சரி.
தி.மு.கவின் ஊழல் , அதிமுக வின் அராஜகம் இரண்டும் இவங்களை அதிர்சியில் ஆழ்த்தியுள்ளது இதற்கு மாற்று வேண்டும் என்று அந்த இளம் மனங்கள் துடிக்கின்றன .
இந்த இரண்டு நாள் - நாம் அதற்காக செலவிட வேண்டும். துடிப்பு மிக்க அவர்களோடு நாம் பேசவேண்டும்.
"Discuss , deliberate , and make them decide to vote for us "
"தோழர்களே ! நெஞ்சை நிமிர்த்துங்கள் !
நிமிர்ந்து நில்லுங்கள் !!
நாம் வெல்வோம் !!!
5 comments:
கண்டிப்பாய் ஓட்டு போடவேண்டும் . ஆனால் நீங்கள் சொல்லும் யாருக்கும் அல்ல.
உங்கள் கவிதைகள் பல சந்தர்ப்பங்களில் எனக்கு உற்சாகமூட்டி உத்வேகமளித்துள்ளன.. ஆம்...உங்கள் கவிதைகள்..... நீங்கள் காகிதத்தை பயன் படுத்தும் வெறும் எழுத்தாளர் மட்டுமே ! போராளியல்லவே ! உங்கள் சிறிய தகப்பனார் பாவம் --- உங்கள் உசிதம் போல் வாக்கு போடுங்கள்
---காஸ்யபன்.
தங்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை அய்யா. சந்தர்ப்பவாத அரசியலால் நொந்து போயிருக்கும் பல பேரில் நானும் ஒருவன். நீங்கள் ஆதரிக்கும் கூட்டனியை வரவேற்றவன் தான் நான் கேப்டன் வரும் வரை.
நான் கட்சி சார்பற்றவன். தங்களின் போராளி இலக்கணத்திற்கு கண்டிப்பாய் நான் உட்பட மாட்டேன்.
இந்த தேர்தலில் NRI வாக்களிக்க வழி செய்திருப்பதாக சொல்கிறார்கள். உண்மையா.
தங்களை புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை அய்யா. சந்தர்ப்பவாத அரசியலால் நொந்து போயிருக்கும் பல பேரில் நானும் ஒருவன். நீங்கள் ஆதரிக்கும் கூட்டனியை வரவேற்றவன் தான் நான் கேப்டன் வரும் வரை.
நான் கட்சி சார்பற்றவன். தங்களின் போராளி இலக்கணத்திற்கு கண்டிப்பாய் நான் உட்பட மாட்டேன்.
Post a Comment