skip to main |
skip to sidebar
"நாங்கள்
இருவரும்......."
குறைந்தது 35 வருடங்களாவது இருக்கும் நாங்கள் இருவரும் சந்தித்து பேச ஆரம்பித்தது . மிகவும் நெருக்கம்.அவர் தஞ்சை மண்டல பட்டுக்கோட்டைகிளையில்எல் .ஐ.சி யி ல்பணியாற்றினார். நான் மதுரை மண்டல எல்.ஐ.சி அலுவலகத்தில் பணியாயாற்றி வந்தேன்.
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தில் இருவருமே செயல்விரர்களாக இருந்தோம். மாநில அளவில் நடக்கும் மாநாடுகள் அத்துணையிலும் சந்திப்போம் .
அவர் த.மு. எ சங்கத்திலும் செயல் படுபவர் .கலைத்துறையிலும் ஈடுபாடு உடையவர்.
ஊர் சுற்றுவதில் பிரியம் கொண்டவர்.திடீர் திடீரென்று குடுமபத்தோடு பல ஊர்களுக்கு சென்று வருவார்.
சென்னையில் ஒருமுறை பார்த்த போது "ஏன்யா ! உலகம் பூறா சுத்தரேறே ! குடும்பத்தோடு மதுரை வந்து எங்க வீட்ல நாலுநாள்தங்குமே ?"என்றேன்.
"அதுக்கென்ன ! செஞ்சுட்டா போசசு "
அவர் குடும்பத்தோடு வர ஏற்பாடு செய்தார்.
அவருடைய துணைவியாருக்கு ஒரு பயம்." நாங்கள் என்ன ஆளுகளோ என்னமோ " அங்கு போய் குண்டக்க மண்டக்க நடந்து கொள்ளக்கூடாது.இரண்டு மகள் ,சின்ன பையன் ! தவறாக பேசிவிட கூடாதல்லவா " இது பற்றி கணவரிடம் பேசி இருக்கிறார். " அதெல்லாம் எனக்கு தெரியாதம்மா ! கேட்டுக்கிறதும் இல்ல ! ஒரு திருநெல்வேலி காராரு. ! சைவ பிள்ளைவாள் னு அனுமானிக்கிறேன் ! என்று கூறி இருக்கிறார்.ஒரு முறை திருசசியில் நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம்.
என்வீட்டில் முத்துமீனாட்சி அவங்க veg ஆ non veg ஆ என்று கேட்ட போது " அவர்கள் ரெட்டியார் என்று நான் அனுமானிக்கிறேன். நானும் அவரும் non veg சாப்பிட்டிருக்கிறோம் " என்று குறிப்பிட்டேன்.
"எனக்கு non veg முடியாது. மிஞ்சி போனா ஆம்லெட் போடறேன் "இல்லை! நீங்க ஹோட்டலுக்கு ஒருநாள் கூட்டிக்கிட்டு போங்க " என்றார் . "பார்த்துக் கொள்ளலாம் " என்று பேசசை முடித்தேன்.
தஞ்சை யிலிருந்து மகள்கள் வைஷ்னவி, லாஷ்க்மி ,அருண் சகிதம் அவர்கள் வந்து இறங்கினர்.
அவர் மனைவி தயங்கிய படியே உள்ளே நுழைந்தார். மகள் வைஷ்ணவி தாயாரிடம் சுவரில்மாட்டியிருந்த படத்தைக்காட்டி ஏதோகிசுகிசுத்தாள்.
"என்னம்மா அம்மாகிட்ட என்ன சொல்றே "
"ஒண்ணுமில்ல ! நீங்க சாப்பிடுவேளோ !இல்லையோ ! கைசுத்து முறுக்கும்,மாலாடுவும்வீட்ல செஞ்சு கொண்டு வந்தேன் ! படத்தைக்காட்டி இவா சாப்பிடுவா அம்மா ! " னு சொல்றாள் .
சுவரில் படத்தில் என்மகள் ஹன்ஸா ஒன்பது கெஜம் புடவையில் கல்யாணக்கோலத்தில் மறு மகன் Dr .ss ராமன் அருகில் நின்று புன்னகைத்துக்கொண்டிருந்தாள் .
Com Ragupathi Red salute to you !!!
1 comments:
சாதி பார்த்து வருவதல்லவே நட்பு...
நல்ல நட்புத்தான்...
Post a Comment