Saturday, July 23, 2016





ஸ்ரீதரின் நாகபுரி 

விஜயம் ........!!!





தமிழ் நாடு முற்போக்கு எழ்த்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை செயலாளர் ஸ்ரீதர்  நாகபுரி வந்திருந்தார். அவருடைய மகள்  செல்வி சூர்யா திருசசி  NIT யில்  இறுதி ஆண்டு M . Tech  படிக்கிறார். நாக்புரியில் உள்ள தேசிய சுற்றுப்புற சூழல் பொறியியல் ஆராய்சசி மையத்தில் ஆறுமாதம் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அவரை கொண்டுவிட ஸ்ரீதர் வந்திருந்தார். 

20-7-16 அன்று இரவு 7 மணிக்கு என் வீட்டிற்கு வந்தார் .இரவு பத்துமணி வரை பேசிக்கொண்டிருந்தோம் . மறுநாள் மகளை தாங்கும் விடுதியில் சேர்த்து விட்டார். 22-ம் தேதிக்கால 10மணிக்கு  வந்தவரோடு மாலை 3 மாணவரை பேசினோம்.    

ஸ்ரீதரை பார்த்தவுடன், SAP யிலிருந்து வேலாயுதம் வரை ,lic  சாந்தாராமிலிருந்து Gic  ரமேஷ் வரை , நன்பர்களை பார்த்த உணர்வுதான் ஏற்பட்டது.

பார்ப்பனீயம் ,பார்ப்பனர் எதிர்ப்பு, பார்ப்பனர் அல்லாத இடைநிலை வகுப்பார் தலித்துகள் மீது நடத்தும் தாக்குதல் , அதற்கு கேடயமாக "மனுநீதியை " சொல்லும் சிலர் என்று பேசினோம். 

இந்திய கம்யூனிஸ்ட் கடசிக்குள் அரசு பற்றிய நிர்ணயிப்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு- ஏகபோகத்தின் தலைமையில் முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவ  ஆடசி என்பதிலிருந்து , தேசிய முதலாளிகளும்,தொழிலாளர்களும் நடத்தும் ஆடசி என்பது வரை விவாதித்தோம் .

இயந்திரமாக்கல், டீசல் மயமாக்கல்,மின்மயமாக்கல், கட்டெய்னரை  எதிர்த்தது பற்றியும், கணிப்பொறி எதிர்த்ததையும் பேசினோம்.

கல்கத்தா  துறைமுகம் தளர்ந்ததையும் சிங்கப்பூர் துறைமுகம் வளர்ந்ததையும்   புரிய முயற்சசித்தோம் . 

முதுமையும் இயலாமையும் என் செயல் திறனை முடக்கி விட்ட நிலையில் ,த.மு எ.க .ச வின் வளர்ச்சி எதிர்கால செயல்பாடு என்று தகவல்களை பரிமாறிக்கொண்டோம்..

"தீட்சா பூமியை "கண்டிப்பாக பார்த்துவாருங்கள் என்று அவரை அனுப்பி வைத்தேன்.

எனக்கு இரண்டு பேரன்கள் . பெயர்த்தி இல்லை. ரயிலில் வரும்போது செல்வி சூர்யா என்னை "தாத்தா " அழைத்த பொது என்கண்கள் கசிந்தது.

"சூர்யா ! உன் பயிற்சி சிறப்பாக முடியும் . மேலும்மேலும் நீ உயர்வடைவாய் கண்ணம்மா !!!"

"வாழ்த்துக்கள் !!!  "


4 comments:

சிவகுமாரன் said...

அய்யா, என் மகனும் இந்த வருடம் திருச்சி NIT இல் B.Tech சேர்கிறான்.
ஆசீர்வதியுங்கள்

kashyapan said...

வாழ்த்துக்கள் ! திருச்சி NIT ல் உலொகவியல் துறை பேராசிரியராக டாக்டர்.எஸ்.எஸ் . ராமன் இருக்கிறார். அவர் என் மருமகன். உங்கள் மகன் மிகச்சிறப்பாக வருவான் .என் ஆசிகள்.---காஸ்யபன்.

சிவகுமாரன் said...

ஆகா.. என்ன ஒரு அருமையான வாய்ப்பு. என் மகன் உலோகவியல் துறையில் தான் சேர்ந்திருக்கிறான்.நன்றி அய்யா.

சிவகுமாரன் said...

ஆகா.. என்ன ஒரு அருமையான வாய்ப்பு. என் மகன் உலோகவியல் துறையில் தான் சேர்ந்திருக்கிறான்.நன்றி அய்யா.