Wednesday, August 03, 2016


"சம்மந்தரும் "

"சமண "  பிராமணர்களும் .....!!!
முற்போக்கு தமிழ் மரபு சிறப்புமலரை சென்றவாரம் தான் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.செந்தில்நாதன் அவர்கள் எழ திய  முதல்கட்டுரை என்னுள் ஏற்படுத்தியதாக்கத்தை  இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

சம்மந்தரும் ,ஆதி சங்கரரும் கிட்டத்தட்ட ஒரேகாலத்தவர் என்று ஒரு கருத்து உண்டு. அவர்கள்காலத்தில் சமண மதம் உசசத்தில்  இருந்தது.

சமணத்தை அழித்து பிராம்மண மதத்தை நிறுவனமாக்கியவர் ஆதி சங்கரர்.இது வட இந்தியாவில். தமிழகத்தில் சமணத்தை அழித்து சைவத்தை நிறுவியவர் சம்மந்தர். 

8000 சமணர்களை கழவில்  ஏற்றி கொன்றவர் சமமந்தர். இது பற்றி சம்மந்தர் காலத்திற்கு 500 ஆண்டுகளுக்கு பிறகு தான் பெரிய புராணத்திற்க்குறிப்பு வருகிறது. வேறு ஆதாரங்கள் இல்லை.

"தென்னிந்திய வரலாறு "  என்ற தன நூலில் நீலகண்ட சாஸ்திரி சமணர்கள் கழவில் ஏற்றப்பட்டதை விலாவாரியாசொல்லிவிட்டுany way this can be rejected as legend என்கிறார். 

8000 சமணர்கள் கொல்லப்பட்டபின்பு  அவர்களுடைய குடும்பம்,பெண்டு பிள்ளை என்ன ஆனது என்பதை எவரும் சொல்வதில்லை .

சம்மந்தர் இவர்களை சமண பிராமணர்கள் என்று சேர்த்தார். இவர்களை "எண்ணாயிர பிராமணர்கள் " என்றும் அழைத்தனர் .ஏற்கனவே இருந்த வைதிக பிராமணர்கள் இவர்களை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. "அஷ்ட சகஸ்ர பிராமணர்கள்" என்று இவர்களை  ஒடுக்கி வைத்தனர். பிராமண சமூகத்தில் தீண்டத்தகாதவர்களாக இரண்டு பிரிவுகள் உருவாகின.

மினாடசி அம்மன்கோவிலிலும்,காந்திமதி அம்மன்கோவிலிலும் "சாமி ! சாமி ! "என்று பயபக்தியோடு விபூதி குங்குமம் வாங்கிக்கொள்கிறோமே அந்தபட்டர்கள்பிராமணர்களால்தீண்டத்தகாதவர்கள்.சம்பந்திபோஜனத்தில் இவர் அந்தணர் வீட்டிற்குள் சென்று உணவருந்த முடியாது.திண்ணைக்கு அருகில் உள்ள நடை பாதையில் அமர்ந்து தான் உண்ண  முடியும். இவர்களோடு திருமணசம்மந்தம் செய்ய மாட்டார்கள்.

இந்த வகுப்பாரோடு எண்ணாயிர பிராமணர்களை வைதிக பிராமணர்கள்வைத்தார்கள்.

இதனைஒருநாவலாகவோ,நாடகமாகவோஎழ்தமுனைந்தேன்.அதற்கான தரவுகளை தேடும் பொது மிகவும் சங்கடப்பட்டேன்.

சென்னை சென்று கி.வ ஜெகந்நாதனை சந்தித்தேன் . "இலக்கிய தரவு எதுவும் தென்படவில்லை தம்பி ! ஸ்ரீவைகுண்டம் தல புராணத்தில் சில குறிப்புகள் உள்ளதாய் சொல்வார்கள் "என்றார்.

திருப்பதிக்கோவிலிலிருந்து ,வள்ளிமலை, திருப்பரம் குன்றம்,அழகர் மலை . கழகுமலை , என்று சமண குடக்கோயில்கள் சைவ வைணவ தலங்களாக மாற்றியதை விசாரித்தேன். கொலைவெறி தாக்குதலாலுக்கு உள்ளன சமணர்கள் தங்கள் கடவுள் "சாத்துவன் "பதுமையைத்தூக்கிக்கொண்டு தமிழகத்தின்   தென்மேற்கு காடுகளில்பதுங்கியதை கேள்விப்பட்டேன்.களக்காடு,கல்லிடை,அமபை ,ஆம்பூர்,ஆழ்வார்குறிசசி ,ராவணசமுத்திரம்,கடையம்,குத்தாலம்,செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இன்றும் அஷ்ட சகஸ்ர பிராமணர்களாக அவர்கள் வாழ் வதை  அறிந்தேன்   . தங்கள் கடவுளான சாத்தானை சபரி மலையில் ஒளித்து வைத்து வணங்கியதையும்கேள்விப்பட்டேன். 

பின்னாளில் "சாத்துவ"னை  இந்துக்கடவுளான "சாஸ்தா " வாக்கியத்தையும் தெரிந்து கொண்டேன். 

தீர்த்தங்கரர் முட்டி போட்டுக் கொண்டு கைகளால் முழங்காலை கட்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கும் பாணியில் சபரிமலை சாஸ்தா அமர்ந்திருப்பதை இவர்களாலமாற்றமுடியவில்லை என்பதையும்புரிந்துகொண்டேன். 

தரவுகளை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைக்கவில்லை . 

என் தாய் மாமன் ஒருவர் கூறினார். வீட்டில் பெரியவர் ஒருவருக்கு  திதி கொடுத்தார்கள். "திதிகொடுக்ககளாம்  திதி ! எல ! சாமா நாமபிராமணங்க இல்லைல ! நாம சமண  பிராமணர்கள் ! ரெண்டுங்கெட்டான்  குரூப்பு ! என்கிறார்.

"அம்பி ! நாக்கு அழகிடும் ! அப்பிடி சொல்லாத ! "என்றார் என் தாயார் .  

 
 

1 comments:

'பரிவை' சே.குமார் said...

வாசித்தேன் ஐயா...
அருமை.