Wednesday, August 31, 2016
Wednesday, August 24, 2016
அழுகும் மனுநீதி ,
அழிவது ,
உறுதி !!!
திங்கள் கிழமை அன்று அந்த திருமணத்திற்கு சென்றிருந்தேன். மணமகள் மலேசியாவில் பணியாற்றுகிறார். மணமகன் அமெரிக்காவில்.
மணமகளின் தந்தை மராட்டிய மாநிலம் . மகாராஷ்டிராவில் செட்டிலாகிய தமிழ் குடும்பத்து.பெண்ணை காதலித்து திருமணம். என்ன தான் சாதி மத மறுப்பு திருமணம் செய்து கொண்டாலும் மகள் செல்லும் புகுந்தவீடு எதிர்காலம் பற்றி பாசமுள்ள தந்தைக்கு கரிசனமிருக்கும் அல்லவா !
மணமகனின் தாயும் தந்தையும் கனடா நாட்டில் செட்டில் ஆனவர்கள்.மணமகன் முதன்முதலாகஇந்தியா வருகிறான்.தமிழ் அந்த குடும்பத்திற்கு பேச தெரியும். எழுத படிக்க தெரியாது. மணமகளும் தமிழ் பேசுவார்.எழுத படிக்க தெரியாது .மண மகனின் தாயார் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர். தந்தை தொம்பரை என்ற கிராமத்தை சேர்ந்தவர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள "தென் திரு பேரை "என்று யூகித்து தோழர் கிருஷி அவர்களை தொடர்பு கொண்டு விசாரிக்க சொன்னேன்.
"ஸார்வாள் !தென்திரு பேரைக்கும் தோம்பறை க்கும் சம்மந்தம் கிடையாது."தென்பரை யிலிருந்து வெண்மணி வரை " என்று அப்பண்ணா சாமி நூல் எழுதி இருக்கிறார் . அவரை தொடர்பு கொள்ளுங்கள் " என்கிறார் கிருஷி . அப்பண்ணா சாமியை தொடர்பு கொண்டேன்.
" வாடா " என்றால் "போடா " என்று சொல் ; அடித்தால் திருப்பி அடி " என்று முதல் முதல் சீனிவாசராவ் அவர்கள் அறிவித்த ஊர் தென்பரை மன்னார் குடிக்கு அருகில் உள்ள கிராமம் .வைணவ பிராமணர்கள் நிறைந்த ஊர் என்று தெரிந்து கொண்டேன். திருமண விழாவில் எல்லாரையும் சந்திக்கமுடிந்தது.
நான் வாழும் அடுக்ககத்தில் நாற்பது குடும்பங்கள் வாழ்கின்றன .
வெவ்வேறு மொழி. மாநிலம்.பழக்க வழக்கங்கள் .கல்லூரியில் பள்ளிகளில் படிக்கு மாணவ மாணவிகள் பழகும் அழகு , ஒவ்வொருவரும் தங்கள் எல்லை எது என்பதை புரிந்து செயல்படுவது பார்க்க பரவசமாக உள்ளது. அவர்களுக்குள் உள்ள புரிதல் சிறப்பானது.
திருமணம் என்று வந்தால் மட்டும் கண்ணுக்குத்தெரியாத ஒருவனை கொண்டு வந்து நிறுத்துகிறோம் . காரணம் சாதி .அதன் இறுக்கம் .
"உங்கள் தமிழ் நாட்டில் எப்படி இருக்கிறது ?" என்று நண்பர்கேட்டார்
"என் சிறு வயதில் பிராமணர் -பிராமணர் அல்லாதார் என்று தான் இருந்தது.அந்த காலத்தில் B X N B என்பார்கள். அன்றய தலைவர்கள் பிராமணர் அல்லாதவர்களை ஒன்றுபடுத்தினார்கள். அதன் மூலம் பல உரிமைகளையும் சலுகைகளையும் அவர்கள்பெற்றுத்தந்தார்கள்."
"இன்று முகநூலில் பார்ப்பன எதிர்ப்பு கொடிகட்டி பறக்கிறது . ரெட்டியார் ரெட்டியார் விட்டு பெண்ணை மணந்து கொண்டு "மனுநீதிய ஒழிக்க " வருகிறார். பிள்ளை வீட்டில் மனம் புரிந்த பிள்ளைவாள் பார்ப்பனியத்தைஒழிக்க முண்டி அடிக்கிறார். என்ன செய்ய ?"
"தன் மகளை 21 வயது ஆவதற்கு முன்பே தன உறவினருக்கு கட்டிவைக்கும் திருமணங்களை நடத்தி விட்டு புரட்ச்சி பேசுவதும்நடக்கிறது"
"இந்தப் போலிகளின் வாரிசுகள் சாதி சமயத்தை மீறி வருவது ஆறுதலளிக்கிறது."
மநு நீதி அழுகி நாற்றமெடுக்க ஆரம்பித்து விட்டது.
இந்த போலிகளையும் தாண்டி அழியத்தான் போகிறது.!!!
இது உறுதி !!!
Friday, August 19, 2016
மது விலக்கு -
பாவம் "முத்துக்குமார் "
அற்புதமான கவிஞன் ! எழுத்தாளன் ! சமூகப்பிரக்ஞை உள்ள இளைஞன் !
அவனுடைய மரணத்தை இந்த மதுவிலக்கு ஆதரவாளர்கள் இவ்வளவு தூரம் கொசசை படுத்தி இருக்க வேண்டாம் .
நுழைவதற்கு முன்பே இந்த துறையில் முதலில் வேண்டியது இந்த பழக்கம் தான். இது எல்லாருக்கும் தெரியும்.
என் போன்றவர்கள் பாக்கியசாலிகள்.நாங்கள் சிறுவர்களாக இருக்கும் போதே மது விலக்கு அமலாகிவிட்டது. முதன் முதலாக மது விற்பனை கடையி னை என் இருபத்திஇரண்டாம் வயதில் ஹைதிராபாத்தில் தான் பார்த்தேன். நானொன்றும் மதுவை தொட்டதே இல்லை என்று சொல்ல வில்லை . and I am not a habitual drunkard .
குடிப்பதை பெருமையாக எழுதுவதும் அதனை சிலாகித்து புகழுவதும் நின்றாலே பாதி பிரசினைமுடிந்து விடும்.
சாரு நிவேதிதாவும்,மனுஷ்யபுத்திரனும்குடித்துகும்மாளமிட்டதை பத்திரிகைகள் பிரசுரிப்பதை நிறுத்தினாலே போதும். பிரச்சினை தீர்ந்துவிடும் .
எதோ தமிழகத்தில் தான் குடித்து கொண்டாடுகிறார்கள் என்பது உண்மையல்ல. காந்தி அடிகள் பிறந்த குஜராத்திலும் உண்டு.
சந்திகரில் நடந்த அகில இந்திய மாநாடு ஒன்றுக்கு பார்க்க சென்றிருந்தேன். மார்சு 31 லிருந்து நான்கு நாட்கள் நடந்தது. 5* வெப்பம்.குளிர் தாங்கமுடியவில்லை. பொது மாநாடு 11மணிக்கு வெளி அரங்கில் நடந்தது. மாலை 3 மணிக்கு முடித்து அனுப்பி விட்டார்கள். வந்திருந்த பார்வை யாளர்கள் பாக்கெட்டில் 1/4 பாட்டில்கள் இருந்தன.
தெலுங்கானா எழுசசியின் பொது போராளிகள் மலேரியாவினால் அதிகம் பாதிக்கப்படுவார்கள். காட்டுப்பகுதியில் இருப்பதால்.அவர்களிடம் "குடும்பா " என்ற நமது "கள் " மது எப்போதும் இருக்கும்.அதுதான் அதற்கான மருந்து . (telungaana struggle -by p .sundarayya )
- 40* குளிரில் வசித்திருக்கிறீர்களா ? மாசுகோவில் இது சர்வ சாதாரணம்.உயிர் காப்பதற்காகவாவது குடிக்கவேண்டியது உண்டு.
முதலமைசர்கள் எத்தனை பேர் குடிக்கிறார்கள். அடையார் கடற்கரையில் போலீஸ் காவலோடு அமைசசரவை கூட்டம் நடக்குமே ! அப்போது குடிக்காமலா இருந்தார்கள்.
அந்த பிரபல நடிகர் அமெரிக்காவிலிருந்து வரும்போது black horse பாட்டிலை திறந்து குடித்துக் கொண்டேவந்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நிருபர் எழுதியதை பார்த்தவர்கள் தானே நாம்.
மதுவின் பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் !
மது பழக்கமாகிவிடக்கூடாது !!
எல்லாம் சரிதான் !!!
தமிழகத்தின் பிரசினை அதுமட்டும் தானா ???
Tuesday, August 16, 2016
சரித்திர பொருள் முதல் வாதத்தை ,
இலக்கியமாக்கி தந்தவர் ,
ராகுல் ஜி !!!
கிறிஸ்து பிறப்பதற்கு 6000 ஆண்டுகளுக்கு முன்பிருந்து கிறி ஸ்து பிறந்து பிறகான 1942ம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தம் வரை மனித குலவரலாற்றை கொடுத்தவர் ராகுல் சாங்கிருத்யாயன்.
அதனை அற்புதமான இலக்கிய நடையில் தந்தார். கி.மு 6000 த்தில் வாழ்ந் த நிஷாவிலிருந்து 1942ல் ஜப்பானிய பாசிஸ்களை வென்ற சமர் வரை ஒரு பருந்து பார்வையை கொடுக்கிறார்.
கம்யூனிஸ்டு இயக்கத்தின்பால் ஈர்க்கப்படுபவர்களுக்கு அந்த இயக்கம் படிக்கக் கொடுக்கும்முதல் நூல்"வால்காவிலிருந்து கங்கை வரை "என்ற இந்த நூலாகும் .
வீரம்,விவேகம்,பாசம்,பரிவு, காதல் என்று இதில் இல்லாத சுவையே கிடையாது எனலாம்.
20 கதைகளாக விரியும் இந்த நூலில் ராகுல் ஜி காதலை அமரத்துவமாக்கி இருக்கிறார் என்றால் மிகை இல்லை .
கம்பனின்மகன்அம்பிகாபதிஅமராவதிகாதல்,தேவதாஸ்பார்வதி,லைலா--மஜ்னு , ரோமியோ-ஜுலியட் படித்திருப்போம். ஆனால் பிரபா -அஸ்வகோஷ் காதலை அமரத்துவம் பெற செய்தவர் அவர்.
அஸ்வகோஷ் அந்தணன். படித்தவன்.அறிவு ஜீவி . மகா கவி.மிகசிறந்த கலைஞன் . மரபு ரீதியான நாடக கூறுகளையும் ,கிரேக்க நாடக கூறுகளையும் ஆய்ந்து நாடக இயலுக்கு புத்துயிர் ஈட்டியவன் .
( இன்றும் டெல்லியில் உள்ள தேசிய நாடக பள்ளியில் இவனுடைய நாடக பாணி கற்று கொடுக்கப்படுகிறது)
பிரபா என்ற கிரேக்க வம்சத்து பெண்ணோடு இவன் நடித்த நாடகம் தான் "ஊர்வசி". பிரபாவை உயிருக்கு உயிராக காதலிக்கிறான். தங்க நிறத்தில் மின்னும் பிரபா அவனை காதலிக்கிறாள். பெற்றோர்கள் இதனை ஏற்கவில்லை.
அஸ்வகோஷை புத்தமதத்தில் சேர்ந்து தன அறிவை சிறப்பிக்க விரும்புகிறான். உலகம் புராவிலும் அவன் புகழ் பரவு கிறதுஆனால் அஸ்வகோஷுக்கு தயக்கம் உள்ளது. தன் அறிவு பூர்வமான தேடலா-பிரபாவா என்ற கேள்வி எழுந்த பொது அவன் பிரபா தான் என்று முடி எடுக்கிறான்.
"காதலா ! அன்பா ! என் உயிர் நீ ! உன்னை மணந்து உன் வாரிசை சுமக்க தயாராக இருக்கிறேன் . ஆனால் நீ மகா கவிஞன்! மகா கலைஞன் ! அறிவார்ந்தவன் ! நீ மக்களுக்கானவன் ! என்னை மற! நீ மறக்க மாட்டாய் ! நான் மறையும் வரை ! சரயு நதியின் வேகத்தில் ஆழமான பகுதியில் நான் மறைகிறேன் ! என் உயிரே !" என்று கூறி பிரபா மறைகிறாள்.
அஸ்வ கோஷ் ,தேவ சேனரிடம் தீட்சை பெற்று புத்த பிக்கு வாகிறான்.
ராகுல் ஜி யின் "வால்கா விலிருந்து கங்கை வரை " மிகவும் வித்தியாசமான இலக்கிய படைப்பு .
Friday, August 12, 2016
ரயிலும்
நாகர் கோவில்
சின்ன பையன்களும் ...!!!
இந்த தலைப்பு ஒரிஜினல் இல்லை . "ரயிலும் நம்ம பாட்டையாவும் " னு தான் முதல்ல எழுதினேன் . சென்னைல நாடக கொட்டைகை சீன் இழுக்கறவன் கூட சண்டைக்கு வந்தர்வான் .நாட்ல அவருக்கு அம்புட்டு சப்போர்ட்டு..
நான் சின்ன பையனா ஆறாப்பு படிக்க தி -லி டவுன் ஸ்டேஷன் பக்கத்துல இருக்கற பள்ளில படிசசென் . பாட்டையா என்னை வீட்டா ஒருவயது சின்னவராயிருக்கலாம். அப்போ எல்லாம்நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது. நாளம்கிளாஸ் ஐந்தாம் கிளாஸ் பசங்களை பயோனியர் மற்றும் குமார விலாஸ் பஸ்ல கூட்டி வருவாங்க. அதுதான் ரயில்வேக்கான அவுட் ஏஜென்சி . சேர்மாதேவில ரயில் ஏறி கல்லூர் ,பேட்டை,டவுன் ,ஜங்ஷன் னு அந்த பையன்களை கூட்டி வந்து ரயிலை காட்டுவாங்க..
"ஏல ! குட்டா ரயிலு ! ஏல ! செட்டா என்ஜின்னு ! ஏல ! சத்தம் போடாதல்ல பிடிசிட்டு போயிருவான் ! " அந்த சின்ன பயலுக பேசுறத கேக்க நல்ல இருக்கும்இந்த கூட்டத்துல மணிங்கற சின்னப்பையனும் இருந்திருப்பான்.
1962ல நான் மதுரைக்கு மாற்றலாகி வந்தேன். நாகர்கோவில் பையன்க -ராமசந்திரன்,விட்டல் தாசு, துறை னு முணுப்பசங்க எல்.ஐ.சில சேர்ந்தாங்க. ஆபிசுக்கு அடுத்து ரோடு அதுக்கு அடுத்து குட்ஷேட் . காலைல 8மணிக்கே வந்துருவானவுக .மொட்டைமாடிக்கு போய் நிப்பானுக.
"ஏல ! ராமாந்திரா ! ரயிலு ! சிக்கிரம்ல ! வா ! பாரு !" ம்பான் துறை !
"ஏ! இன்ஜினை பாருல!கிழக்க பாருனா மேக்க பாக்க !" ம்பான் ராமந்திரன்.
""எத்தான் தண்டி என்ஜினு!! "னு முக்குல கைவைப்பன் விட்டல் தாசு.
ஆபிஸ்விடத்தும் ரூமுக்கு போக மாட்டாங்க.மதுரை ஸ்டேஷன்ல போயி வர போற ரயில்ல ஏறி இறங்கி பாப்பாங்க.இன்ஜினை குட்ஸ்ட்ல போய் பாத்துகிட்டே மணிக்க்ணக்குல நிப்பானுங்க.
நாகர் கோவிலுக்கு ரயில் வந்திட்டது. முத ரயிலு விட்ட அன்நிக்கு பாக்கணுமே. ரயிலைவிட நான் ஓடிடுவேன் னு சொல்லி துறையோடு அன்னான் ஒடி கல்வெர்ட்ல முட்டி கால ஓடசசி கிட்டான். .
ராமந்திரன் இப்பம் தொழிற்சங்க தலைவர் மகன் சிங்கப்பூர்ல .பயணம் பூரா பிளைட் தான்
துறை மாப்பிள்ளை பெரிய அரசியல் தலைவரு. கால் பூமியிலேயே படாது..
விட்டால் தாசு மகள் அமெரிக்காவுல இருக்கு.
பாட்டையா லண்டன் ல இருந்தவறு.!
என்ன பிரயோசனம் !
ரயிலை பத்து வயசுக்கு மேல தான பாத்திய !!!
Tuesday, August 09, 2016
"நாடகம் "
"புதிய தலைமுறை "
1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12,13 மத்தேதி வாக்கில் தமிழ்நாடு முற்போக்கு எழுதாளர் சங்க முதலமாநாடு மதுரையி நடந்தது.
மாநாட்டின்இறுதிநாள்நிகழ்சியாக நாடகம்போடமுடிவாகியதுமதுரைபீப்பிள்ஸ் தியேட்டர் தோழர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். கட்டணமாகவசூலாகும் தொகையை மாநாடு செலவுக்கு கொடுக்கவும் சம்மதித்தார்கள். கே.முத்தையா நாடகத்தை எழூதிக்கொடுப்பார். அடியேன் நாடகத்தை இயக்க வேண்டும் என்பதும் முடிவாகியது.
சிறிய நகரம் ஒன்றில் சனாதன குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வக்கீலாக இருக்கிறார் அவருடைய ஒரே மகள் சிறுவயதிலேயே விதவை ஆனவள்.அவளை படிக்கவைத்து மறுமணம் செய்விக்கும் யோசனையில்வக்கில் இருக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் புரோகிதம் செய்யும் பிராமணர் வசிக்கிறார்> அவருடைய ஒரேமகனுக்கு மந்திரங்களை சொல்லிக்கொடுத்து அவனையும் சனாதனமான புரோகித தோழிலில் ஈடுபடுத்த விரும்புகிறார்.
வாக்கிலும் புரோகிதரும் நண்பர்களும் கூட . வக்கீல் தத்வர்த்தவிஷயங்களில் கெட்டிக்காரர் சமண, பௌத்த ததத்துவ ங்களில் ஈடுபாடு கொண்டவர்.வைதிக மதத்தை விமரிசிப்பவர். புரோகிதர் மகன் பரந்தாமன், வக்கீல் வீட்டுக்கு அடிக்கடி வருவான். வக்கீலின் மகளின் பால் அவனுக்குஒரு ஈர்ப்பு.
வக்கீலின் மகளும் , பரந்தாமனும் சென்னை சென்று வாழ்கிறார்கள் . பரந்தாமன் தன ஆலையில் உள்ள தொழிற்சங்கத்தின் முன்னணி செயல்விரனாக மாறுகிறான்.
கே.எம்அவர்கள்எழுதியஇந்த நாடகம்வெகுவாகாபாராட்டப்பட்டது.இதில்புரோகிதர் பாத்திரத்தை காஞ்சி பெரியவர் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைஇணைத்திருந்தார். பரந்தாமன் பாத்திரத்தை வேடிக்கையான,அப்பாவியான ,பயந்த , சோகமான பாத்திரமாக படைத்திருந்தார். வக்கில் பாத்திரத்தை கம்பிரமான அறிவார்ந்த பாத்திரமாகி இருந்தார்.
மதுரை மிலத்தொழிலாளி துரைராஜ் புரோகிதராக அற்புதமாக நடித்தார்>மதுரை மில் தோழர் சேதுராமன் வக்கீலாக நடித்தார்.பரந்தாமனாக நான் நடித்தேன்.முழுக்க முழுக்க அந்த பாத்திரத்தை அன்றைய நடிகர் டி .ஆர் .ராமசந்திரன் பாணியில் நடித்தேன்..( இந்த நடிப்பை பார்த்து தான் எனக்கு திரைப்பட த்தில் நடிக்க வாய்ப்பு வந்தது)
மதுரைப்பிப்பீஸ் தியேட்டர் காரர்களுக்கு எந்த நாடகமானாலும் ,கரூர்,கோவை, நாமக்கல்,சேலம், திருப்பூர் பகுதியில் வாய்ப்பு உண்டு. தமிழகம் முழுவதும் சுற்ற ஆரம்பித்தோம் . வெள்ளிக்கிழமையும் . ஞ்சயிற்றுக்கிழமையும் கோவையில் நாடகம் போட்டோம். சனிக்கிழ மை திருப்பூரில். எங்கள் குழுவுக்கு பெருமை பிடிபடவில்லை
இந்த நாடகத்தைப்பற்றி கேள்விப்பட்ட தி .க தோழர்கள் மிக ஆர்வத்தோடு பாராட்டினார்கள்.
சேலம் நகராட்ச்சி நேரு அரங்கில் ஏற்பாடாகி இருந்தது. ஈரோடு சேலம் பகுதி தி.க தோழர்கள் கூட்டம் கட்டி ஏறியது. சேலம் மாவட்ட செயலாளர் தோழர் அர்த்தநாரி அவர்கள் மாலை 7மணிக்கு ஒருகாட்சியும், இரவு 10 மணிக்கு ஒருகாட்சியும் போடமுடியுமா என்று கேட்டார்கள். கரும்புதின்ன கூலியா ? ஒப்புக்கொண்டோம்.( சி.ஐ.டி யு தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான அ .சவுந்தர் ராஜனின் தந்தை தான் தோழர் அர்த்தநாரி )
புதிய தலைமுறை நாடகத்தின் மூலம் எங்கள் குழு தன்னை புதிப்பித்துக்கொண்டது.
திரைசீலை,படுத்தாக்களை பயன்படுத்தாமல் சைகலோரமாவில் நாடகம் நடத்த ஆரம்பித்தோம் .
குணசேகர், கல்யாண சுந்தரம்(spk ) இருவரும் ஒப்பனையில்பயிற்சி பெற்று நாங்களே ஒப்பனை செய்து கொண்டோம்.
ராஜகுண சேகர் நாடகத்திற்கான இசை யை இயக்க ஆரம்பித்தார்.
குழு தன்னிறைவு பெற்றதாக மாறியது.
சேகர் அமைத்த பாடல் - விதவைப்பெண் பாடுவதாக அமைந்த பாடல் - "நான் வாழ்ந்து காட்டுவேன் " இன்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.-அதன் இசைக்கோர்வைக்காகவும் ,கவிதை வரிகளுக்காகவும் .!!!
"நாடகம் "
"செவ்வானம் "
நாடகத்தை முன் நிறுத்தி ...!!!
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தோழர் சுப்பாராவ் ஆசிரியர் கே ,முத்தையா அவர்கள் பற்றி எழுதி இருந்தார். "செவ்வானம் " புதிய தலைமுறை "ஏரோட்டிமகன் " என்ற நாடகங்களைப்பற்றியும் குறிப்பிட்டிருந்தார். செவ்வானம் ,புதிய தலைமுறை ஆகிய இரண்டு நாடகங்களையும் மதுர பீப்பிள்ஸ் தியேட்டர் சார் நடத்தினர். அந்த இரண்டு நாடகங்களையும் இயக்கம் வாய்ப்பு எனக்கு கொடுக்கப்பட்டது.
செவ்வானம் நாடகம் நூலாக வந்திருந்தது. கே.எம் அவர்கள் என்னிடம் அதனைக்கொடுத்து படிக்க சொன்னார். மொத்தம் 90 சீன் .இரண்டு இரவும் ஒரு பகலும் வேண்டும் .
"கே.எம் .நாடக இயலுக்கு சம்மந்தமே இல்லாமலிருக்கிறதே ? "என்றேன்.
"இந்த பாரும் யா! எங்களை பூரா ஜெயில்ல அள்ளி போட்டுட்டான். .தோழர்கள் சோர்ந்து விடாம இருக்க ,பாட்டு போ ட்டி,பேசசு போட்டி னு நடத்துவோம். ஒரு ஆளு நாடகம் போடுவோம் நாறு .ஒரு சின்ன நாடகம் அப்போ எழுதினேன் யாருக்கு தெரியும் உங்க நவீன dramatics எல்லாம் "
"அப்படியா ?"
"வெறும் அப்படியா இல்லை ! இந்த நாடகத்துல பி ஆர் நடிசார் ".
பிஆரின் 60ம் ஆண்டு விழாவை மதுரையில் நடத்தினார்கள். அப்போது செவ்வானம் நாடகம் போட முடிவு செய்யப்பட்டது.
மாசிவீதியில் அப்போது புத்தன் ஓவியக்கூடம் இருந்தது.அதன் முக்கியஸ்தர் புத்தன் இயக்கத்தில் தமுக்கத்தில் நாடகம் அரங்கேறியது.
"மதுரை கருடா சீட் பண்ட்ஸ் " உரிமையாளர் ராதாகிருஷ்ணன் கதாநாயகனாக நடித்தார். அவரோடு எல்.ஐ .சி ஊழியர் தனபால் பாண்டியனும் நடித்தார்.
"கே.எம். இப்படியே போட்டால் எடுபடாது. !"
"என்னால எழுத முடியாது. இந்தாப்பாரும் . நிறு இத சுருக்கும் .கதையவும் வசனத்தையும் மாத்தாதையும் " என்றார் .
சீன் களை வெட்டி,இணைத்து மொத்தம் 21 சீன் களாக்கி கே ம் அவர்களிடம் காட்டினேன். ஏற்றுக்கொண்டார்>.
இந்த நாடகத்தில் எல்.ஐ சி ஊழியர் ராஜ குண சேகர் கதாநாயகனாக நடிக்க தமிழக மெங்கும் சென்றோம்.
கீழ் வானில் செம்பரிதிக் கோலம் ,
இது கிழக்கெல்லாம் சிவப்பாகும் காலம் !
தாழ்வான மனித குலம் வெல்லும் -மக்கள்
தர்மத்தின் கை ஓங்கி நில்லும் !!
என்ற தணிகையின் புகழ் பெற்ற பாடல் அந்த நாடகத்தின் ஹைலைட் ஆக அமைந்தது.
சேகரின் தொழிற்சங்க பொறுப்பின் காரணமாக அவர்க்கு பதிலாக வேறு நடிகரை தேடினோம்.அமெரிக்கன் கல்லூரிமாணவர் குமரேசனும் ,திருமலை ராஜனும்கிடைத்தார்கள்.குமரேசன் கதாநாயகனாக நடித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும், சென்னை நடிப்பு கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்ற குமரேசன், திரைப்படங்களில் "சக்கரவர்த்தி " என்ற பெயரில் கதாநாயகனானார். "பொண்ணு ஊருக்கு புதுசு " என்ற R .செல்வராஜ் இயக்கிய படம் அவருக்கு
பெரும் புகழை தந்தது.
புதிய தலைமுறை ( தொடரும் )
.
"சரக்கு வரி "
சட்டம் இயற்றப்பட்டதாக
போய் சொல்லி
12000 கோடி அபேஸ் ...!!!
சரக்கு வரி சட்டம் கொண்டுவர அடிப்படை சட்டம் திருத்தப்பட்ட வேண்டும் . எட்டு வருசமாக காங்கிரஸ்-பாஜ.க இதில் கண்ணா முசசி ஆடிவந்தது . மக்களவையில் நிறைவேறியது. மாநிலங்களவையில் காங்கிரஸ் தயவை வேண்டி பாஜக யாசித்தது.இப்போது மாநிலங்கள் அவையிலும் நிறை வெறியுள்ளது .
அதாவது அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்ய நிறை வெறியுள்ளது.இது மீண்டும் மக்களவை செல்லவேண்டும். பின்னர் குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு பிறகு மாநிலங்கள் பெருவாரியானவை அங்கீகரிக்க வேண்டும்.. அதன் பிறகுதான் சரக்கு வரி பற்றி முடியும்.
ஊடகங்கள் சரக்குவரி மசோதா நிறைவேறிவிட்டதாக ஒரு மாயத்தோற்றத்தை உருவாக்கி விட்டன.
நேற்றய செய்திப்படி டி .சி.எஸ் கம்பெனி பங்கு மட்டும் 5000 கோடி லாபம் அடைந்துள்ளது .இன்னொரு கம்பெனி 6000 கோடி. பங்கு சந்தை எகிறுது .
அதற்குள் ஆழ்வார்திருநகர் அய்யங்கார் குதிக்கிறார். சீத்தாராம் எசசுரி ,இடதுசாரிகள் என்று ஓப்பாரிவைக்க ஆரம்பித்து விட்டார்கள். குழைக்காதர் பெருமாள் கோவில் மதிலில் "நம்பிகள் " முட்டிக்கொள்வதை நாம் தடுக்கப்போவதில்லை.
"சாமிகளே ! சரக்கு வரி மசோதாவை மார்க்சிஸ்ட் கடசி வரவேற்கிறது. அதன் மூலம் சரக்கு விலை குறையும் வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த பாவிகளின் நோக்கம் அதுதானா ? மசோதாவை பார்த்துத்தான் சொல்ல வேண்டும்."
1069ம் ஆண்டு வங்கிகள் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. பி ராமமூர்த்தி அவர்களிடம் கேட்ட பொது " இதனை ஆதரிக்கிறோம்.அதேசமயம் nationalaisation for whom ? by whom ? என்ற கேள்வியும் இருக்கிறது "என்றார் அந்த தீர்க்க தரிசி .
ஒரே சரக்கின் மேல் மாநிலம்,மத்திய அரசுகள் வரிகளை போடுகின்றன.சரக்கு வரி மசோதா மூலம் இந்த இரட்டை வரிக்கு முடிவுகட்டப்படும் என்கிறார்கள் .
மாநிலங்கள் தங்கள் நிதி ஆதாரங்களை இழக்க வாய்ப்பு அதிகம். பஞ்சாயத்துகள் கூட வரி போட முடியாத நிலைமையை உருவாக்கி விடுவார்கள் . கவனமாக இருக்க வேண்டிய தருணம் இது .