Tuesday, August 09, 2016

"நாடகம் "







"புதிய தலைமுறை "







1975ம் ஆண்டு ஜூலை மாதம் 12,13 மத்தேதி வாக்கில்  தமிழ்நாடு  முற்போக்கு எழுதாளர்  சங்க முதலமாநாடு  மதுரையி நடந்தது.

மாநாட்டின்இறுதிநாள்நிகழ்சியாக  நாடகம்போடமுடிவாகியதுமதுரைபீப்பிள்ஸ் தியேட்டர் தோழர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள். கட்டணமாகவசூலாகும் தொகையை மாநாடு செலவுக்கு கொடுக்கவும் சம்மதித்தார்கள். கே.முத்தையா நாடகத்தை எழூதிக்கொடுப்பார். அடியேன் நாடகத்தை இயக்க வேண்டும் என்பதும் முடிவாகியது.

சிறிய நகரம் ஒன்றில் சனாதன குடும்பத்தை சேர்ந்த ஒருவர் வக்கீலாக இருக்கிறார் அவருடைய ஒரே மகள் சிறுவயதிலேயே விதவை ஆனவள்.அவளை படிக்கவைத்து மறுமணம் செய்விக்கும் யோசனையில்வக்கில் இருக்கிறார். அவருக்கு பக்கத்து வீட்டில் புரோகிதம் செய்யும் பிராமணர் வசிக்கிறார்> அவருடைய ஒரேமகனுக்கு  மந்திரங்களை சொல்லிக்கொடுத்து அவனையும் சனாதனமான புரோகித தோழிலில் ஈடுபடுத்த விரும்புகிறார்.

வாக்கிலும் புரோகிதரும் நண்பர்களும் கூட . வக்கீல் தத்வர்த்தவிஷயங்களில் கெட்டிக்காரர் சமண, பௌத்த ததத்துவ ங்களில்  ஈடுபாடு கொண்டவர்.வைதிக மதத்தை விமரிசிப்பவர். புரோகிதர் மகன் பரந்தாமன், வக்கீல் வீட்டுக்கு அடிக்கடி வருவான். வக்கீலின் மகளின்  பால்  அவனுக்குஒரு ஈர்ப்பு.  

வக்கீலின் மகளும் , பரந்தாமனும் சென்னை சென்று வாழ்கிறார்கள் . பரந்தாமன் தன ஆலையில் உள்ள தொழிற்சங்கத்தின் முன்னணி செயல்விரனாக மாறுகிறான். 

கே.எம்அவர்கள்எழுதியஇந்த  நாடகம்வெகுவாகாபாராட்டப்பட்டது.இதில்புரோகிதர் பாத்திரத்தை காஞ்சி பெரியவர் வாழ்க்கையில் நடந்த  சம்பவங்களைஇணைத்திருந்தார். பரந்தாமன் பாத்திரத்தை வேடிக்கையான,அப்பாவியான ,பயந்த , சோகமான பாத்திரமாக படைத்திருந்தார். வக்கில் பாத்திரத்தை கம்பிரமான அறிவார்ந்த பாத்திரமாகி இருந்தார்.

மதுரை மிலத்தொழிலாளி துரைராஜ் புரோகிதராக அற்புதமாக நடித்தார்>மதுரை மில் தோழர் சேதுராமன் வக்கீலாக   நடித்தார்.பரந்தாமனாக நான் நடித்தேன்.முழுக்க முழுக்க அந்த பாத்திரத்தை அன்றைய நடிகர் டி .ஆர் .ராமசந்திரன் பாணியில் நடித்தேன்..( இந்த நடிப்பை பார்த்து தான் எனக்கு திரைப்பட த்தில் நடிக்க வாய்ப்பு வந்தது)

மதுரைப்பிப்பீஸ் தியேட்டர் காரர்களுக்கு எந்த நாடகமானாலும் ,கரூர்,கோவை, நாமக்கல்,சேலம், திருப்பூர் பகுதியில் வாய்ப்பு உண்டு. தமிழகம் முழுவதும் சுற்ற ஆரம்பித்தோம் . வெள்ளிக்கிழமையும் . ஞ்சயிற்றுக்கிழமையும் கோவையில் நாடகம் போட்டோம். சனிக்கிழ மை  திருப்பூரில். எங்கள்  குழுவுக்கு  பெருமை பிடிபடவில்லை

இந்த நாடகத்தைப்பற்றி கேள்விப்பட்ட தி .க  தோழர்கள் மிக ஆர்வத்தோடு  பாராட்டினார்கள். 

சேலம் நகராட்ச்சி நேரு  அரங்கில் ஏற்பாடாகி இருந்தது. ஈரோடு சேலம் பகுதி தி.க தோழர்கள் கூட்டம் கட்டி ஏறியது. சேலம் மாவட்ட செயலாளர் தோழர் அர்த்தநாரி அவர்கள் மாலை 7மணிக்கு ஒருகாட்சியும், இரவு 10 மணிக்கு ஒருகாட்சியும் போடமுடியுமா என்று கேட்டார்கள். கரும்புதின்ன கூலியா ? ஒப்புக்கொண்டோம்.( சி.ஐ.டி யு  தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ வுமான அ .சவுந்தர் ராஜனின் தந்தை தான் தோழர் அர்த்தநாரி ) 

புதிய தலைமுறை நாடகத்தின் மூலம் எங்கள் குழு தன்னை புதிப்பித்துக்கொண்டது.

திரைசீலை,படுத்தாக்களை பயன்படுத்தாமல் சைகலோரமாவில்  நாடகம் நடத்த ஆரம்பித்தோம் .

குணசேகர், கல்யாண சுந்தரம்(spk )  இருவரும் ஒப்பனையில்பயிற்சி  பெற்று நாங்களே ஒப்பனை செய்து கொண்டோம்.

ராஜகுண  சேகர் நாடகத்திற்கான இசை யை இயக்க ஆரம்பித்தார்.

குழு தன்னிறைவு பெற்றதாக மாறியது.

சேகர் அமைத்த பாடல் - விதவைப்பெண் பாடுவதாக அமைந்த பாடல் - "நான் வாழ்ந்து  காட்டுவேன் " இன்றும் எங்கள் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.-அதன் இசைக்கோர்வைக்காகவும் ,கவிதை வரிகளுக்காகவும் .!!! 

 

     







1 comments:

kashyapan said...

"தவறுக்கு வருந்துகிறேன்"


தோழர் ஏ.ஏஸ் அவர்களின் தந்தை பெயர் அர்த்தநாரி . செலம் மாவட்ட . செயலாளராக இருந்த தோழர் அர்த்தநாரி வேறு ஒருவர் . தவறினை திருத்த உதவிய தோழர் ஆர்.எஸ்.மணி அவர்களுக்கு நன்றி---காஸ்யபன்.