கள்ளப்பணத்தை ,
சிருஷ்டிப்பவர்கள் ,
ஆடிட்டர்கள் ....!!!
1945-50 ஆண்டுகளாக இருக்கும். எனக்கு துரத்து உறவினர் அண்ணன் முறை. அவர்பெயருக்கு முன்னால் F C A என்று போட்டிருந்தார். அவர் ஆடிட்டராக பணியாற்றினார். பின்னாளில் அதுவே C A என்றுஆனதாக சொல்வார்கள்.
ஆடிட்டர் படி ப்புமிகவும் கடினமானது என்பார்கள். மூன்று ஆண்டுகள் ஒரு ஆடிட்டரிடம் அப்ரென்டிசாக இருக்கவேண்டுமாம்.ஆடிட்டர்கள் அவர்கள்வசதிக்கு ஏற்ப மாணவர்களுக்கு 50-100 என்று சம்பளம் கொடுப்பார்களாம்.
இன்று கதை மாறிவிட்டது.மாணவர்கள் ஆடிட்டருக்கு 50,000-60,000 கொடுக்கிறார்களாம்.
ஒரு மாணவனிடம் தெரிந்துகொள்வதற்காக. இது என்னப்பா படிப்பு என்று கேட்டேன் . மகிழ்சசியோடு சொல்ல ஆரமபித்தான்.
நாட்டின் வளர்சசிபணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றை செய்கிறார்கள் .
ஆனால் நடப்பது வேறு.
ஒரு சிமெண்டு ஆலையில் ஒரு நாளைக்கு 5000 டன் உற்பத்தி என்றால் இவர்கள் கணக்கில் காட்டுவது 3000 டன் மிதி 2000 டன் இயக்குனர்களின் சொந்த கணக்கிற்கு போய்விடும்.. உற்பத்தியின் சிலவு,கூலி ,போக்குவரத்து ,விற்று வரவு எல்லாம் தனி கணக்குக்கு போய்விடும் .இதன் மூலம் கிடைக்கும் லாபம் அரசுக்கு தெரிய வராது>இந்த ஆடிட்டர்கள் கையெழுத்து போட்ட இறுதி கணக்கை அரசு ஏற்கும் . பணம் ரகசியம். ஆரம்பகாலத்தில் பணம் திரைப்படம், போன்ற துறைகளில் ஈடுபடுத்தப்பட்டு வந்தது. இன்று சகல துறையிலும் நடக்கிறது. அரசுக்கு தெரிந்து ஒரு பொருளாதாரம். தெரியாமல் ஒரு பொருளாதாரம் . இதனையே PARALEL பொருளாதாரம் என்கிறார்கள். இதனை கையாள்பவர்கள் தான நாட்டையே ஆளும் நிலைமை உருவாக்கி விட்டார்கள்
இந்த கணக்கில் வராத பணம் டாலர்களாக வெளி நாட்டிலும் ,தங்கம் கட்டிடங்களாக உள்நாட்டிலும் இருக்கிறது. இது அவசர அவசியமாக கண்டிபிடிக்கப்படவேண்டும். கண்டு பிடிக்க அரசுக்கு எத்தனையோ வழிகள் உண்டு.
1 comments:
பேரல்லல்_ இதற்கு ஆங்கில்த்தில் என்ன ஸ்பெல்லிங்?
Post a Comment