Monday, July 10, 2017




மாலைத் தீவும் ,

பாரிஸ் ஒப்பந்தமும் ...!!!





புவி வெப்பமாவதால் ஏற்பட்ட பாதிப்பை தடுக்க பல ஆண்டுகளாக  முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகின் நாடுகள்  அத்தனையும் இணைந்து 2015ம் ஆண்டு ஒரு ஒப்பந்தத்திலகையெழுத்திட்டன . அமேரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் சண்டித்தனம் செய்தன . இறுதியில் வேறு வழியின்றி ஒபாமா இறங்கி வந்தார் .

வளர்ந்த நாடுகள் தங்கள் தொழிற்சாலைகள் மூலமும் தாங்கள் பயன்படுத்தும் பெட்ரோலியப்பொருட்கள் மூலமும் பூமியின் வெப்பத்தை அதிகரித்துள்ளன!

இந்த வெப்பம் அதிகரிப்பதால் துருவப்பகுதியில் உள்ள பனிமலைகள் உருகி கடல்  நீரின்    உயரம் அதிகரித்து வருகிறது.


இந்தியாவிற்கு தெற்கே இந்து மாகடலில் மாலத்தீவு   என்று ஒருநாடு உள்ளது .  கடல்மட்டத்திலிருந்து ஆறு அல்லது எழு அடி  உயரத்தில் உள்ளது .இந்த நாட்டின் பூர்வகுடிகள்  தமிழர்கள் என்கிறார்கள். பின்னாளில்.கேரளம்,தமிழகம்,இலங்கை போன்ற பகுதி மக்கள் இங்கு புலம் பெயர்ந்துள்ளார்கள்.  இங்கு தற்போது வசிக்கும் மக்கள் இஸ்லாமியர்கள் . மொத்தம் 1,33,000 பேர் வசிக்கின்றனர்.

இந்த நாடு இன்னும்முப்பது  அல்லது ஐமபத்து ஆண்டுகளில் காணாமல்போய்விடும். புவி வெப்பமாதலே இதற்கு காரணம் இந்த மக்கள் ஐ.நா  வின் கதவை தட்டி தங்களையும் தங்கள் நாட்டையும் காப்பாற்றுபடி கதறிக்கொண்டிருக்கிறார்கள் ! 

பாரிஸ் ஒப்பந்தம் புவியின் வெப்பத்தை 2* குறைக்க வகை செய்கிறது. இதன் மூலம் மாலத்வுதீ காப்பாற்றப்படலாம்.


இந்தஒப்பந்தை ஏற்றுக்கொண்ட அமெரிக்கா மீண்டும் சண்டித்தனம் செய்கிறது . அமெரிக்க அதிபர் டிரம் இதிலிருந்து விலக தீர்மானித்து விட்டார்.


சமீபத்தில் ஜெர்மனியில் நடந்த g 20 மாநாட்டில் 19 நாடுகள் கேட்டுக்கொண்டும் ட்ரம்ப் மசியவில்லை. 


மாறாக அமெரிக்கர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் பணி  கொடுக்கவேண்டும்.   அமெரிக்காவின் தொழில்சாலைகளை பாதிக்கும் எந்த நடவடிக்கையையும் நாங்கள் ஏற்க மாட்டோம் என்ற ட்ரம்பின்  இரண்டு கோரி க்கைகளையும்  g 20 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன!


g 20 நாடுகளின் வெற்றியாக இது சித்தரிக்கப்படுகிறது .இந்தவெற்றிக்கு மூலகாரணமாக இருந்தவர் நரேந்திர மோடி என்று இந்திய ஊடகங்கள் புகழ்ந்து தள்ளுகின்றன. 


மாலத் தீவு மக்கள் பாவம் ...!!! 


2 comments:

அப்பாதுரை said...

சும்மாவே அமெரிக்கானா உங்களுக்கு வெல்லம்.. இப்ப டிரம்ப் இப்படி நடந்துகிட்டா சும்மா விடுவீங்களா? ஹிஹிஹி.

அமெரிக்கருக்கு முதன்மை தருவதில் ஒரு தவறும் இல்லை சார். முப்பது வருஷத்துல முகத்தில் அடிப்பது போல் பேசும் ஒரு தலைவரை முதல் முறையாக அமேரிக்கா பெற்றிருக்கிறது. டிரம்பின் சாதனைகளுக்காக காத்திருக்கும் என்னற்றவரில் நானும் ஒருவன். கனவாகவே போய்விடாமல் இருக்க வேண்டும். இந்த இடதுசாரிகளின் குறுக்கீடுகள் கடந்து அவர் கொஞ்சமாவது சாதிக்க வேண்டும். அடுத்த ஐம்பதாண்டு கால அமெரிக்கருக்காக. செய்வாரா? செய்ய விடுவார்களா?

kashyapan said...
This comment has been removed by the author.