தலித்துகள் ,
நிர்மலா சீதாராமன் ,
தலித் இலக்கியம் ...
"தலித் ஆக இருந்தாலும் கோவிந்த் அறிவாளிதான் " என்று மொழிந்திருக்கிறார் திருமதி நிர்மலா சீதாராமன். வந்த கோபத்தை அடக்கிக்கொண்டேன் அவர் பெண் என்பதால். இப்படி பேச அனுமதித்ததே நாம் தான். ஆரம்பத்திலேயே தட்டி இருக்க வேண்டும் .
மராட்டி மொழியில்,"கிரௌஞ்ச வதம்" என்ற அற்புதமான நாவலை படித்திருக்கிறேன். எழுதியவர் வி.ச.காண்டேகர் . அவர் எழுதிய "யயாதி " என்றார் நாவலும் முக்கியமானது . அவரை மராட்டிய இலக்கியத்தின் "பிதாமகர் " என்பார்கள். அதேசமயம் லக்ஷ்மன் மானே, லக்ஷ்மன் கெய்க்வாட் ஆகியரின் படைப்புகளை "தலித் இலக்கியம் " என்று வகைப்படுத்துவார்கள்.
"ஸம்ஸகரா"வும், "ஹம்சகிதே"வும் கன்னட இலக்கியம் . U R அனந்தமூர்த்தி கன்னட இலக்கிய படைப்பாளி. சித்தலிங்கய்யா "தலித் இலக்கியம் " படைப்பவர் .
தி.ஜானகிராமனின் "அம்மாவந்தாள் ",சுந்தரராமசாமியின் "ஒரு புளியமரத்தின் கதை " தமிழ் இலக்கியம் .செல்வராஜின் "மலரும் சருகும் " தலித் இலக்கியம் ". இந்தவகைப்படுத்தலை ஆதியிலே கிள்ளி இருந்திருக்க வேண்டும்.
இதில் வேடிக்கை என்ன வென்றால் எழுத்தாளர்களே தங்களை "தலித் எழுத்தாளர்கள் " என்று அழைப்பதை ஒரு அங்கீகாரமாக கொள்வதுதான் .
12 ஆழ்வார்கள் எழுதிய பாசுரத்தில் அய்யங்கார் எழுதியது,பிள்ளை எழுதியது தலித் எழுதியது என்று வகைப்படுத்தப்படவில்லை.
"தேவார"த்தை பிள்ளை,முதலி, அய்யர் என்று வகைப்படுத்தவில்லை .
நவீன தமிழ் இலக்கியத்தை மட்டும் ஏன் அப்படி பார்க்க வேண்டும் ?
0 comments:
Post a Comment