சரக்கு மற்றும் சேவை வரியும் (g s t )
அதன் வசூலும் .....!!!
1962ம் ஆண்டு எனக்கு திருமணம் நடந்தது .முடிந்த நான்கு நாளில் நான் ஹைதிராபாத் வந்து விட்டேன். வந்த மறுநாள் எனக்கு மதுரைக்கு மாற்றலாகி உத்திரவு வந்ததும். நண்பர்கை சிலர் விருந்து வைத்தார்கள். மூன்று கல் வைத்த அரை பவுன் மோதிரம் போட்டார்கள். விலை 31 /- ரூ.
அப்போது பவுன் 60/- ரூ . ஒரு வெள்ளை தாளில் எடை,கிரயம் எல்லாம் எழு தி,கடைக்காரர்,எப்போது கொண்டுவந்தாலும் அன்றைய விலைக்கு எடுத்துக் கொள்வதாக கொடுத்தார் . தங்கம் வாங்கும் போதும் விற்கும் போதும் எவன் வரி கட்டு கிறான் .
எந்த நகை வியாபாரி வரி போட்டு சரியான ரசீ து தருகிறான் . இந்த கொள்ளையில் தங்கத்திற்கு 3% தானா என்று முகநூலில் ஒப்பாரி வைக்கிறார்கள்.
இன்று தங்கம் ஒரு சவரன் விலை 22000 /- ரூ ல் ஊசலாடிக்கொண்டு இருக்கிறது . ஒருபவுன் வாங்கினால் 660 /-ரூ வரி . வாங்குபவனும் சரி விற்பவனும் சரி வரிகட்டப்போவதில்லை. இது நூற்றாண்டு பழக்கம்.
பல பொருட்கள் இப்படி வாங்க விற்க நடைமுறையில் உள்ளது .இதற்கான தனி கணக்குகள் உள்ளன .இதனை தணிக்கை செய்ய நிபுணர்கள் உள்ளனர்.
"மோடி " தணிக்கையாளர் சங்கத்தில் பேசி இருக்கிறார்.
இந்த வரி மோசடியை தவிர்க்க இவர்கள் எதுவும் செய்யப்போவதில்லை .செய்யவும் மாட்டார்கள்.
"சித்தாள் " வேலை செய்யும் பெண் ஓலைப்பெட்டியில் அரிசி,மிளகாய், புளி ,எண்ணை என்று வாங்குபவளிடம் கண்டிப்பாய் வரியை வசூலிப்பார்கள். அந்தவரியையும் அரசிடம் கட்டாமல் கணக்குக்காட்டுவார்கள்.
"விலையை குறை " என்றோம் ! குறைக்கவில்லை !! "
"விலையை ஏற்றாதே "என்றோம் ! ஏற்றினார்கள்.!!
"விலைவாசியை கட்டுப்படுத்து "என்றோம் ! முடியாது என்றார்கள் !!
முதலாளிகளுக்கு மூலதனம் சேர விலை ஏற்றம் ஒரு mechanism !!
"வரி " அதில் ஒன்று !!!
0 comments:
Post a Comment