skip to main |
skip to sidebar
"மங்கள் பாண்டே -எழுச்சி"
திரைப்படம் எழுப்பிய
விவாதம் .....!!!
1857 ம் ஆண்டு நடந்த புரட்ச்சி பற்றி பல்வேறு வகையான வரலாற்று குறிப்புகள் உள்ளன.பிரிட்டிஷ் வரலாற்றாளர்கள் இதனை 'சிப்பாய் கலகம் "என்று வர்ணித்து சிறுமைப்படுத்தினர்.
ஒன்றாய் இருந்த கம்யூனிஸ்ட் கடிசியின் தலைவர் பி.சி ஜோஷி அவர்கள் "இது தான் இந்தியாவின் முதல் சுதந்திர போராட்டம் "என்று வர்ணித்தார்.அரசியல் கடசிகள் அத்தனையும் இதனை ஏற்றுக்கொண்டாலும் "இந்துத்வா " வாதிகள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இந்த எழுசசிக்கு திட்டம் தீட்டி ராஜாக்கள்,நவாபுகள்,ஜமீன்தார்கள் படைவீரர்கள் ,மற்றும் சாதாரண மக்கள்,ஆகியோரை ஓன்று திரட்டி இந்த போராட்டத்தை நடத்தியவர் அஜீமுல்லா கான் என்ற முகம்மதியர் ஆவார் .இதுவே இந்துத்த வாதிகளின் தயக்கத்திற்கு காரணமாக இருந்திருக்கிறது.அதே சமயம் இந்த எழுசியை நிராகரிக்கவும் அவர்களால் முடியவில்லை.அவர்களுக்கே உரிய இரட்டை நாக்குடன் இந்த போராட்டத்தை ஆரம்பித்து அளித்தவர் மங்கள் பாண்டே என்றும்,அதற்கான காரணம் மத சம்மந்தப்பட்டதாகவும் திரித்துக்கூறினர்.சாவர்க்கர் எழுதிய :எரிமலை" என்ற நூலிலிருந்து அண்மையில் அமீர்கான் நடித்து வெளியான "மங்கள் பாண்டே -எழுச்சி " என்ற திரைப்படம் வரை இதே கருத்து வலியுறுத்தப்பட்டது.
"யுக தரண் " என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் சத்யபால் பாடாயித் என்பவர் இவர் அன்றைய ஜான்சங்க அமைப்பின் உறுப்பினராகவும்,ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயல்விரராகவுமிருந்தார்.அஜீமுல்லாகானின் பெயரை தான் சார்ந்த இயக்கம் மறைப்பதையும்மறுப்பதையும் கண்டு வெகுண்டு எழுந்தார். ஆர்.ஆர். யாதவ் என்பவர் மத்தியப்பிரதேசத்தில் உள்ள குவாலியர்,,உ.பி யில் உள்ள கான்பூர் என்று பலஇடங்களுக்கு சென்று வருவாய்த்துறை ஆவணங்களை அலசி ஆராய்ந்து அஜீமுல்லாகான் பற்றிய செய்திகளையும்,உண்மைகளையும் நூலாக எழுதினார்.எழுத்து வடிவத்தில் இருந்த நூலை சதயபால் பாடாயித்திடம் கொடுத்து,பரிசீலிக்கும் படி கேட்டுக் கொண்டார்.ரெங்கோபாபுஜி,அஜிமண் பாயி ஆகியோரின் வீரம் சேர்ந்த செயல்பாடுகளையும் சேர்க்கும்படி பாடாயித் கூறினார். இருவர் பெயரிலும் இது ஒரு பிரசுரமாக 2003 ம் ஆண்டு வெளியிடப்பட்டது.முற்போக்கு பிரசுரங்களையும்,இலக்கியங்களையும் மத்திய இந்தியாவில் பிரசுரம் செய்து வரும் ஆர்.பி.சிங் இதனை வெளியிட்டார் .
"அஜீமுல்லாகானின் திட்டப்படி 1857ம் ஆண்டு மீ மாதம் 31ம் தேதி போராட்டம் என்று முடிவ்வானது.ஆங்கில அதிகாரிகளை கொல்வது கருவூலத்தை எடுத்துக் கொள்வது.அதற்கான அதிகாரத்தையும் எடுத்துக் கொள்வது. ரயில் பாதைகள்,தந்திகம்பங்களை தகர்ப்பது<ஆயு தங்கள் ,குண்டுகள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களை கைப்பற்றுவது . குவாலியர்,கான்பூர், ஜான்சி, எல்லி என்று எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் தாக்குதல்நடத்துவது என்று திட்டம் இந்ததேதி அஜீமுல்லாகான்,தந்தியை தோபே, நானா சாகிப், பகதுர்ஷா,ஜான்சி ராணி ஆகியிருக்கு மட்டுமே சொல்லப்பட்டது"
துரதிஷ்ட வசமாக மங்கள் பாண்டே என்ற சிப்பாய் ஹ்யுங்கன் என்ற ஆங்கிலேய அதிகாரியை மே மாதம் 10 தேதி சுட்டுவிட்டான் .
எழுச்சி மூண்டது. தலைவர்கள் புரட்ச்சியை முன் தேதியிட்டனர் .
இது பற்றிய பிரசுரம் உருது,இந்தியில் வெளியிடப்பட்டது.
மொழிபெயர்ப்பாளர் முத்து மினாடசி இதனை தமிழில் கொண்டுவந்தார் .தோழர் பிரின்ஸ் கஜேந்திர பாபு நூலாக வெளியிட்டார்.
2014ம் ஆண்டு அகிலஇந்திய இன்சூரன் ஊழியர் மாநாடு நாகபுரியில் நடந்தது. தமிழ் நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு இந்த பிரசுரம் இலவசமாக வழங்கப்பட்டது..
0 comments:
Post a Comment