சரசுவதி பூஜையும் ,
முற்போக்கு இலக்கியமும் ...!!!
நான்வசிக்கும் அடுக்ககத்தில் நாற்பது குடும்பங்கள் உள்ளன . வங்காளிகள், பிஹாரி, எம்.பி ,உபி ,மராட்டி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்.என்று இந்தியாவின் சகலப்பகுதி மக்களும் உள்ளனர்.இங்கு வசிக்கும் பெண் களில் முத்துமீனாட்ச்சி முக்கியமானவர்.
காரணம் வயது 75 + ! அது தவிரஅவர்இந்தி,தமிழ்,ஆங்கிலம்,சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் எழுத படிக்க சரளமாகப்பேச முடிந்தவரும்கூட. மேலும் வங்காளி,மராட்டி மொழிகளில் பேசி சமாளிக்கும் அளவுக்கு தெரிந்தவர். அதனால் அவர் இந்த குடும்பங்களின் "டார்லிங் " எனலாம்.
இந்த பெண்கள் நன்றாக படித்த நல்ல பணியில் இருப்பவர்கள் ! இருந்தவர்கள். என் வீட்டிற்கு எதிராக இருக்கும் அம்மையார் பொறியியற் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர். காலையில் முத்துமீனாடசியைப்பார்த்ததும் காலை தொட்டு வணங்குவார். அப்படி ஒரு sentiment உள்ள வர்கள் இவர்கள்.
இவர்கள் கூட்டு வழிபாட்டில் ஈடுபாடு உள்ளவர்கள். எந்த பண் டிக்கையானாலும் குறிப்பாக விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, என்று வந்தால் ஆட்டம் பாட்டம் தான்.
முது மினாடசியை ஒவ்வொரு வீட்டிலும் அழைத்து ஆர்த்தி குங்குமம் அளிப்பார்கள். அதோடு ஏதாவது பரிசுப்பொருளும் கொடுப்பார்கள். கடந்த 15 வருடமாக இது நடந்து வருகிறது. எங்கள் வீட்டில் நீத்தார் நினைவு நாள்கூட கிடையாது .
முத்து மீனாட்ச்சிக்கு இப்போதெல்லாம் ஒவ்வொருவீட்டுக்கும் செல்வது ஆயாசமாக இருக்கிறது.முதுமையும்,இயலாமையும் காரணம்.இந்த ஆண்டு மற்றவர்களை வரவழைத்து ஆர்த்தி குங்குமம் கொடுக்கலாமென்று ஆசைப்பட்டார். அதனை சரசுவதி பூஜை அன்று நடத்தலாம் என்று அபிப்பிராயப்பட்டார். கொலுவைப்பதில்லை அதனால் சரசுவதி பூஜையை எப்படி கொண்டாடுவது என்று யோசித்தோம்.
சரசுவதி பட்த்தினை மாட்டி கொண்டாடலாம் என்று முடிவாகியது.பரிசுப்பொருள் என்ன வாங்குவது என்று இரவு முழுவதுமயோசித்தோம்.
"ஏனுங்க ! செம்மலரில் வந்த கதைகளை இந்தி,ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்த்து செய்த புத்தகங்கள்கொடுத்தால் என்ன ?"என்றார் முத்துமீனாட்ச்சி .
"இது தவிர வங்க மொழியில் ஐந்து,மராத்தியில் நான்கு ,தெலுங்கி பத்துக்கதைகள் பிரசுரமாகியுள்ளன அவற்றின் ஜெராக்ஸ் நகலை எடுத்து ஒருவடிவமாக்கி கொடுக்கலாம் 'என்றும் கூறினார்.
இந்த யோசனை சரியாக தெரிந்தது. காரியங்கள் வேகமாக நடந்தன.
இந்த ஆண்டு செம்மலர் தமிழ்கதைகள் அவரவர் தாய் மொழியில் சரசுவதி அம்மனின் பிரசாதமாக கிடைக்கும் .
"ஏன் மாமா ! சரசுவதி அம்மனை முற்போக்கு எழுத்தாளர் சங்க உறு ப்பினராக்கிவிடுவீர்கள் போல் இருக்கு" என்று என் மைத்துனர் கேட்டார்.
"அதுவும் நடக்கலாம் " என்றேன் நான் !
1 comments:
அருமை
Post a Comment