skip to main |
skip to sidebar
A . I .I .E .A தலைமைக்கு ,
"தியாகம் " என்பது வார்த்தை அல்ல !
வாழ்க்கை !!!
சென்றவாரம் சென்னை சென்றிருந்தேன். முத்த தோழர் ஒருவரை சந்தித்தேன். ஒவர் அருகில் இருந்தஇளம்தோழரைஅறிமுகப்படுத்தினார் "ஐயா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ? " என்று அந்த இளம் தோழர் கேட்டார் 82 வயதான என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி அல்ல !நான் பதில் சொன்னனேன் !
"நான்கு பையன்கள் தம்பி !" என்றேன் .
"டேய் ! ஏண்டா போய் சொல்கிறாய் ! உனக்கு சத்தியமூர்த்தி என்று ஒரு பையன் தானே "!என்றார் 40 ஆண்டுகள் என்னோடு பழகிய அந்த நண்பர்.
"yes ! sathyamoorthy is my biological son ! saroj ,sunil ,sundhram are my idealogical sons ! B ' cause they have takenaway my oldage worries and gave a peaceful retired life "என்றேன்
அவன் என் கைகளை அழுத்தி குலுக்கினான் ! அவன்கண்கள் ஈரமாக இருந்தது.
1996 ம் ஆண்டு நான் ஒய்வு பெற் றேன் 1 அன்று என்னிடம் gratutity ,leavesalary காசோலைகளை கொடுத்தார்கள். Pf காசோலையை சில நாட்களில் அனுப்புவதாக சொன்னார்கள்.
தோழர்களே சரோஜ் ஒய்வு பெற்ற பொது அவருக்கு காசோலை கொடுக்கப்படவில்லை. வீட்டு கடன் பாக்கிக்காக அவர்தான் காசோலை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது. காரணம் ... .நாற்பது ஆண்டு பணியில் அவர் 16 ஆண்டுகள் loss of pay ல் இருந்திருக்கிறார். pay loss மட்டும் சங்கத்தால் மாதாமாதம் கொடுக்கப்பட்டிருக்கிறது. pf , gratuity ஆகியவற்றை யார் கொடுப்பார்கள். leave இருந்தால் தானே salary என்று வரும்.
சரோஜுக்கும், சுனிலுக்கும் பென்ஷன் கிடையாது. கிடைக்காது என்பது அவர்களுக்கும் தெரியும். உனக்கும்,எனக்கும்,அவனுக்கும், அவர்களுக்கும் கிடைக்க போராடிய ஜீவன் கள் அவர்கள்.
ஊ ழியர்களுக்கு பிஎப் ம் கிராஜூடியும் ஆக இரண்டு பலன்கள் உண்டு .மூன்றாவதாக ஓய்வூதியம் வேண்டும் என்று சங்கம் போராடியது . சிலரின் தலையிட்டால் நமக்கு அது கிடைக்க வில்லை , pf ல் நிர்வாகம் செலுத்தவேண்டியதை பிடித்துக் கொண்டு ஓய்வூதியம் தர ஒப்புக்கொண்டார்கள்.
"உங்கள் third benifit என்னஆசசு?" என்று எதிரிகள் ஏகடி யம் பேசினார்கள். தோழர் சுந்தரம்" thirdbenifit கிடைக்கவில்லை என்பது உண்மைதான்ஆனால் இப்போது கிடைத்திருப்பது 2-1/2 பெனிபிட் "என்றார்.
96ம் ஆண்டு என் பிஎப் ல் நிர்வாகத்தின் பாங்கான 1.லட்சம் 80 ஆயிரத்தை பிடித்துக் கொண்டார்கள். கடந்த 22 ஆண்டுகளாக நான் வாங்கிய ஓய்வூதியம் கிட்டத்தட்ட 23 லட்சம் இருக்கும்.
நம் தலைமையின் தீர்க்க தரிசனத்தை என்ன சொல்லி புகழ !
aiiea வின் தலைமை யை என்ன வென்று சொல்ல !!
" தியாகம் "என்பது அவர்களுக்கு வாரத்தை அல்ல !
வாழ்க்கை !!
0 comments:
Post a Comment