அந்ந்...த நாளு ..ம்
வந்ந்..தி டா..தோ !!!
அரவிந்தர் ஆசிரமத்தின் நடவடிக்கை களில் ஆர்வமுள்ளவர் என் மைத்துனி அவர்கள். ஒருமுறை காஞ்சிபுரம் சென்ற பொது புதுசேரிக்கு ஒரு விசிட் அடித்தார்> தோழர் புதுவை ராம்ஜி அவர்கள் தான் உதவினார். ஒரு இரண்டு மணி நேரத்தில் திரும்பவேண்டய நிலை. இருக்க முடியவில்லை.
தற்போதுமீண்டும் போகலாமென்று ஆசைப்படுகிறார். புதுவை ராம்ஜியை தொடர்பு கொண்டேன்.
"தோழர் ! உங்களை நானே நேத்து இரவிலிருந்து தொடர்பு கொள்ள விரும்பினேன் "என்றார் ராம்ஜி!
"அப்படியா ? என்ன விசேஷம் ?"
"த.மு.ஏ.சாவின் 14வது மாநிலமானாடு புதுசேரில நடத்த முடிவாகி இருக்கு !உங்க சவுகரியம் எப்படி னு கேக்க நினைச்சேன் ! "
" கண்டிப்பா வரலாம் னு தான் இருக்கேன் ! வசாயிட்டு ! ஏன் அலையறீங்க ! னு பையன் அங்கலாய்க்கிறான் " இயலாமை கொஞ்சம் அதிகம் தான் கூட முத்து மினாடசி இருக்காங்க ! இருந்தாலும் அவங்களுக்கு 76 ! எனக்கு 82 ! அங்க வந்தா உங்களுக்கு தான் சிரமம் ! அதுதான் யோசிக்கிறேன் ! அதுசரி ! அங்க நம்ம ஆபிசுல கெஸ்ட் ஹவுஸ் இருக்கில்ல ! போட்டுருங்க !
"அதெல்லாம் இருக்கு தோழர் ! நீங்க கவலைப்படாதீங்க ! நாங்க வேற ஏற்பாடு பண்ணிடறோம் !கெஸ்ட் ஹவுஸ் வேண்டாம் " என்றார் ராம்ஜி !
த.மு.ஏ.சவை ஆரம்பித்த கே.எம் அவர்களின் நூற்ராண்டு இது. புதுவை தோழ ர்கள் கொடுத்து வைத்தவர்கள் நூற்ராண்டுவிழாவாக சிறப்பிக்கலாம்.
ஜூன் மாதம் 22.23.24 ம் தேதிகளில் நடத்த முடிவாகி இருக்கிறது.
அந்ந் .. த நாளு ..ம் வந்ந்..தி டா ..தோ !!!
1 comments:
வணக்கம் ஐயா.
Post a Comment