"சென்னை புத்தக கண்காட்ச்சி "
"வால்காவிலிருந்து ...."
800 பிரதி விற்று
"பாரதி ..." சாதனை.!!
சென்னை புத்தக கண்காட்ச்சி முடிந்து விட்டது. சுமார் 800 பதிப்பகங்கள் கலந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு 80 கோடிக்கு புத்தக விற்பனை நடந்துள்ளது .
மிக அதிகமாக விற்ப்பனை செய்துள்ள பதிப்பகங்களை முதல் பத்து இடத்தை இந்த ஆண்டும் பாரதி புத்தகாலயம் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
S .ராமகிருஷணனின் "சஞ்சாரம் " விற்பனையில் முதல் இடத்தை பிடித்துள்ளது அடுத்தபடியாக கம்யூனிசம் அன்றும் இன்றும் என்ற நூலும் தொ.பாரமசிவத்தின் படைப்பும் வந்துள்ளன.
ராகுல் சாங்கிருத்யாயனின் "வோல்காவிலிருந்து கங்கை வரை" என்ற நூல் மூலநூலான இந்தியிலிருந்து தமிழுக்கு மூத்து மீனாட்ச்சி அவர்கள் மொழிபெயர்க்க பாரதி புத்தகாலயம் சென்ற ஆண்டு வெளியிட்டுள்ளது.
இது பற்றி அந்த நிறுவனத்தின் மேலாளர் P . K .ராஜன் அவர்களிடம் உரையாடிய பொது " வால்காவிலிருந்து ... " நல்ல விற்பனை என்கிறார் பாரதி புத்தகாலயம் எழுத்தாளர்கள்,மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியவர்களுக்கு ஓரளவு சன்மானம் கொடுத்து வருவதாக மகிழ்ச்சியோடு கூறினார்.
நிறுவனத்தின் மற்றுமொரு மேலாளர் முகம்மது சிராஜ்-உத்தின் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொது "மிக அதிகமாக "தாய் " நாவலும் "வால்காவிலிருந்து கங்கை வரை " நூலும் விற்பனை ஆனதாக குறிப்பிட்டார்.ராகுல் ஜி யின் நூல் கிட்டத்தட்ட 800 பிரதி விற்றிருப்பதாக கூறினார்.
80கோடி ரூபாய் விற்பனை என்பது சரிதான்.சென்ற ஆண்டை விட இது அதிகம் தான் இந்த அதிக விற்பனை என்பது விலைவாசி எற்றத்தின் காரணமாக இருந்தால் என்ற கேள்வி அடிநாதமாக இயங்கி கொண்டுதான் இருக்கிறது.
புத்தக கண்காட்சிகள் பதிப்பகங்களுக்கு உதவிகரமாக இருக்கின்றன. ஆனால் பதிப்பகங்கள் விரல்விட்டு எண்ணக்கூடியது தவிர அந்த அளவுக்கு எழுத்தாளர்களுக்கு உதவிகரமாக இருப்பதில்லை என்பது உண்மையே.
எழுத்தை மட்டும் நம்பி வாழ்ந்த "க ந சு""சி.சு செல்லப்பா 'புதுமைப்பித்தன் ஆகியோர் நினைவுக்கு வருகிறார்கள். சம காலத்தில் "ஜெயகாந்தன்" மட்டுமே அப்படி ஒரு வாழ்வை வாழ்ந்தார் .
பதிப்பகங்கள் printing industryஆக மாறிக்கொண்டு இருக்கின்றன என்பது உண்மை. இது இலக்கிய வளர்சிக்கு நலம் தருமா என்ற கேள்விக்கு பதில் இல்லை .
"பாரதிபுத்தகாலயம்","கிழக்கு பதிப்பகம் ," ஆகியவை போன்ற பதிப்பகங்கள் நிறைய உருவாக்க வேண்டும்.
பி.கு.: "வால்காவிலிருந்து கங்கை வரை" நூலை இந்தியிலிருந்து தமிழுக்கு மொழிபெயர்த்த முத்து மீனாட்ச்சி அவர்களின் கணவர் தான் காஸ்யபன் என்ற எழுத்தாளர் . இது தகவலுக்காக மட்டுமே !