Saturday, January 12, 2019




"சினிமா விமரிசனம் அல்ல "
















"பேட்ட"வும்,

"விசுவாச"மும் ....!!!



கர்நாடகாவில் தனக்கு வேண்டிய நடிகருக்கு வாழ்த்து சொல்ல முடியாததால் ஒரு ரசிகர் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்தி.

" படம் பார்க்க காசு தரவில்லை என்பதால் தந்தையின்மிது பெட்ரோல் வீசி தீவைக்க ஒரு ரசிகர் முயன்றிருக்கிறார் .

முதல் நாள் முதல்காட்ச்சி பக்க முடியாததால் தற்கொலைமுயற்சி.

இவங்க எல்லாம் இந்தக்கதாநாயகர்களின் ரசிகர்கள். இந்தநாயகர்களை அடித்து,வெளுக்கும் போதாவது இது குறையுமா என்று எண்ணத்தோன்றுகிறது .இந்தப்பிரசினை பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டு வருகிறது .

புனே பிலிம் இன்ஸ்டிடியூட் இது பற்றி விவாதித்துள்ளது> 80 களில் இவர்கள் நடத்திய பயிற்சி முகாமில் கலந்து கொண்டவன் நான்>இறுதி நாளில்,நிமாய் கோஷ்,பி.கே.நாயர், சதிஷ் பகதூர் ஆகியோர் கையெழுத்திட்ட சான்றிதழ் கொடுத்தார்கள் .நான் ஒரு இடது சாரி பத்திரிகையின் சார்பாக வந்தவன் என்பதால் சதிஷ்   என்மீது மிகுந்தபாசம் காட்டுவார்.அவர் ஒரு தீவிர இடது சாரி.

"தோழர் ! நீங்கள் இனி டீ  கடையில நண்பர்களுடனோ பேசும்போது உங்கள் பேச் \சு வித்தியாசமாக இருக்கும், காமிரா,மிட்ஷாட் ,லாங்ஷாட், காம்போசிஷன் என்று வார்த்தைகளை பிரயோ கிப்பீர்கள் ..பார்வையாளர்கள் உங்களை திரைப்படத்தின் முக்கியஸ்தராக கருதி மரியாதை கொடுப்பார்கள் ,நாங்கள் அதற்காக உங்களுக்கு ரசனை வகுப்புகளை நடத்தவில்லை. இளைஞர்கள் திரைப்பட மோகத்தில் கெ ட்டு குட்டிசுவராகி  வருகிறார்கள்> அவர்களை அந்த போதையிலிருந்து அப்புறப்படுத்தவே இந்த வகுப்புகளை நடத்துகிறோம்" என்றார்.

"பள்ளிகளுக்கு செல்லுங்கள்.கல்லூரிகளுக்கு செல்லுங்கள் .அந்தமானவர்களுக்கு இது ஒரு விஞ்சான வளர்சியின்  பரிணாமம்> தகவல் தொடர்பு சாதனத்தின் அடுத்த அ டி என்பதை சொல்லி அவர்கள் போதையை தெளியவையுங்கள்.ஒவ்வொருமாதமும் எந்தனைமானவர் களை சந்தித்தீர்கள் என்று எனக்கு தகவல் தாருங்கள்" என்றார் .

ஆசிரியர் கூட்டணி மூலமும் . muta மூலமும் மாணவர்களை சந்தித்து வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன்.

திரைப்பட ரசனை வகுப்பு என்று அழைக்காமல் திரைப்படம் பற்றி காஸ்யபன் பேசுவார் என்று அழைத்தோம்.

அவர்களிடம் கேள்விகளை கேட்டு கற்றுக்கொடுத்தோம்.

6ம் வகுப்பிலிருந்து 12ம்வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வருவார்கள்.

"திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் முதலில் என்ன வேண்டும் ? என்று கேட்பேன்.

ஒருமானவன் காசு என்பான்.நடிகர் என்பான் பாடல் என்பான்> இப்படி  அவர்கள் சொல்லிக்கொண்டேபோவார்கள்> அவர்கள் சொல்லி முடித்ததும். நான் கூறுவது சரியா என்று சொல்லுங்கள் என்பேன்.

நிசப்தமாக மிகவுமக்கரையோட நான் என்ன சொல்லப்போகிறேன் என்று இருக்கும் பொது "மின்சாரம்" என்பேன்.

ஓ என்ற இறைசலும்,கைதட்டலும் காதை ப்பிளக்கும் .தமிழகத்தில் காமராஜர் வந்து  மின்சாரமயமாகிய பிறகுதான் திரை  அரங்குகள் அதிகம் வந்தன. திரைப்படம் என்பது ஒருவிஞ்ஞான தொழில் நுணுக்க புர ட்ச்சி என்று விளக்குவேன். 

திரைப்படம் என்பது sound and lisht ன் கலவை அது இல்லாமல் திரைப்படமில்லை என்று ஆரம்பித்து,தகவல் தொடர்பின் வளர்ச்சி பற்றி  விளக்குவேன். எம் .ஜி ஆர்,சிவாஜி,ஜெமினி என்று கேட்கவந்த மாணவர்கள் இந்த புதிய பாடத்தைப்பற்றி அறியும் ஆவலில் வருவார்கள். 

கல்லூரிகளிலும் மாணவர்களை அழை த்து வகுப்பு எடுத்துள்ளேன்.கிட்டத்தட்ட 70  வகுப்புகள் நான்கு  ஆண்டுகளில் எடுத்தேன்.அதுமட்டுமல்லாமல் தமு..எ சங்கத்தின் மூலம் மதுரை,நெல்லை ஆகிய இடங்களில் சதிஷ் பகதூரை வரவழைத்து ரசனை வகுப்புகள் நடத்தினோம்.

வேலைப்பளுவும் இயலாமையும் மேற்கொண்டு செயல்படாமல் தடுத்து விட்டன. தீக்கதிர் ஆசிரியர்.அ .குமரேசன், டாகடர் .ரவிக்குமார் ஆகியோர் செயலூக்கத்தோடு இருக்கிறார்கள் .இந்த ரசிகர்கள் கூட்டத்தை அவ்ர்களைப்போன்றவர்கள் மாற்ற முயற்சிக்கலாம் . அல்லது அவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்து இந்தப்போதையை தெளிவிக்க ஆசிரியர்களை உருவாக்கலாம் .

த.மு.எ க சங்கத்தின் தலைமைக்கு இதை என் ஆலோசனையாக வைக்கிறேன். 


0 comments: