skip to main |
skip to sidebar
பன்றியொடு
பசுங்கன்று !!!
அப்போது அந்த பெண் கவுசல்யாவிற்கு 19 அல்லது 20 வயது இருக்கலாம் உடல் வளர்ச்சி இருந்தாலும் மனதளவில் ஒரு சிறுமிக்கு உள்ள மன முதிர்ச்சி தான் இருக்கமுடியும். இந்தவயதில் அவருக்கு கிடைத்த எதிர்மறை அனுபவம் கொடூரமானது/
காதலித்து,பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் நடந்து ,பட்டப்பகலில் நடுவீதியில் கணவன் வெட்டி கொலை செய்யப்படுவதை கண் எதிரில் பார்த்து தடுக்க முயன்றதில் படுகாயப்பட்டு - அப்பப்பா ....
உலகமே இந்த காட்ச்சியை பார்த்து நடுங்கி யது .அபலையான அவரை சில இயக்கங்கள் ஆற்றுப்படுத்தி மீண்டும் மனுஷியாக்கியது சாதாரணமான விஷயமல்ல .தன வாழ்வை சிதற \டித்த தன தந்தை தாயாருக்கு சிறைத்தண்டனை வாங்கிக்கொடுக்கும் அளவுக்கு அவரை போராளியாகஉருவாக்கிய வர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக மனதை தேற்றிக்கொண்டு ஆணவக் கொலையையும்,பெண்கள் முன்னேற்றத்தையும் முன்னிறுத்தி செயல்பட ஆரம்பித்த கவுசல்யாவை தமிழகம் போற்றிப்புகழ்ந்ததும் உண்மைதான்.
சமீபத்தில் கவுசல்யா திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வந்த பொது அதை மனதார விரும்பி பார்த்த லட்சக்கணக்கானவர்களில் நானும் ஒருவன் .23 வயதில் அந்தப்பெண்ணுடைய வாழ்க்கை முடிந்து விடவில்லை .பொது வாழ்க்கையில் அவர் ஈடுபட்டு பல உயரங்களை தொட வேண்டும் அதே சமயம் அவருக்கு முன்னால் அவருக்கு என்று தனியான வாழக்கை உள்ளது என்பதை உணர்த்தியவர்கள் நன்றிக்கு உரியவர்கள் .
கவுசல்யாவுக்கும் -சக்தி என்பவருக்கும் நடந்த மறுமண நிகழ்ச்ச்சி எந்த சலனத்தையும் ஏற்படுத்தி இருக்கப்போவதில்லை. ஆனால் அவரை ஆதரித்த இயக்கங்கள் இதனை விளம்பரப்படுத்தியது தான் சிக்கலை உருவாக்கியது .சக்தி பற்றிய அவரது தனிப்பட்ட வாழ்க்கை பகிரங்கமாக விவாதிக்கப்பட்டது . சக்திக்கு இதற்கு முன் இருந் தொடர்புகள் பகிரங்கமாகின .திருநங்கை உட்பட பல பெண்களோடு அவருக்கு தொடர்பு இருந்ததுஅலசப்பட்டது .ஒரு பெண்ணை காதலித்து கற்பமாக்கியதும் ,அந்த கற்பத்தை கலைக்கச் செய்ததும் வெட்ட வெளிசத்திற்கு வந்தன.
இந்த விஷயங்கள் மறு மணத்திற்கு முன்பே கவுசல்யாவிற்கு தெரியும் என்பது அதிர்ச்சி அளிப்பதாக இருந்தது.
மறுமணத்தை நடத்தியவர்களான குளத்தூர் மணி கதிர் போன்றவர்களுக்கும் இது தெரியும் என்றபோது கோபம் தான் ஏற்பட்டது>
ஒரு அபலையின் வாழ்க்கையை சீரமைக்க இன்னொரு அபலையை உருவாக்கிவிட்டார்களே !
பெரியார்சிலையையும்,அம்பேத்கார் சிலையையும் உடைக்க வேண்டாம் !
இந்தக்கொள்ளையில் சக்தி-கவுசல்யா மறுமணம் பற்றி பஞ்சாயத்து வேறு செய்திருக்கிறார்கள்.
தோழர் லெனின் மகளை மணந்து ,அவர் உயிரோடு இருக்கும் போதே வேறு பெண்களோடு தொடர்பில் இருந்த அந்த வீரம் செறிந்த போராளி பஞ்சாயத்து செய்தாராம்.
பெரியாரியத்தையும், அம்பேதகரியத்தையும் இதைவிட கேவலப்படுத்தமுடியாது !
நல்ல காலம் !
மார்க்ஸ் தப்பினார் !!!
0 comments:
Post a Comment