"காலா " படமும் ,
த.மு,எ ..கலைஞர்கள் சங்கத்தின் ,
விருதும் "!!!
70ம் ஆண்டுகளில் மதுரையில் திரைப்பட இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது தோழர் ஸ்ரீதர்ராஜன்,வெங்கடேசன்,வக்கீல் சுரேஷ் போன்ற இடது சாரி சிந்தனை உள்ளவர்கள் "யதார்த்த பிலிம் சொசைட்டி " என்று ஆரம்பித்தனர் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான,ஹங்கேரி,போலந்து, செகேஸ்லேவியா ,சோவியத் நாடு, ஜப்பான் பிரான்சு , குயூபா ஆகிய நாட்டு படங்களை திரையிடுவது அதன் நோக்கம் .
இந்த சொசைட்டியின் அகில இந்துதலைமையில் , மேற்குவங்கத்தை சேர்ந்த சத்யஜித் ரே ,மிருணாள்சென் ,நிமாய் கோஷ் என்ற முற்போக்கு சிந்தனையாளகர்கள் இருந்தனர்.. அற்புதமான படங்களை திரையிட்டும்பார்த்தும் மகீழ்ந்தோம்.இந்த சொசைட்டியில் நானும் உறுப்பினராக இருந்தேன். இதற்கு மிகவும் உதவியாக புனே திரைப்பட கல்லூரி இருந்துவந்தது.
அப்போது இருந்த சோஷலிச வாலிபர் முன்னணி யினருக்கு இந்த படங்களை திரையிட்டு காட்ட விரும்பினேன். இன்று சென்னையில் மூ த்த பத்திரிகையாளராக இருக்கும் சிகாமணி உதவியில் மேல மாசி வீ தியில் ஒரு ரைஸ் மில்லில் திரையைக்கட்டி Battle ship Potomkin என்ற படத்தை போட்டோம். ஆங்கிலத்தில் உள்ள subtitle ஐ கையில் ஒரு மைக்கை வைத்துக் கொண்டு தமிழில் நான் சொல்ல அணியினர் ஆரவாரத்துடன் அதனை ரசிக்க ஆரம்பித்தனர்.
இடது சாரி தலைவர்களிடம் இதனை சொல்லி நாமும் ஒரு திரைப்பட சொசைட்டி ஆரம்பிக்கும் யோசனையை சொன்னேன்.மிகவும் இறுக்கமாகஇருந்த காலம்.அவர்களும் அப்படியே இருந்து விட்டனர்.
1975ல் த.மு.எ சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதில் நானுமொரு செயல்பாட்டாளனாக இருந்தேன். திரைப்பட இயக்கத்திற்கு இதனைப்பயன்படுத்த முனைந்தேன்.
திரைப்பட கல்லூரி அந்த ஆண்டு திரைப்பட ரசனை வகுப்பு நடத்தியது. மதுரையிலிருந்து சிலரை அனுப்புமாறு கேட்டிருந்தது .தமுஎசவின் தலைவரான கே.எம் அவர்களிடம் குறிப்பிட்டேன்.
"போங்க ! காஸ்யபன்! எதிரியின் கலை ஆயுதங்கள் அத்தனையையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும் போய்வாருங்ககள்." என்றார்"!
நிமாய் கோஷ,பிகே .நாயர்,சதீஷபகதூர் ,ஆகியவர்களோடு தொடர்பு ஏற்பட்டது.
அன்றய நிலையில் திரைப்படம் என்றாலே பெரியவர்கள் கம்பை எடுத்து அடிக்க வருவார்கள்> இருந்தாலும் நான் என்முயற்சியை விடவில்லை.
எழுத்தாளர் சங்கம் இலக்கிய விருது வழங்கும் திட்டத்தை கைக்கொண்டது>இது எழுத்தாளர் சங்கத்திற்கு அப்பாலிருந்து எழுத்தாளர்கள்,கலைஞர்கள் ஆகியவர்கள்நம்மை நிமிர்ந்து பார்க்கசெய்தது>
கோமல் சுவாமிநாதன், அன்னம் மீரா ,பாலு மகேந்திரா ஆகியோர் நம்மோடு இணைந்து செயல்பட துவங்கினர் . அப்போதைய ஆட் சி யில் திரை ப்படங்களுக்கான super தணிக்கை முறை அறிவிக்கப்பட்டபோது தமு எ சங்கம் களத்தில் இறங்கி போராடியது .இந்த போராட்டத்தில் நம்மோடு திரை உலக கலைஞர்கள் நெருக்கமாக செயல்பட்டனர்.
திரைப்பட விருது கொடுக்கும் முடிவும் எடுக்கப்பட்டது . நம்மோடு கமல்ஹாசன்,பாலு மகேந்திரா கோமல் ,நாசர் என்று பலர் நெருக்கமானார்கள்.
பாலு மகேந்திர மாநிலக்குழு சிறப்பு அழைப்பாளராக பணியாற்றினார்கோமல் சங்க மாநில துணைத்தலைவராக இருந்தார் இன்று இந்த விஷயத்தில் சுணக்கம் உள்ளது .
ஆனாலும் திரைப்பட விருது ஆண்டு தோறும் வழங்குவது நிறைவாகவே உள்ளது .
தேர்ந்து எடுக்கும் படங்களை மீது விமரிசங்கள் வரத்தான் செய்யும்."பம்பாய் " திரைப்படம் விருதுக்காக சொன்ன போது முத்த எழுத்தாளர் ஒருவர் கடுமையாக எதிர்த்த கதையும் உண்டு. கலை இலக்கிய துறையில் ரசனை என்பது ஒருகட்டத்தில் ,அடிப்படையில் தனிநபர் ரசனையை பொறுத்தது.
"காது உள்ளவர்களை எல்லாம் இசையை ரசிப்பதில்லை. You must have not only an ear but it must be a musical ear " என்பார் மார்க்ஸ்.
எது எப்படி இருந்தால் என்ன ? இறுக்கமான நிலை தளர்ந்து இன்று திரைப்படம் பற்றி காரசாரமாகவும் .ஆக்க பூர்வமாகவும் விவாதிக்கிறோமே !
இந்த கிழவனுக்கு இது போதும் சரவணா !!!
0 comments:
Post a Comment