skip to main |
skip to sidebar
முற்போக்கு என்றால் என்ன ?
முற்போக்காளர்கள் யார் ?
18ம் நுற்றாண்டின் இறுதியிலும் 19ம் நுற்றாண்டின் ஆரம்பத்திலும் இங்கிலாந்து நாடு நிலப்பரப்புத்துவத்தின் உச்சத்தில் இருந்தது. அதன் அடிவயிற்றில் முதலாளித்துவம் கிளைபரப்பி மரமாக வளர்ந்து கொண்டிருந்ததை அது உணரவில்லை.
இந்த புதியபாதையை அறிவு ஜீவிகள் வரவேற்றனர் . அறிவியலும் தொழில்நுணுக்கமும் பரவலாக வளர்ந்தது . அதன் காரணமாக பொருள் உற்பத்தி அபரிமிதமானது. நிலப்பிரபுத்துவம் இது தன்னால் ஆனது என்று மார்தட்டிக்கொண்டது. இந்த வளர்ச்சி (progress ) என்னுடையது என்று அதனை பயனை நிலப்பரப்புக்கள் எடுத்துக்கொண்டனர்.
இல்லை ! இதன் பயன் பண்ணை அடிமைகளுக்கும்,பாடுபடும் உழைப்பாளர்களுக்கும் பங்காக இருக்கபேன்டும் என்று ஒருபகுதி அறிவுஜீவிகள் (progressives )குரல் எழுப்பினர்.இந்த அறிவுஜீவிகள் பெரும்பாலும் கவிஞர்களாக,கலைஞர்களாக எழுத்தாளர்களாக இருந்தனர்.
பிரிட்டன் பாரம்பரிய மிக்க நாடு .அதன் மரபை மீறக்கூடாது .பழைய சமூக அமைப்பு தான் சிறந்ததுஎன்று பழமை வாதிகள் குரலெழுப்பினர்.
முற்போக்கு (progress ) என்றும் முற்போக்காளர்கள் (progressives) என்றும் வகைப்படுத்தப்பட்டனர்.
பழமைவாதிகள் பிற்போக்காளர்கள் என்று வகைப்படுத்தப்பட்டனர்.
இந்த மோதல்கள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் பெரும் மாற்றத்தை கண்டது . பிரஞ்சு புரட்சி முற்போக்காளர்கள் சிந்த்னையை வளர்த்தெடுத்தது. மெலிதாக சோசலிசம் என்ற தென்றல் அவர்கள் சிந்தனையில் புகுந்தது . சோவியத் புரட்ச்சி இதன் மேலும் வலு வாக்கியது.
1935ம் ஆண்டு இங்கிலாந்தில் முற்போக்கு எழுத்தாளர்கள்சங்கம் உருவாகியது அதனை அறிக்கையில் சோசலிசம் ஒரு குறிக்கோளாக பொறிக்கப்பட்டது.
இதற்கு சரியாக ஓராண்டு கழித்து 1936ம் ஆண்டு என்பரால் மாதம் பண்டித நேருவின் ஆசியோடு கம்யூனிஸ்ட்கட்ச்சியின் ஆதரவாளர்கள் இந்திய முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தனர்.
அதன் முதல் தலைவராக உருது எழுத்தாளர் பிரேம் சந்த் தேர்ந்தெ டுக்கப்பட்டார் .
இந்த முயற்சிக்குமுன்கை எடுத்தவர்கள் உருது எழுத்தாளர்கள் என்பதும் அவர்களில் பொரும்பானமையினர் இஸ்லாமியர்கள் என்பதும் குறிப்பிட்ட வேண்டிய ஒன்றாகும்.
2 comments:
நல்ல பகிர்வு
நல்ல பதிவு
Post a Comment