E . M .Joseph
நினைவாக ...!!!
E .M .Joseph என் குடும்ப நண்பன். கூட்டாளி. சக தோழன் .அவனின்றி நான் அலுவலகம் சென்றதில்லை..
கால 9.50க்கு என்வீட்டிற்கு வந்து விடுவான். இல்லை என்றால் நான் அவன் வீ ட்டிற்கு சென்று விடுவேன்.
என்வீட்டில் பாயாசம் என்றால் அவன் ஒரு "மடக்கா"வது குடிப்பான். அவன் வீ ட்டில் இருந்து கேக் பிஸ்கட் என்று வரும். அவன் பெற்றோர் தென் மாவட்டத்து காரர்கள் .சங்கிலி முறுக்கும் ,அதிரசமும் அவன் தாயார் எனக்கு கொடுத்து அனுப்புவார்கள். ருசித்து சாப்பிடுவேன்.
எங்கள் LIC காலனியில் 60 விடுகள் இருக்கும். தீபாவளி போன்ற பண்டிகையின் பொது ஜோசப் வீட்டிற்கு நாங்கள் இனிப்பு பணியாரங்களை அனுப்புவோம்.
கிறிஸ்துமஸ் போது அவன் அனுப்புவான். அவனுக்கு மூன்று மகள்கள். அவர்களிடம் கொடுத்து அனுப்புவான் .இப்போதெல்லாம் அவனே கொண்டுவந்து கொடுக்கிறான். கேட்டால் " புள்ளங்க பெரிசாயிடுத்துப்பா .ஒவ்வொரு வீட்டுக்கும் போகவெக்கப்படுத்துங்க "என்பான்.
அந்த ஆண்டு என்மகளிடம் தீபாவளி பட்சணம் கொடுத்து அனுப்பினேன். அவன் வீ டு பூட்டி இருப்பதாக சொல்லி திருப்பி கொண்டுவந்து விட்டாள் என்மகள். எனக்கு பொறிதட்டியது "avoid பண்ணுகிறானோ" .. எனக்கு கோபம் தான்.
அவன் சீட்டிற்கு சென்றேன். காண்டினில் இருப்பதாக சொன்னார்கள் .
"ஜோசப் ! "என்று இறைந்து கூப்பிட்டுக்கொண்டே காண்டின் பொனேன்.
எல்லாரும் திரும்பி பார்த்தார்கள் .
"ஏம்பா ! தீபாவளி பணியாரம் வேண்டாமானா சொல்லிடு. அதுக்காக நுறு ரூபா செலவழித்து குடுமபத்தோட சின்னமானுர் ஓடிப்போகணுமா"?
அதிர்ந்து போன ஜோசப் "வாப்பா ! மெல்ல பேசு. எல்லாரும் கவனிக்கிறாங்க "
"கவனிக்கட்டுமே ! ஒன் லட்சணம் தெரியட்டுமே !"
"இல்லப்பா ! பிள்ளைங்க பெரிசாயிட்டுது. நாந்தான் ஒவ்வொரு வீ டா கொண்டு கொடுக்க வேண்டியதா இருக்கு."
"ஒன் கிறிஸ்துமஸ் கேக்குதுக்காகத்தான் நான் பட்சணம் கொடுக்கேனா?"
"இல்லை சாமா !கேளேன் ?"
"என்னத்த கேக்க ! இது சரியில்ல டே "
"சாமளம் ! நீ தபாவளிக்கு ஒரு இனிப்பு தன திம்பே ! நான் 60 வீட்டிலிருந்து வகைவகையா திங்கறேன்."
"அதனால தான் ஒடி போனாயா"
"நீங்க அறுபது பேர் ! நான் ஒத்தன் ! "
"மளுக்" கென்று என் இதயத்தில் சத்தம் கேட்டது.
மெதுவாக சொன்னான் "நாங்க கொஞ்ச பெரு !அறுபது வீட்டுக்கும் ஏறி இறங்க முடியல.ஒங்க அபரிமிதமான அன்பைக்கூட எங்களால் தங்க முடியப்பப்பா ."
அவனைப்பார்த்தேன். அழுதுவிடுவானோ என்று தோன்றியது.
மெதுவாக படியிறங்கி என் இடம் வந்தேன் !!!
இதையே ஒருகதையாக்கி செம்மலருக்கு அனுப்பினேன்.1988ம் ஆண்டு அதனை பிரசுரித்தார்கள். ஜோசப் என்பதற்கு பதிலாக மரியதாஸ் என்று மாற்றினேன்.
ஜோசப் ! தோழனே ! நீ என் இலக்கிய படைப்பிலும் வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய் !!!
\\
0 comments:
Post a Comment