Thursday, August 01, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )




"ஜெயந்தன் " எழுதிய ,

"நினைக்கப்படும் "

நாடகம்...!!!




மதுரை "பீப்பிள்ஸ் தியேட்டர் "குழுவினர் தஞ்சையில் நடந்த இரண்டாவது நாடக விழாவில் ஜெயந்தனின் "நினைக்கப்படும்" நாடகத்தை அரங்கேற்றினார்கள். இந்தவிழாவை மணியரசன் அவர்கள் முன்னின்றுநடத்தினார்கள்.

அப்படியானால் முதல்நாடக விழா எப்போதுநடந்தது என்று கேள்வி எழலாம். 1977ம் ஆண்டு த.மு.ஏ சங்கத்தின் செயற்குழு மாவட்டம் தோறும்  நாடகுழுவினைஉருவாக்கவேண்டும்.நாடகவடிவத்தையும்பயன்படுத்தி சங்க கலைஞர்கள் உற்சாக படுத்த  வேண்டும் என்று முடிவு செய்தது.

மதுரை. கோவில்பட்டி, திருப்பூர் சென்னை என்று பல குழுக்கள் இதில் பங்கு  பெற்றன. ஒவ்வொரு குழு பற்றியும் தனியாக எழுத இருக்கிறேன்.

ராமானுஜம்,எஸ்.பி சீனிவாசன் ஆகியோர் வகுப்புகளை நடத்தினர். நாடகம்,திரைப்படம் ஆகிய இரண்டும் எப்படி வடிவத்தில் வித்தியாசப்படுகிறது என்பது பற்றி காஸ்யபன் கருத்தரங்கத்தில் பேசினார்.இறுதி நாளன்று சௌராஷ்டிரா பள்ளியில் பீப்பிள்ஸ் தியே ட்டர்சாரின் நாடகம் நடந்தது.  

தஞ்சை  விழாவின் பொது பல மாவட்டங்களிலிருந்து குழுக்கள் தங்கள் படைப்புகளை அரங்கேற்றின . பற ம்பை செல்வன் ஓர் Mime நாடகத்தைக்கொண்டு வந்தார். இதில் ஜான்சன்,பறம்பை,கந்தர்வன் ஆகியோர் நடித்தனர்.

கோவில்பட்டி "தர்சனா" குழுவினர் தங்கள் படை ப்பை முன்வத்தனர். கொண ங்கி,ராமசுப்பு, உதய சங்கர்,  தமிழ்ச்செல்வன், நாறும் பு நாதன் என்று பலர் பங்கு பெற்றனர்> மகா பாதத்திலிருந்து ஒரு காட்ச்சிய போட்டதாக நினைவு.

தணிகைச்செல்வன் செங்கை தோழர்களை பயன்படுத்தி ஒரு புராண மறுவாசிப்பு நாடகத்தை நடத்தினார்.

சகஸ்ரநாமம், பிரசன்னா,ராமானுஜம் ஆகியோர் பங்கு அளித்தனர். 

 

0 comments: