Wednesday, July 31, 2019

(நாடக விழாவை முன் நிறுத்தி )



"கே.எம்." அவர்கள் எழுதிய ,

"புதிய தலைமுறை "

நாடகம் .....!!!



1975 மாண்டு ஜூலை மாதம் 12 ம் தேதி  மதுரையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உதயமாகியது .அதன் ஆயத்த மாநாட்டில் தீக்கதிர் ஆசிரியர் கே>முத்தையா அவர்கள் எழுதிய "புதிய தலைமுறை "என்ற நாடகத்தை பீப்பிள்ஸ் தியேட்டர் காரர்கள் அரங்கேற்றினார்கள். 

சனாதன தர்மத்தில் ஊரிய புரோகிதர் அவர். அந்தணர்களை வீடுகளில் புரோகிதம் செய்து கடினமாக வாழ்க்கையை நடத்தி  வருகிறார் . அவர் மகன் பரந்தாமன்> அப்பாவி.பயந்த சுபாவம் உள்ளவன். அவனையும் புரோகித தொழிலுக்கு பழக்கி வருகிறார்.

தந்தைக்கு அடங்கி நடப்பவன் பரந்தாமன். "துஷ்டனை கண்டால் தூரவிலகு "என்று போதிக்கப்பட்டவன் .

அவன் பக்கத்தி வீட்டில் வக்கீல் ஒருவர் வசிக்கிறார்.அவருடைய மகள் இளம் விதவை .நல்ல படிப்பும் துனிச்சலும் உள்ள பெண்.வீட்டின் முலையில் உக்கார வைக்கப்ப்டுகிறாள். பரந்தாமன் வக்கீல் வீட்டிற்கு சென்று அவருக்கு உதவிகளை செய்வான். அவனுக்கு உள்ள ஒரே ஆறுதல் வக்கீலின் மகளோடு பேசி உலக விஷயங்கள் தெரிந்து கொள்வது தான் .அவர்களுக்கு இடையே ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது.

அந்த பெண் பரந்தாமனை அழைத்துக்கொண்டு பட்டணம் சென்று புதிய வாழக்கையை நடத்துகிறாள் .பரந்தாமன் பட்டணத்தில் ஒரு தொழிற்சாலையில் பணியாற்றுகிறான் . தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டு மாறி வாழ்க்கையை சந்திக்கிறான்.

இந்தநாடகத்தில் புரோகிதர் பாத்திரமும்,பரந்தாமன்  பாத்திரமும் மிகவும் வித்தியாயசமாக படைக்கப்பட்டிருந்தது. புரோகிதருக்கு கண் அறுவை சிகிச்சை நடக்கிறது.ஆசாரமான அவர் மறுநாள் காலை குளிக்கிறர் .இது அவர் உடலை பாதிக்கிறது .கே.எம்.அவர்கள் இந்த பாத்திரத்தை காஞ்சி பெரியவர் சாயலில் படைத்திருப்பார்.

இந்த நாடகத்தை காஸ்யபன் இயக்கி இருந்தார். ராஜகுணசேகர் இசை அமைத்திருந்தார். "நான் வாழ்ந்து காட்டுவேன் "என்று வக்கீலின் பெண் பாடும் பாடல் புகழ் பெற்ற ஒன்றாக மாறியது.

 மதுரை மில் தோழலாளியான  துரைராஜ் இதில் சிறப்பாக செய்திருப்பார்.

 அப்பாவியான பயந்த பரந்தாமனாக காஸ்யபன் நடித்திருந்தார். அப்பாவி யாகவும்,பயந்தவனாவும் அன்று நடித்து வந்த டி .ஆர். ராமசந்திரன் பாணியில் காஸ்யபன் நடித்து அந்த பாத்திரத்துக்கு மெருகேற்றினார்.

அவர்நாடிப்பை பார்த்த இயக்குனர் ஆர்.செல்வராஜ் தான்  இயக்கிய "புதியஅடிமைகள் " படத்தில் காஸ்யப்பனை நடிக்க வைத்தார் . 

தமிழகம் முழுவதும் சுற்றி வந்த வெற்றிகரமான நாடகங்களில் இதுவும் ஒன்று.

 


  








0 comments: