Sunday, January 12, 2014
Friday, January 10, 2014
விலை உயர்வுக்கு அடித்தளம் போட்டவர்
வாஜ்பாயும், பா.ஜ.க வும் தான் ............!!!
வாஜ்பாய் தலைமையில் ஆட்சி உருவான பின்னர் தான் விலைவாசி 18% சதமாகி இரட்டை இலக்கத்திற்கு வந்தது !
காய்கறி விலை 110 சதம் உயர்ந்தது !
வெங்காயம் 700 சதம் உயர்ந்தது !
2000 ம் ஆண்டு சமையல் எரிவாயு 146 /-ரூ யாக இருந்தது ! ஒரே ஆண்டில் இரண்டு முறை விலையை உயர்த்தி 232/-ரூ யாக்கினவர் புண்ணியவான் வாஜ்பாய் தான் !
1991ம் ஆண்டு தாராளமயம் வருவதற்கு முன் 3300 பொருட்களுக்கு இறக்குமதி செய்ய தடை இருந்தது !
மதுரையில்கட்சிகளின் ஊர்வலம்னடக்கும்! தொழிற்சங்க ஊர்வலம் ,இடது சாரிகள் ஊர்வலம் நடக்கும் ! நாங்களும் கலந்து கொள்வோம் !
வடக்கு மாசிவீதி முடிந்து கீழ மாசிவீதி திரும்பினால் எங்களுக்கு "சாமி"
பிடித்துவிடும் !" பதுக்கல்காரர்களைகைது செய் ! பதுக்காதே பதுக்காதே உணவுப் பொருட்களை பதுகாதே "என்று தொண்டை நரம்புகள் புடைக்க கோஷமிடுவோம் !
( கீழ மாசி வீதியில்தான் பலசரக்கு மொத்தவியாபார கடைகளிருந்தன )
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சட்ட திருத்தம்கொண்டுவந்தார்கள் ! 50000 டன் வரை சரக்குகளைகிட்டங்கியில்வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினார்கள் !
விளக்கெண்ணை 40/- ரூ யாக இருந்தது 80/-ரூ ஆயிற்று !
உளுந்து 30/- ரூ 70/- ஆயிற்று !
4/-ரூ யாக இருந்த வெங்காயம் 60 /-ரூ ஆயிற்று !
இறக்குமதிக்கு தடை இருந்தது !
1-4-2000 அன்று 714 பொருட்களுக்கான தடையை நீக்கினார்கள் !
1-4-2001 அன்று 715 பொருட்களுக்கான தடையை நிக்கினார்கள் !
ஏப்ரல் ஒண்ணம் தேதி தான் முட்டாள் கள் (all fools day )
வாஜ்பாயும், பா.ஜ.க வும் இந்திய மக்களை முட்டாளாக்கிய தினம் !
மதத்தைக் காட்டி மக்கள் ஓற்றுமையை குலைக்க முயற்சிப்பது ஒருபக்கம் !
ஏழை எளிய மக்களின் உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்துவது மறுபக்கம் !
வெட்கமில்லாமல் வாக்குக் கேட்டு வருவார்கள் !
வடநாட்டு அரசியல் வாதி ஒருவர் கூறினார் !
"என்னால்தான் அவசரநிலை வந்தது ! என்னை ஜோட்டால் அடியுங்கள் ! இல்லையென்றால் ஓட்டால் அடியுங்கள் !"என்றார் ! அவர் வெற்றி பெற்றார் !
தயவு செய்து பா.ஜ.க.வை ஓட்டால் அடித்துவிடாதீர்கள் !!!!
Thursday, January 09, 2014
பெட்றோல் விலை ஏற்றத்திற்கு
வாஜ்பாயும்,பா.ஜ.க வுமே காரணம் .....!!!
1904 ம் ஆண்டு என்வீட்டிலிருந்து முன்று கிமி தூரத்தில் இருக்கும் பஜார் போக ஷார் ஆட்டோவிற்கு 4/- ரூபாய் கொடுப்பேன் ! இப்போது 15/- ரூ கொடுக்க வேண்டியதுள்ளது !
"என்னசார் செய்ய ? பதினைந்து நாளுக்கு ஒருதரம் விலையை ஏத்தறான் ! " என்கிறார் ஆட்டோகரர் !
1989ம் ஆண்டு லிட்டர் 8 /-ரூ இருந்த பெட்ரோல் இன்று 74/- ரூ !
பெட்ரோல் விலையை அரசு தான் நிர்ணயித்து வந்தது ! சர்வதேச சந்தைல கச்சா எண்ணைய பத்தி கவலைபடாமல் விலையை நிர்ணயித்து வந்தது !
எண்ணை கம்பெனிகள் பொதுத்துறையில் இருந்தது ! கொஞ்சம் கொஞ்சமாக பொதுத்துறை பங்குகளை தனியாருக்கு கொடுத்தாங்க !
பெட்றோல் பங்குல பைப்ப புடிச்சு பெட்ரோல் ஊத்திகிட்டு இருந்தவர் தான் தீரு பாய் அம்பானி!
இன்னிக்கி அவரு மகன்களுக்கு சுனாகத்துல 15000 கோடில எண்ணை சுத்தீஅரிப்பு ஆலை இருக்கு !
அம்பானிகள் வாஜ்பாய்க்கு ரொம்ப வேண்டியவர்கள். ! பா.ஜ.க வுக்கு ரொம்ப ரொம்ப வேண்டியவர்கள் !
சர்வதேச கச்சா எண்ண விக்கற விலைக்கும் இங்க அரசு நிர்ணயிக்கிற விலைக்கும் வித்தியாசம் அதிகமாயிருக்கு ! அரசு ஏன் நிர்ணயிக்கணும் ! நாங்க எண்ணைக்கம்பேணி ஆளுக சேரந்து விலையை நிர்ணயம் பண்ணீக்கரோம்னு அண்ணன் வாஜ்பாய் கிட்ட சொன்னங்க ! யாரு? அம்பானி போன்ற தனியார் கம்பெனிங்க !
பாவம் ! சின்ன அமபானி ங்க.தாத்தா அம்பானி ஆகியவங்க சோத்துக்கு சங்கடப்படறாங்க ! அப்ப நீங்க உங்களுக்கு கட்டுபடியாகிற் விலைய நீங்களே முடிவு செஞ்சுக்குங்க ! அப்படின்னி வாஜ்பாய் சொன்னாரு !
அதுக்கான உத்திரவை பா.ஜ.க அரசு போட்டது !
இப்ப எண்ணை விலையை அரசு நிர்ணயிக்கலை! இந்த முதலாளிகள்தான் முடிவு செய்யறாங்க !
இத வாஜ்பாய்தான் செய்தாரு !
திருடன் ஓடும்போது "திருடன்-திருடன் ' நு கத்திக்கிட்டே போவானாம் !
பா.ஜ.க வும் பெற்றோல் விலையைகுறை ன்னுகூட்டத்தோட கூட்டமா கத்துது
இது பொன் ராதாகிருஷ்ணனுக்கு தெரியும் !
காரைக்குடி ராஜா வுக்கு தெரியும் !
ஊசிப்போன கணேசனுக்கு தெரியும் !
வாயைத் திறக்கமாட்டங்க !
பொருளாதார மேதை ஆடிட்டர் குருமூர்த்தியாவது வாயை தீறக்காரா பாப்பம்?
Tuesday, January 07, 2014
"குதா ஹஃபிஸ் "
(ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் )
("குதா ஹஃ பிஸ் " என்பது உருது ,அரேபிய, ஆஃப்கானிய ,மொழியில் பேசப்படும்வர்த்தை . ஒருவர் விடை பெறும்போது "ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் " என்று கூறு வார்கள் இந்தியாவில்,ஹைதிராபாத்,லக்னௌ ,டெல்லி, கான்பூர் ,ஆக்ரா,ஆகிய நகரங்களில் சகஜமாக மத வித்தியாசமின்றி பரஸ்பரம் கூறிக்கொள்ளுவர்கள் )
(80-90 ஆண்டுகளில் தொலைக்காட்சியில் குல்ஜார் ஒரு தொடர் நிகழ்ச்சியை இயக்கி ஒளி பரப்பினார் ! "கிர்தார்" தொடர் வாரம் ஒரு சிறுகதையைக் கொண்டதாக இருக்கும் ! அதில் ஒன்று தான் "குதா ஹ ஃ பிஸ் " என்பதாகும் ! சொமரேந்திர பாசு என்ற எழுத்தாளர் எழுதியது !25 ஐந்து நிமிடம் நடக்கும் அந்த சிரியலில் இரண்டே இரண்டு நடிகர்கள் தான் நடிப்பார்கள் ! ஒருவர் ஓம் பூரி ! மற்றொருவர் இர்ஃபான் கான் ! நெஞ்சத்தை கிழித்து ரத்தம் வரும் நடிப்பு ! பார்க்காதவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்ததை இழந்தவர்கள் ஆவார்கள் !)
அது ஒரு சிறு நகரம் ! மதக்கலவரத்தால் ஊரடங்கு உத்திரவுநடைமுறையில் இருக்கிறது ! திடேரென்று பஸ் போக்குவரத்தும் ஒடி நிறுத்தப்பட்டு விட்டது ! ஒரு இளைஞன் தெருவில் மாட்டிக் கொள்கிறான் ! துப்பாக்கி ஏந்திய வீரார்கள் அவனை விரட்டுகிறார்கள் ! ஓடிவரும் இளைஞன் ஒரு குப்பத்தொட்டியின் பின்னல் ஒளிந்து கொள்கிறான் ! வீரர்கள் போய் விடுகிறார்கள் ! செய்வதறியாது திகைக்கிறான் இளைஞன் !
" யார் நீ ?" மெல்லிய குரல்கேட்கிறது ! திடுக்கிட்ட இளைஞன் "நீ யார் ?" என்று கேட்கிறான் !
"நீ இந்துவா ? முசல்மானா ?"
இளைஞன் பதில் சொல்ல வில்லை !
"உன் பெயரென்ன ?"
"குலாப் "
"குலாப் முகமதா ?"
காவல் வண்டி வரும் விசில் சத்தம் கேட்கிறது !இளைஞன் குப்பைத்தொட்டிக்குள் பாய்ந்து ஒளிகிறான் ! அங்கெ ஏற்கனவே ஒருவன் -முஸ்லிம் - இருக்கிறான் !
உயிர் பயத்தில் இருவரும் முச்சு காற்று படும் அளவுக்கு நெருக்கமாக கட்டிப்பிடித்து ஒளிந்து கொண்டு இருக்கிறார்கள் ! இருவருமாக தப்பிக்க முயற்ச்சிக்கிறார்கள்!
முஸ்லீமுக்கு அவசரம் ! விடிந்தால் ஈத்! நகரத்தில் வாங்கிய துணிமணிகளை குழ்ந்தகளுக்குகொடுக்க வேண்டும் ! இளைஞன் அவனை த்தடுக்கிறான் ! ஆபத்து ! காவல்காரர்கள் சுட்டு கொன்றுவிடும் ஆபத்துஉள்ளதுஎன்றுஎச்சரிக்கிறான் ! இருவரும் தப்பி ஒரு பாழடைந்த மாண்டபத்தின் இடிந்த சுவரருகில் ஒளிந்து கொள்கிறார்கள் ! முஸ்லீம்பீடிபத்த வைக்கிறான் ! வ்யர்வையில் நனைந்த அவனால் முடியவில்லை ! இளைஞன் அவனுக்கு உதவுகிறான் ! மண்டபத்தை தாண்டினால் ஒரு தோட்டம், அதற்கு அப்பால் சாலை ! அங்கிருந்து கிராமத்திற்கு சென்றுவிடுவேன் என்கிறான் !" நான் சென்று பார்க்கிறேன் ஆபத்தில்ல என்றால் போ "என்கிறான் இளைஞன் !
தெருக்கோடியில் காவலர்கள் இரண்டு நாற்காலிகளில்தான் உட்கார்ந்து இருப்பார்கள் ! அவர்கள் எழுந்து அடுத்த தெருவுக்குப் போயிருப்பார்கள் என்பதால் காலியாக இருக்கிறது ! இளைஞன் முஸ்லிமை ஒடி விடும்படி சொல்கிறான் !
இளைஞனை அணைத்துக்கொண்டு "குதா ஹஃபிஸ் " என்று கூறிவிட்டு ஓடிவிடுகிறான் !
கனத்த இதயத்தோடு இளைஞன் காத்திருக்கிறான் !
"ருக்கோ- ருக்கோ " கௌன் ஹை " என்று காவலர்கள் கத்தும் சத்தம் கேட்கிறது !
பின்னர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது !
இளைஞன் அழுகிறான் ! சத்தம் வந்தால் தன உயிர் போய்விடுமே !அதனால் வாயப்பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுகிறான் !
முஸ்லீமாக ஓம் புரி நடிக்கிறார் ! இந்து இளைஞனாக இர் ஃபான் கான் நடிக்கிறார் !
( gulzar.kirdaar.kudha haphis என்று யு டியுபில் தயவு செய்து பாருங்கள் நண்பர்களே )
(மதுரை பிப்பிள்ஸ் த்யெட்டர்ஸ் தோழர்கள் கலை இரவு ஒன்றில் குட்டி நாடகமாக போட்டார்கள் )
Sunday, January 05, 2014
"எங்கே அவர்கள் " நாடகமும் ,
வேல . ராமமூர்த்தியும் ...........!!!
சுமார் முப்பது வருடமாவது இருக்கும் ! மதுரை மாவட்டம் நாடகப்பட்டறை ஒன்றை திருப்பரங்குன்றத்தில் நடத்தியது !வங்கி ,இன்சூரன்சு ,மத்திய மாநில அரசுகள்,தனியார் நிறுவனங்கள் என்று மாநிலம் முழுவதும் இருந்து ஊழியர்கள் வந்திருந்தனர் !
பட்டறையை நடத்தும் பொறுப்பு அளிக்கப்பட்ட குழுவில் நானும் ஒருவன் !மூன்று நாள் பட்டறை ! குழுக்கள் பிரிக்கப்பட்டது 1 அவர்களுக்குள்ளேயே விவாதித்து .கதை தேர்ந்த்தெடுத்து ,எழுதி,நாடகம் தாயாரிக்க வேண்டும்!
என்னுடைய குழுவில் தபால்தந்தி இலாகாவில் பணியாற்றும் ராமமுர்த்தி இருந்தார் ! குழு உறுப்பினர்கள் கதைகளைச்சொன்னார்கள்! என்பங்கிர்க்கு நானும் சொன்னேன் ! அதனை நாடகமாக உருவாக்க முடிவாகியது !
திரைப்பட நடிகர் மனோஜ் குமார் அப்போது தூர்தர்ஷனில் சுதந்தி போராட்டகால நிகழ்ச்சிகளை தொடர் நிகழ்ச்சியாக நடத்தி வந்தார் ! ஒவ்வொரு நாளும் ஒரு கதை !அந்தக் கதைகளில் ஒன்றைத்தான் சொன்னேன் !
குஜராத்தில் உள்ள அகமாதாபாத்தான் களம் ! மில் தொழிலாளிகள் அதிகம் உள்ள நகரம் ! சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நேரம் ! போராட்டக்காரர்கள் ரகசியமாக சில பணிகளைச் செய்து கொண்டு
இருந்தனர் ! ரமாகாந்த் தலைவர் ! போலீஸ் மோப்பம் பிடித்து விட்டது ! போலீஸ் வளையத்திளிருந்து அவரை தொழிலாளி ஒருவன் தப்பிக்க வைக்கிறான் ! அவரை கடற்கரை பகுதிக்கு அனுப்பிவிடுகிறான் ! இஸ்லாமிய மீனவர்கள் நிரம்பிய கிராமம் ! சுதந்திர போராட்டத்திலீடுபாடு கோண்ட முஸ்லிம் மீனவர் வீட்டில் அவர் தங்க ஏற்பாடாகியுள்ளது !
போலிஸ் மோப்பம் பிடித்து விடுகிறது ! வீடு வீடாக கிராமத்தை சொதானை செய்கிறது ! முஸ்லீம் மீனவர் தன மனைவியிடம் அவரை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்கிறார் ! அவரை பின் வாசல் வழியாக படகுத்துறைக்கு அனுப்பி விட்டு முன் கதை சாத்தி வைக்கிற்றர் ! போலிஸ் அவர்கள் தெருவுக்கு வரும் அரவம் கேட்கிறது ! கணவனும் மனைவியும் அடித்தாலும்,கொன்றாலும் எதையும் சொல்லக்கூடாது என்று முடிவு செய்கிறார்கள் !அப்போது தான் அந்ததாய்க்கு ஐந்து வயது மகள் நினைவு வருகிறது ! குழந்தை அவள்! பயந்து சொல்லிவிட்டால் !
அவர்கள் வீட்டில் பெரிய மரப் பெட்டி உள்ளது ! பாத்திரம் பண்ண்டங்களை வைக்க உதவும் !அதற்குள் சிறுமியை உட்காரச் சொல்லி மூடிவிடுகிறார்கள் ! சந்தேகம் வரமலிருக்க மேலே ஒரு சாக்கு மூட்டையையும் வைத்த விடுகிறார்கள் !
போலீசாரை சமாளித்து விடுகிறார்கள் ! மீனவர் தலைவர ரமாகாந்தை படகுத்துறையிலிருந்து அழைத்து வருகிறார் ! அவர் தன ஜோல்னா
பையிலிருந்து ஒரு ஆப்பிளை எடுத்து" இந்தா இஸ்மாயில் ! உன் மகள் சாயிராவிடன் ம் கோடு "என் கிறார் !
நினவு தட்டிய கணவனும்மனைவியும் அவசர அவசரமாக மரப் பெட்டியை திறக்கிறார்கள். அதற்குள் சைரா தூங்கிக் கொண்டிருக்கிறாள் நிரந்தரமாக மூச்சுத்திணறி !
ரமாகாந்த்! ,இஸ்மாயில் !சாயிரா !
எங்கே அவ்ர்கள் ?
என்ற கேள்வியோடு முடிகிறது !
இதனை நாடகமாக எழுதி இயக்கம் பொறுப்பு ராமமூர்த்திக்கு கொடுக்கப்
படுகிறது !
இரவோடு இரவாக நாடகம் எழுதப்பட்டது ! மறுநாள் நாடகத்தை இயக்கும் பொறுப்பும் அவரூக்குத்தான் ! இதில் இஸ்மாயிலாக பழநியைச்ச்செர்ந்த
சோ.முத்து மாணிக்கம் நடித்தார் !
பட்டறையில் வந்த மிகச்சிறந்த நாடகமாக ராமமூர்த்தி இயக்கிய" எங்கே அவர்கள் "நாடகம் சிறப்பிக்கப் பட்டது !
ராமமூர்த்தான் பின்னாளில் மிகச்சிறந்த எழுத்தாளரான வேல.ராமமூர்த்தி ஆனார் !
"மதயானை கூட்டம் " என்ற திரைப்படத்தின் மூலம் பத்திரிகைகள் பாராட்டும் நடிகரானார் !
அவருக்கு என் பாராட்டுகள் !!!
போலீசாரை சம்மளித்து அனுப்பிவிடுகிறார்கள் !