விலை உயர்வுக்கு அடித்தளம் போட்டவர்
வாஜ்பாயும், பா.ஜ.க வும் தான் ............!!!
வாஜ்பாய் தலைமையில் ஆட்சி உருவான பின்னர் தான் விலைவாசி 18% சதமாகி இரட்டை இலக்கத்திற்கு வந்தது !
காய்கறி விலை 110 சதம் உயர்ந்தது !
வெங்காயம் 700 சதம் உயர்ந்தது !
2000 ம் ஆண்டு சமையல் எரிவாயு 146 /-ரூ யாக இருந்தது ! ஒரே ஆண்டில் இரண்டு முறை விலையை உயர்த்தி 232/-ரூ யாக்கினவர் புண்ணியவான் வாஜ்பாய் தான் !
1991ம் ஆண்டு தாராளமயம் வருவதற்கு முன் 3300 பொருட்களுக்கு இறக்குமதி செய்ய தடை இருந்தது !
மதுரையில்கட்சிகளின் ஊர்வலம்னடக்கும்! தொழிற்சங்க ஊர்வலம் ,இடது சாரிகள் ஊர்வலம் நடக்கும் ! நாங்களும் கலந்து கொள்வோம் !
வடக்கு மாசிவீதி முடிந்து கீழ மாசிவீதி திரும்பினால் எங்களுக்கு "சாமி"
பிடித்துவிடும் !" பதுக்கல்காரர்களைகைது செய் ! பதுக்காதே பதுக்காதே உணவுப் பொருட்களை பதுகாதே "என்று தொண்டை நரம்புகள் புடைக்க கோஷமிடுவோம் !
( கீழ மாசி வீதியில்தான் பலசரக்கு மொத்தவியாபார கடைகளிருந்தன )
பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததும் சட்ட திருத்தம்கொண்டுவந்தார்கள் ! 50000 டன் வரை சரக்குகளைகிட்டங்கியில்வைத்துக் கொள்ளலாம் என்று திருத்தினார்கள் !
விளக்கெண்ணை 40/- ரூ யாக இருந்தது 80/-ரூ ஆயிற்று !
உளுந்து 30/- ரூ 70/- ஆயிற்று !
4/-ரூ யாக இருந்த வெங்காயம் 60 /-ரூ ஆயிற்று !
இறக்குமதிக்கு தடை இருந்தது !
1-4-2000 அன்று 714 பொருட்களுக்கான தடையை நீக்கினார்கள் !
1-4-2001 அன்று 715 பொருட்களுக்கான தடையை நிக்கினார்கள் !
ஏப்ரல் ஒண்ணம் தேதி தான் முட்டாள் கள் (all fools day )
வாஜ்பாயும், பா.ஜ.க வும் இந்திய மக்களை முட்டாளாக்கிய தினம் !
மதத்தைக் காட்டி மக்கள் ஓற்றுமையை குலைக்க முயற்சிப்பது ஒருபக்கம் !
ஏழை எளிய மக்களின் உணவுப்பண்டங்களின் விலையை உயர்த்துவது மறுபக்கம் !
வெட்கமில்லாமல் வாக்குக் கேட்டு வருவார்கள் !
வடநாட்டு அரசியல் வாதி ஒருவர் கூறினார் !
"என்னால்தான் அவசரநிலை வந்தது ! என்னை ஜோட்டால் அடியுங்கள் ! இல்லையென்றால் ஓட்டால் அடியுங்கள் !"என்றார் ! அவர் வெற்றி பெற்றார் !
தயவு செய்து பா.ஜ.க.வை ஓட்டால் அடித்துவிடாதீர்கள் !!!!
1 comments:
என் கேள்விகள்:
1. ஆம் ஆத்மி கட்சியின் தில்லி வெற்றி(!) பற்றி.
2. ஆம் ஆத்மியின் நாடளுமன்ற தேர்தல் பிரவேசம் பற்றி.
3. பொதுவாக "ஊழலை ஒழிப்போம்" என்ற பிரச்சாரம் குறித்து உங்கள் கருத்து.
4. "மூன்றாம் அணி" = அப்படி ஒன்று சாத்தியமா?
5. ராகுல் காந்தி பிரதமர் ஆவது? (என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை)
6. ந மோதி பிரதமர் ஆனால்?
பதிவில் பதில்கள் (நேரம் இடம் கொடுத்தால்) அள்ளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Post a Comment