Tuesday, January 07, 2014

"குதா ஹஃபிஸ் "

(ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் )

("குதா ஹஃ பிஸ் " என்பது உருது ,அரேபிய, ஆஃப்கானிய ,மொழியில் பேசப்படும்வர்த்தை . ஒருவர் விடை பெறும்போது "ஆண்டவன் உன்பால் இருக்கட்டும் " என்று கூறு வார்கள் இந்தியாவில்,ஹைதிராபாத்,லக்னௌ ,டெல்லி, கான்பூர் ,ஆக்ரா,ஆகிய நகரங்களில் சகஜமாக மத வித்தியாசமின்றி பரஸ்பரம் கூறிக்கொள்ளுவர்கள் )


(80-90 ஆண்டுகளில் தொலைக்காட்சியில் குல்ஜார் ஒரு தொடர் நிகழ்ச்சியை இயக்கி ஒளி பரப்பினார் ! "கிர்தார்"  தொடர் வாரம்   ஒரு சிறுகதையைக்  கொண்டதாக இருக்கும் ! அதில் ஒன்று தான் "குதா ஹ ஃ பிஸ் " என்பதாகும் ! சொமரேந்திர பாசு என்ற எழுத்தாளர் எழுதியது !25 ஐந்து நிமிடம்  நடக்கும் அந்த சிரியலில் இரண்டே இரண்டு நடிகர்கள் தான் நடிப்பார்கள் ! ஒருவர் ஓம் பூரி ! மற்றொருவர் இர்ஃபான் கான் ! நெஞ்சத்தை கிழித்து ரத்தம் வரும் நடிப்பு ! பார்க்காதவர்கள் தங்கள் வாழ்நாளில் மிகச்சிறந்ததை இழந்தவர்கள் ஆவார்கள் !)

அது ஒரு சிறு நகரம் ! மதக்கலவரத்தால் ஊரடங்கு  உத்திரவுநடைமுறையில் இருக்கிறது ! திடேரென்று பஸ்  போக்குவரத்தும் ஒடி நிறுத்தப்பட்டு விட்டது ! ஒரு இளைஞன் தெருவில் மாட்டிக் கொள்கிறான் ! துப்பாக்கி ஏந்திய வீரார்கள் அவனை விரட்டுகிறார்கள் ! ஓடிவரும் இளைஞன் ஒரு குப்பத்தொட்டியின் பின்னல் ஒளிந்து கொள்கிறான் ! வீரர்கள்  போய் விடுகிறார்கள் ! செய்வதறியாது திகைக்கிறான் இளைஞன் !
" யார் நீ ?" மெல்லிய குரல்கேட்கிறது ! திடுக்கிட்ட இளைஞன் "நீ யார் ?" என்று கேட்கிறான் !
"நீ இந்துவா ? முசல்மானா ?" 
இளைஞன் பதில் சொல்ல வில்லை !
"உன் பெயரென்ன ?"
"குலாப் "
"குலாப் முகமதா ?"
காவல் வண்டி வரும் விசில் சத்தம் கேட்கிறது !இளைஞன் குப்பைத்தொட்டிக்குள் பாய்ந்து ஒளிகிறான் ! அங்கெ ஏற்கனவே ஒருவன் -முஸ்லிம் - இருக்கிறான் ! 

உயிர் பயத்தில் இருவரும் முச்சு காற்று படும் அளவுக்கு நெருக்கமாக கட்டிப்பிடித்து ஒளிந்து கொண்டு  இருக்கிறார்கள் ! இருவருமாக தப்பிக்க  முயற்ச்சிக்கிறார்கள்!

முஸ்லீமுக்கு அவசரம் ! விடிந்தால் ஈத்! நகரத்தில் வாங்கிய துணிமணிகளை குழ்ந்தகளுக்குகொடுக்க வேண்டும் ! இளைஞன் அவனை த்தடுக்கிறான் ! ஆபத்து ! காவல்காரர்கள் சுட்டு கொன்றுவிடும் ஆபத்துஉள்ளதுஎன்றுஎச்சரிக்கிறான் !   இருவரும் தப்பி ஒரு பாழடைந்த மாண்டபத்தின் இடிந்த சுவரருகில் ஒளிந்து கொள்கிறார்கள் ! முஸ்லீம்பீடிபத்த வைக்கிறான் ! வ்யர்வையில் நனைந்த அவனால் முடியவில்லை ! இளைஞன் அவனுக்கு உதவுகிறான் ! மண்டபத்தை தாண்டினால் ஒரு தோட்டம், அதற்கு அப்பால் சாலை ! அங்கிருந்து கிராமத்திற்கு சென்றுவிடுவேன் என்கிறான் !" நான் சென்று பார்க்கிறேன் ஆபத்தில்ல என்றால் போ "என்கிறான் இளைஞன் ! 

தெருக்கோடியில் காவலர்கள் இரண்டு நாற்காலிகளில்தான் உட்கார்ந்து இருப்பார்கள் ! அவர்கள் எழுந்து அடுத்த தெருவுக்குப் போயிருப்பார்கள் என்பதால் காலியாக இருக்கிறது ! இளைஞன் முஸ்லிமை ஒடி விடும்படி சொல்கிறான் ! 

இளைஞனை அணைத்துக்கொண்டு "குதா  ஹஃபிஸ் " என்று கூறிவிட்டு ஓடிவிடுகிறான் !

கனத்த இதயத்தோடு இளைஞன் காத்திருக்கிறான் !

"ருக்கோ- ருக்கோ  " கௌன் ஹை " என்று காவலர்கள் கத்தும் சத்தம் கேட்கிறது ! 

பின்னர் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்கிறது !

இளைஞன் அழுகிறான் ! சத்தம் வந்தால் தன உயிர் போய்விடுமே !அதனால் வாயப்பொத்திக்கொண்டு சத்தம் வராமல் அழுகிறான் ! 

முஸ்லீமாக ஓம் புரி நடிக்கிறார் ! இந்து இளைஞனாக இர் ஃபான் கான்  நடிக்கிறார் ! 


( gulzar.kirdaar.kudha haphis  என்று யு டியுபில் தயவு செய்து பாருங்கள் நண்பர்களே ) 

(மதுரை பிப்பிள்ஸ் த்யெட்டர்ஸ் தோழர்கள் கலை  இரவு ஒன்றில் குட்டி நாடகமாக போட்டார்கள் )0 comments: