Sunday, August 02, 2015

தமிழின் சிறப்பு 

"ழ" கரம் ......!!!




தமிழ் மொழியின்  "ழ" கரம் ஒடிஷா மொழியிலும், மராட்டிய மொழியிலுமிருப்பதாக திருமதி ஹன்ஸா காஷ்யப் தன் முகநூலில் குறி ப்பிட்டிருந்தார்.


ஒடிஷா மொழியில் இருக்கிறதா என்பது தெரியவில்லை>மராட்டிய மொழியில்( நவீன வரவூ ) இருக்கிறது.

மலையாளத்திலும் உள்ளது. புழல் என்ற வார்த்தை அந்த மொழியில் உள்ளதாகத் தெரிகிறது. "ஆலப்புழா " என்பதை உச்சரிக்கவும்,எழுதவும் மலையாளத்தில் முடியும்.


இந்த சிறப்பு "ழ"கரம் தமிழுக்கு மட்டும் என்பதாக சொல்ல முடியவில்லை. ஐரொப்பிய மொழிகளீலும் உள்ளது. பிரெஞ்சு மொழியில் "ழ"கரம் உண்டு. ஐரோப்பியர்கள்  இந்தியாவை ஆண்டபொது தமிழகத்தின் சிலபகுதிகளை ப்ரான்சு நாட்டினர் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள்  வசம் சோழ நட்டின் பகுதிகள் இருந்துள்ளது. அதனை தங்கள்  ஆவணங்களில்பிரன்சுமொழியில்CHORAMANDALஎன்றுகுறி ப்பிட்டுள்ளார்கள் . "ழ"என்ற தமிழ்  எழுத்தை  "RA " பிரெஞ்சு வரிவடிவத்தில் குறிப்பிட்டுள்ளார்கள்.


பிரிட்டிஷ் காரர்கள் இதன" கோரமண்டல்" என்று வாசிக்க தென் இந்திய ரயில்வே (S I R ) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் என்ற ரயில்தொடரை விட்டது.


வடமாநிலங்களில் உள்ள தமிழ்  அமைப்புகள் தமிழ் வகுப்புகளை  நடத்து கின்றன. இந்திமராட்டி,வங்காளி மாணவரகள் அகில இந்திய பதவிகளூக்காக தேர்வுகளில் விருப்பபாடமாக இதன  கற்கின்றனர். டெல்லி,கல்கத்தா ,மும்பை போன்ற நகரங்களில் இவை நடை பெறுகின்றன .உச்சரிப்பில் தான் இந்த மாணவர்கள்  சிரமப்படுகிறார்கள் .


உதாரனமாக "கங்கை " என்பதை நாம் " Gangai " என்று உச்சரிக்கிறோம். அதேசமயம் "கடவுள் " எனபதை"khadavull" என்று  உச்சரிக்கிறொம். எழுத்து என்று வரும் போது இரண்டுக்குமே "க ' என்ற எழுத்தையே உபயோகிக்கிறோம் . எங்கு "Ga "எங்கு"Kha "  என்பதில் இந்த மாணவர்கள் திணரூகிறார்கள் . 

தமிழில் "க" என்ற உச்சரிப்பு மட்டுமே ண்டு."Gha " உச்சரிப்புகிடையாதுஎன்று  தமிழ் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.

"கங்கை  "என்று மட்டுமே உச்சரிக்க வேண்டும். "Gangai "என்று உச்சரித்தால் மொழியின் தூய்மை  கெட்டுவிடும் என்கிறார்கள் . 

இதனை இன்னும் தீவிரமாக அறிவியல் துணை கொண்டு ஆராய வேண்டும்.

தமிழ் மொழி தொனமையான மொழி எனும்போது  பெருமைதான் . கல்தோன்றா மூத்தகுடி பெசிய மொழி எனும் பொது சிலிர்க்கத்தான் செய்கிறது ! 

  கல் தோன்றவில்லை என்றால் மனிதன் தோன்றி இருக்க முடியுமா? மனிதன் தோன்றாமல் மொழி தோன்றியிருக்க முடியுமா?


அறிவியல் கேள்விகள் பயமுறுத்துகின்றன. 


மொழியியல் வல்லுனர்கள் இவை மடத்தனமானவை என்று சொல்கிறார்கள் .


மடமையை கொளுத்துவோம் ...!!!













Saturday, August 01, 2015

அபுல் கலாமும் , 

அப்துல் கலாமும்...!

அவர் பெயர்" அபுல் கலாம் முகையுத்தீன்"  !  "ஆஜாத்." என்ற புனை பெயரில் எழுதி வந்தார் ! இந்தியா சுதந்தியரம்  அடைந்த போது  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் "தேஜ்பூரை" நெருங்கிவிடும் என்று பயந்த பிரிட்டிஷார்வங்கம்  உட்பட  கிழக்கு இந்தியாவில் உள்ள தொழிற்சாலகளை வெடிவைத்து தகர்த்து எதிரிகள் கையில் சிக்கவிடாமல் செய்ய முயற்சித்தது ! "ஆஜாத் "எதிர்த்தார்.  காந்தி  பிரிடிட்டிஷாரை ஆதரித்தார் ! கம்யுனிஸ்டுகள் பிரிட்டிஷாரிடமிருந்தும் ஜப்பானியரிடமிருந்தும் தொழிற்சாலைகளை காக்க ஆலை வாசல்களில்  நின்றனர்  ! "ஆஜாத் "காங்கிரஸ் காரர்களை கம்யுனிஸ்டுகளொடு சேர்ந்து காப்பற்றும் படி உத்திரவிட்டார் காங்கிரஸ் காந்தியின் பேச்சை கேட்டு "ஆஜாத் " அவர்களை எதிர்த்தது. நேரு    ஆஜாத் தை ஆதரித்தார் இருவரும் காங்கிர்ஸ் காரிய கமிட்டியில்   இருந்து  ராஜினாமா செய்தனர் . பின்னர் சமரசமானது !.

அவருடைய சுய சரிதையை "India Wins Freedom" என்ற நூலாக எழுதியுள்ளார்.ஹுமாயூன் கபீர் அதனை ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளார் .

குஜராத்தில உள்ள chief secretory  அத படிக்க வில்லை போலருக்கு. அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் மறைவு காரணாமாக துக்கம் அனுசரிக்கப்படும்    நு சுற்றரிக்கை எழுதி கையெழுத்து பொட்டிருக்கார் அந்த கெட்டிக்காரர் .

 இவர் ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் ! சுதந்திரம் கிடைக்கும் போது இவர் பள்ளி மாணவன்.!

Thursday, July 30, 2015

"செம்மலர் " சிறுகதைகள்

"சம்ஸ்கிருத" மொழியில்......!!!


"செம்மலர் " பத்திரிகையில்  வந்த தமிழ் சிறுகதைகள சம்ஸ்கிருத மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு  தொகுப்பாக வெளிவந்துள்ளது. எழுத்தாளரும் ,மொழிபெயர்ப்பாளருமான மூத்து மீனாட்சி அவர்கள் இந்த தொகுப்பினை கொண்டுவந்துள்ளார்கள் .இது பற்றிய விபரமாவது  


1925,35,45,55,65,75, என்று 60 ஆன்டுகள் "இந்தி":சிறுகதைகளை ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் தேர்ந்தெடுத்து ஆராய்ந்தார்.  இதன் மூலம் "இந்தி "சிறுகதைகளின் கட்டமைப்பு.வளர்ச்சிப்போக்கு,உள்ளடக்கம் ஆகியவற்றைபகுத்து தெரிந்து கொள்ள முடிந்தது. இதே காலகட்டத்தில் தமிழ் சிறுகதைகளையும் பகுத்தாய்ந்து ஒப்புநோக்கில்முனைவர் பட்டத்துக்கான தயாரிப்பு பணியிலீடுபட்டார். இந்தி பிர்ச்சார சபாவின் "உயர்கலவி ஆராய்ச்சி நிறுவனத்தில் " (Higer education and Reaserch Instiute ) பதிவு செய்ய சென்றார் . அவர்கள் வேண்டாத நிபந்தனைகLai போட்டனர். குறைந்தது 30 வருடமாவது ஆகியிருக்கும். 


பின்னர் "நாகபுரி பல்கலைகழகத்தை நாடினார். அவர்களும் நிபந்தனைகளை போட்டனர்.நொந்து நுலாகிப்போன முத்துமிணட்சி அவர்கள் அற்புதமான பிறமொழிகதைகளை மொழிபெயர்த்து "செம்மலர்" பத்திரிகைக்கு அனுப்பினார்அவர்கள் பிரசுரித்துஆதரித்தார்கள்.


"ஐந்து நிமிடம்" என்று கதை. மரண தண்டனை நிறைவேற்றும்முன்பு கைதி ஒருவனை அவனதுமனைவி,பள்ளிச்சிறுவனான மகன் பார்க்க வருகின்றனார் பார்க்க ஐந்து நிமிடம்  அவகாசம் அளிக்கப்பட்டுள்ளதூ.இந்த ஐந்துமிடத்தில் அந்த கைதி,மனைவி மகன் ஆகியோரின்பார்வையில் அந்த ஐந்து நிமிடம் சித்தரிக்கப்பட்டுள்ளது.நெஞ்சை உருக்கும் இந்த கதை  வியொகிஹரி என்பவரால் "1928" ம் ஆண்டு எழுதப்பட்டது.( யாகுப் மெமான் நினைவு வந்தால் வியொகி ஹரியைத்தான் கேட்கவேண்டும்) 


"துக்கம்" என்று ஒருகதை .பால் சோறு வேண்டாம் என்று அழும் குழந்தயின் துக்கமும் . காய்ந்த ரொட்டிக்கக அழும் குழந்தையின் துக்கமும் ஒன்றா? மனதை பிசைந்த்து எடுக்கும் இந்தகதையை 1938 ம் ஆண்டு எழுதியவர் "பகத் சிங்"கோடு  கைதாகி சிறை சென்று மீண்ட "யஷ்பால் " ! இவருடைய "காம்ரேட்" என்ற நாவல் 1946ம் ஆண்டு பிரிட்டிஷாரை எதிர்த்து நடந்த  கப்பற்படை  மாலுமிகளின் எழுச்சியை சித்தரிப்பதாகும்.


எட்டுவயது சிறுமியையும்.ஐந்து வயது சிறுவனையும் வளரும் போதே எப்படி பாரபட்சமாக நடத்து கிறார்களென்பதை கண்ணிர் பெருக சித்தரிக்கும்  இந்த "லட்கி"கதை ராம் தர்ஸ் மிஸ்ரா என்பவ்ரால் 1957ல் எழுதப்பட்டதாகும். இவை செம்மலரில் வந்த கதைகளாகும்.இவை தவிர காஸ்யபனின் கதைகள்,"கல்கி"யில் வந்த முருகானந்தம் அவர்களின் கதை ஆகியவற்றை முத்து மீனட்சி அவர்கள் சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்த்து "சம்பாஷன சந்தேஷ் ' என்ற பங்களுரிலிருந்து வரும் பத்திர்கைக்கு அனுப்பினார் சம்ஸ்கிருதத்தில் மாதந்தரியாக வரும் அந்த பத்திரிகை பிரசுரித்தது.


ஆந்திராவிலிருந்து வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் தினசரி "பிராஜாசக்தி" . திருப்பதி சம்ஸ்கிருத பல்கலைகழகத்தின் அச்சுபணிகளையும் இதன் அச்சகம்செய்துவருகிறது.இந்த ஏழுகதைகளையும் "பிரஜாசக்தி" பிரசுராலயம்  வெளியிட்டுள்ளது.

இதற்கான முன்னுரையை வெங்கடெஸ்வர வேத வித்யாலயம் ( சம்ஸ்கிருத பல்கலை) பணியாற்றும் பேராசிரியர் எழுதியுள்ளார்1 சம்ஸ்கிருத மொழியில் முனவர் பட்டம் பெற்ற முகம்மதியரான டாகடர்.பாதன் முகம்மது வலி திருப்பதி தேவஸ்தானம்  நடத்தும் பல்கலையில் சம்ஸ்கிருத பேராசிரியராக பணியாற்றுகிறார். சம்ஸ்கிருத மொழையின் உரைநடையில் இந்த தொகுப்பு புதிய வீச்சை கோண்டுவரும் என்றும் இடது சாரி நவீன இலக்கியம் தன் வீச்சை செலுத்துவது நிச்சயம் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.


முத்து மீனாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்....!!!

 







 


Monday, July 27, 2015

ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் 

மறைந்தார்.....!



ஏ.பீ.ஜெ அப்துல்கலாம் மறைந்தார் . 

1998ம் ஆண்டு போக்ரான் பாலைவனத்திலிருந்து "புத்தன் சிரித்தான் " என்ற தகவல் அன்றய பிரதமர் வாஜ்பாய் அவர்களூக்கு வந்து "இந்தியா இரண்டாவதுமுறை "அணுகுண்டு சொதனை நடத்தியது ! ஆனானப்பட்ட அமெரிக்கா கூட அதனை கண்டு கொள்ளாமல் ரகசியமாக நடத்திக்காட்டிய விஞ்ஞானி அவர்.


தமிழகத்தைச்சேர்ந்த அவர் ராமெஸ்வரத்தில் ஒரு சாதரணகுடும்பத்தில் பிறந்தவர். ராமேஸ்வரத்தில் 

மார்க்சிஸ் கட்சியின் தாலூகா செயலாளராக இருந்த "ஆவுல் நாயனாவின்" நெருங்கிய உறவினர் . 


ஒரு முறை (1992) மதுரை வந்திருந்தார். பத்திரிகையாளர்களை சந்தித்தார். தீக்கதிர் பத்திரிகையின் சார்பில் தோழர் "தீக்கதிர் " நாராயணன் அவர்கள் சென்றிருந்தார்கள். மிகவும் வித்தியாசமான கேள்வியை அந்த ஏவுகணை விஞ்ஞானியிடம்கேட்டார்.


"வால்மீகி ராமாயணத்தில் " ராவணன்  சீதயை புஷ்பக விமானத்தில் கொண்டு செல்வதாக உள்ளது .அந்த புராணகாலத்தில் விமானம் இருந்திருக்க முடியுமா? ' என்று கேட்டார்.


"புராணகாலத்து மனிதனுக்கும் பறவையைப் பொல பறக்க வேண்டும் என்ற ஆசை இருந்திருக்கும் 1 வால்மிகி என்ற கவிஞனுக்கும் இருந்திருகலாம் அல்லவா ! அவன் தன் படைப்பில் மனிதன் பறப்பதாக கற்பனை செய்திருப்பதன் பலன் தான் றைட் சகொதரர்களின் வெற்றிக்கான முதல் படி . விமானம் அன்றே இருந்ததா என்று சிந்திப்பது சரியல்ல. பறக்க வேண்டும் என்ற மனித குலத்தின் சிந்தனை அன்றே தோன்றிவிட்டதின் அறிகுறியே வால்மீகியின் கவிதை வரிகள்." என்றார்.


அவர் விஞ்ஞானி மட்டுமல்ல.  ஆசிரியரும் கூட. ஷில்லாங்கில் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்துக் கொண்டிருக்கும் போதே மயங்கி உயிரிழந்தவர் .


அந்த மாமனிதருக்கு அஞ்சலி !!!

Saturday, July 25, 2015

எங்கே அவர்கள்........?



அவர் எனக்குமிகவும் நெருங்கிய நண்பர் ! தமிழக    அரசுப்பணியில் இருந்தார் . அவருடைய மகள் மிகவும்புத்திசாலி . +2 தேர்வில் 1140 க்கும் அதிக மாக  மதிப்பெண் பெற்றவர்.


B.Sc (Maths) அந்த குழந்தை விரும்பியது.மதுரையின் முக்கியகல்லூரிகளில் இரண்டு அவருக்கு இடம் கொடுத்தது .


நானும் அவரும் வசித்த குடியிருப்புகளின் அருகில் தான் "பாத்திமா "கல்லூரி இருந்தது.! நல்ல கல்லூரி.மகள்போக்குவரத்துக்கு சிரமப்படாமல் பாதுகாப்பாக இருக்கும் என்பதால் நண்பர் அங்கு சேர்க்க விரும்பினார்.


பாத்திமா கல்லூரி கணிதப் பெராசிரியை எங்கள் குடியிருப்பில் இருந்தார். என் துனைவியாருக்கு அவர் பழக்கம். அவர் மூலம் அந்த கல்லூரியில் சேர்ர்க்க முயற்சி செய்ய வேண்டினார்.


நண்பரின் தந்தை தமிழகம் அறிந்த பிரபலமான அரசியல் தலைவர்! " ஏன்யா 1 உங்க அப்பாவை விடவா நான் பெரியவன் ? அவர்கிட்ட சொல்ல வேண்டியது தானே " என்றென்.


"வே ! இஷ்டம் நா செய்யும். ! வேறு பேச்சு வேண்டாம் ! " என்று கொபமாக கூறிவிட்டார்.என் மனைவி மூலமாகபெராசிரியையை அணுகினேன் !


" ஏம்மா ! அந்த பெண்ணொட தாத்தா எம்.பி யாமே . அவர் ஒருவார்த்தை சொன்னால் --அது கூட வேண்டாம்நீங்கள்யாரவதுநிர்வாகத்திடம்அவங்கதாத்தாஎம்பிசொன்னாலேபொதும்இடம்கிடைக்குமே " என்று பெராசிரியை கூறியதாக என் மனைவி சொன்னார்.

நானே நிர்வாகத்திற்குபோன் பண்ணலாமா என்று நினைத்தேன்.பிறகு பெரிய இடத்து விஷயமென்று  விட்டு விட்டென் ,


இருந்தாலும் மனது கேட்கவில்லை ! நான் பணியாற்றும் "தீக்கதிர்" அலுவலக பொது மெலாளர் அப்துல் வஹாப் அவர்களிடம் சோன்னேன் ! அவர் சுதந்திர போராட்ட வீரர். அரசியல் வாதி.


"சாமா ! நீ அவங்க கிட்ட எதவது உறுதியா சொல்லி இருக்கியா?  " என்று கேட்டார் 


"இல்லை. அத்தா "   


"நாளை எம்பி வருகிறார் ! பாப்பம் "


மறு நாள் அத்தா எதுவும் சொல்லவில்லை! இரண்டு நாள் கழித்து அத்தா" அந்த காலெஜ் சீட்டு..." 

என்று இழுத்தேன் !


"நல்ல வேளை ! தோழர் ! எம்.பி கிட்ட கேட்டென். என்ன சொன்னர் தெரியுமா ? " 


"என்ன சோன்னார் அத்தா ?"


"வே ! கட்சி என்னை எம்.பி ஆக்கினது எம்பேத்திக்கு காலெஜுல சீட்வாங்கவா ! அத்தா வேற வேலை இருந்தா பாரும் " நு நச்சுனு சொல்லிபுட்டாரு" என்றார் 1


அந்த எம்.பி யின் பெயர்


A.நல்ல சிவம் .