Saturday, August 01, 2015

அபுல் கலாமும் , 

அப்துல் கலாமும்...!

அவர் பெயர்" அபுல் கலாம் முகையுத்தீன்"  !  "ஆஜாத்." என்ற புனை பெயரில் எழுதி வந்தார் ! இந்தியா சுதந்தியரம்  அடைந்த போது  காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார் ! இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் "தேஜ்பூரை" நெருங்கிவிடும் என்று பயந்த பிரிட்டிஷார்வங்கம்  உட்பட  கிழக்கு இந்தியாவில் உள்ள தொழிற்சாலகளை வெடிவைத்து தகர்த்து எதிரிகள் கையில் சிக்கவிடாமல் செய்ய முயற்சித்தது ! "ஆஜாத் "எதிர்த்தார்.  காந்தி  பிரிடிட்டிஷாரை ஆதரித்தார் ! கம்யுனிஸ்டுகள் பிரிட்டிஷாரிடமிருந்தும் ஜப்பானியரிடமிருந்தும் தொழிற்சாலைகளை காக்க ஆலை வாசல்களில்  நின்றனர்  ! "ஆஜாத் "காங்கிரஸ் காரர்களை கம்யுனிஸ்டுகளொடு சேர்ந்து காப்பற்றும் படி உத்திரவிட்டார் காங்கிரஸ் காந்தியின் பேச்சை கேட்டு "ஆஜாத் " அவர்களை எதிர்த்தது. நேரு    ஆஜாத் தை ஆதரித்தார் இருவரும் காங்கிர்ஸ் காரிய கமிட்டியில்   இருந்து  ராஜினாமா செய்தனர் . பின்னர் சமரசமானது !.

அவருடைய சுய சரிதையை "India Wins Freedom" என்ற நூலாக எழுதியுள்ளார்.ஹுமாயூன் கபீர் அதனை ஆங்கிலத்தில் கொண்டு வந்துள்ளார் .

குஜராத்தில உள்ள chief secretory  அத படிக்க வில்லை போலருக்கு. அபுல் கலாம் ஆஜாத் அவர்களின் மறைவு காரணாமாக துக்கம் அனுசரிக்கப்படும்    நு சுற்றரிக்கை எழுதி கையெழுத்து பொட்டிருக்கார் அந்த கெட்டிக்காரர் .

 இவர் ஆவுல் பகீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம் ! சுதந்திரம் கிடைக்கும் போது இவர் பள்ளி மாணவன்.!