Monday, May 01, 2017








நீதி அரசர் கர்ணனும் ,


ஆஷிஷ் நந்தியும் .....!!!




 2013 ஆண்டு என்று நினைவு . ஜெய்ப்பூரில் இலக்கிய விழா நடந்தது.அதில் இந்தியாவின் பிரபலமான எழுத்தாளர் ஆஷிஷ் நந்தி கலந்து கொண்டார்  . பிரித்திஷ் நந்தி ,மனிஷ் நந்தி  ஆகியோரின் முத்த சகோதரர் அவர் மே .வங்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவர். 


"அறிவு ஜீவிகளும் ஊழலும்" என்ற தலைப்பில் அவர் பேசினார்." ஊழல் செய்யாத அரசியல் தலைவர்கள் கிடையாது. மேல்சாதி காரர்கள் தங்களின் அனுபவத்தால் ஊழலில் மாட்டிக்கொள்ளாமல் செய்து விடுகிறார்கள். பாவம்-பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட வர்கள் அனுபவமின்மையால் செய்யத்தெரியாமல்செய்து மாட்டிக்கொண்டு விடுகிறார்கள் " என்று பேசினார்.


அப்போது தான் லாலு,முலாயம் சிங் ,மாயாவதி ,என்று ஊழல் தண்டோரா போடப்பட்டு வந்தது.


அஷிஸ் நந்தி மீது எல்லாரும் பாய்ந்தார்கள்.. "இதிலுமா இட ஒதுக்கீடு "என்று ஏகாடி யம் பேசினார்கள்.


அது பெரியவிஷயமில்லை.மாயாவதி ஆஷிஷ் மீது "தீண்டாமை சட்டத்தை "பாயவிட்டார் ராஜஸ்தான் மாநில முதல்வர் கெலாட்  பாய்ந்தார். இருவருமே தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள்.


நீதிஅரசர் கர்ணன் அவர்களை நான் ஆதரிக்க வில்லை. நடந்த விஷயங்கள் பற்றி முழுவதும் தெரியாது. ஆனால் அவரை ridicule பண்ணும் அளவுக்கு அறிவார்ந்த நீதி அரசர்கள் போக வேண்டுமா ?


"அடுத்த மாதம் அவர் ஒய்வு பெறுகிறார். விட்டு விடுங்கள் .ஒன்றும் குடிமுழுகி விடாது  " என்று முத்த வழக்கறிஞர் வேணுகோபால் ஆலோசனை கூறியுள்ளார்.


பள்ளிக்கு போய் படிக்கக்கூடமுடியாத சமூகம். படித்து,பாஸ் பண்ணி, வக்கீலாக பிராக்டிஸ் பண்ணி நீதிபதி ஆன  ஒருவர். என்னனென்ன கஷ்டங்கள்,அவமானங்கள் பட்டாரோ . 


ஆனாலும் இவ்வளவு வன்மம் நீதித்துறைக்கு கூடாது.!!!


It is persecution !!! 


Sunday, April 30, 2017



 (per month lecturer rs 5000/- Proff rs 8000/-)

பொறியியற்  கல்வி  


" அம்பேல் " ....!!!



சென்னையின் தென் கோடியில் இருக்கும்  தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதன் இரண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகளும்,பொறியியற்கல்லூரிகளும் உள்ளன . குறைந்தது 50 கல்லூரிகளாவது கண்களில் தென்படும்.

இவை அத்தனையும் தனியார் கல்லூரிகள். இவர்களுக்கு நிலம் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது .அல்லது ஈனக்க கிரயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளின் தரம்பற்றி எழுதாமலிருப்பது நல்லது.

மாணவர் சேர்க்கை என்பது அநேகமாக இல்லை. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பட்டியல் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். "தலித் மாணவர்களின் மேம்பாட்டுக்காக " என்று ஜம்பமாக  சொல்லிக் கொள்வார்கள் உண்மை என்னவென்றால் இந்த மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையை அபேஸ் செய்வது தான் முக்கியம் . இந்த தொகையும் ஆண்டு இறுதியில் தான் வரும்.

இந்த கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் மாதா மாதம்  கொடு    க்கப்படுவது இல்லை.எப்போது வரும் என்பது அந்த அக்கல்லூரியின் முதல்வருக்கே தெரியாது . 

இங்கு பணியாற்றும் விரிவுரையாளருக்கு மாதம் 5000/- ரூ சம்பளம் .பேராசிரியருக்கு 8000.-ரூ சம்பளம் அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் .


பெரும் வசதி படைத்த குடும்ப பையன்கள் மதிப்பிற்காக BE பட்டம் போட்டுக்கொள்ள இங்கு சேருகிறார்கள் .இவர்களிடமிருந்து capitation  fee லட்ங்சங்களில் வசூலிக்கப்படும்,. தாலாளாருக்கு அது போய்விடும்.. 

கல்லூரி நிர்வாக சிலவு அரசு ஸ்காலர்ஷிப் வைத்து நடக்கும்.

மற்ற கல்லூரிகளில் படித்து, compus interview  வில் ஒப்பெறாத மாணவர்களை தேடிப்பிடித்து இங்கு விரிவுரையாளர்களாக போடுகிறார்கள். குறிப்பாக  வெளியூர் சென்று வேலை  பார்க்க முடியாதக்குடும்பத்து  பெண்கள் கிடைத்தது பொதும்  என்று இந்த பணியில் சேருகிறார்கள். திருமணம் ,வேறு வாய்ப்பு என்று வந்தவுடன் இவர்களும் சென்று விடுகிறார்கள்..

இத்தகைய கல்லூரிகளின் "முதலாளிகள் " கல்லூரியை மூடவும் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் தேசிய நெடுஞ்சாலையில் கிடைத்த prime land  ன்  மதிப்பு மட்டும் பல கோடிகள் பெரும்.

 இந்த கல்வி வள்ளல்களின் முகம் இதுதான் !!!


Friday, April 28, 2017





அமைச்சர் செல்லூர் ராஜுவும் ,

"தெர்மாகோல் " பரிசோதனையும் ...!




மதுரையில் உள்ள எல்.ஐ.சி  மண்டல அலுவலகம் செல்லூரில் உள்ளது>அங்குதான் 30 வருடங்களுக்கு மேலாக  நான் பணியாற்றினேன். 

செல்லூர்,தத்த நெறி,பாரதிநகர் , என்று அந்த பகுதியில் நண்பர்கள் நிறைய உண்டு. தொண்டனாக இருந்த காலத்துலேயே செல்லூர் ராஜூவை பரிசயம் கொண்டவன் நான். அவருடைய அறிவார்ந்த திறமை பற்றி எனக்கு  அனுமானம் உண்டு.

நீர் ஆவியத்தலை  தடுக்க அவர் எடுத்துக் கொண்ட முயற்சி பற்றி முகநூல் நண்பர்கள் அவரை கிழித்து தோரணம் கட்டி விட்டார்கள்.ஈவு இரக்கம் இல்லாமல்   அவரை வசை  பாடிவிட்டார்கள் . அப்படி செய்யும் பொது தங்கள் அறியாமையையும் (முட்டாள் தனத்தையும்) வெளிப்படுத்தி னா ர்கள்.

நீர் ஆவியாவதை தடுக்கும் முயற்சியில் பலநாடுகள் ஈடுபட்டு க்கொண்டிருக்கின்றான. இதனை அவர்கள் இரண்டுவகையில் பார்க்கிறார்கள்.

நீர் ஆவியாவதால் ஏற்படும் நன்மைகள் எவை? அதனை தடுத்தால் சுற்று  சூழல் எவ்வாறு பாதிக்கப்படும் ?என்று ஒருபுறம் ஆராய்சசி நடக்கிறது.

மற்றோரு புறம் நீரை பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ! இதில் தெர்மாகோல் பற்றியும் ஆராய்சசிகள் நடக்கின்றன.

தெர்மக்கோலால் மூடப்பட்ட நீர் குறைந்த ஆக்சிஜன் கொண்டதாக இருக்குமா? அப்படியானால் அந்த நீரில் வாழும் உயிரினங்கள், மற்றும் உயிரிகள் என்னவாகும்? அதனால் சுற்று சூழல் என்ன வாகும்  என்று ஆராய்சசி நடக்கிறது. 

இதனை அரைகுறையாக புரிந்து கொண்ட அதிகாரி ஒருவர் கொடுத்த ஆலோசனையை பரீட்சார்த்தமாக செய்து பார்க்க அமைசசர் ஒப்புதல் அளித்துள்ளார்.

பல சதுரமைல் பரப்பளவு கொண்ட அணையில் 70 சதுர அடியில் பரிசோதனை முயற்சி நடந்துள்ளது.

அதற்குள் அவசரப்பட்டு  தங்களின் அறியாமையை முகநூல் அன்பர்கள் வெளிப்படுத்தி இருக்க வேண்டாம் .

Thursday, April 27, 2017

(இது ஒரு மீள்  பதிவு ) 
(யதார்த்தா பென்னேஸ்வரன் பதிவிட்டிருந்தார் )

27 ஏப்ரல் 2016 ·

"P.R.is a gentle man "


1936 ம் ஆண்டு நான் பிறந்தேன். என் மூத்த சகோதரிக்கு 1936ம் ஆண்டு திருமணம் நடந்தது. அவருக்கு 1942ம் ஆண்டு பெண் குழந்த பிறந்தது.1962ம் ஆண்டு அந்த பெண்ணை நான் திருமணம் செய்து கொண்டேன்.


என்மாமனார் ஒரு அப்புராணி .துஷ்டனைக்ண்டால் தூர விலகு என்று வளர்க்கப்பட்டசனாதனகுடும்பம்.தூரமாகவிலகமாட்டார்.ஒருமைலாவது தள்ளி நின்று கொண்டு எட்டிபார்க்கும் ரகம்.


நான் தொழிற்சங்கத்தில் ஈடுபாடு கொண்டவன். " எல்.ஐ.சி வேல லேசுலகிடைக்காது. தேவை இல்லாமல் சண்டய போட்டு வேலையை கெடுத்துக்காம இருக்க சொல்லு " நு மாணவி முலம் "அட்வைஸ் " வரும். என்னை பார்க்க வரும் நண்பர்கள் தலவர்கள் கம்யுனிஸ்டுகள் என்பது அவருக்கு தெரியும்.


"தினமணி " -"இந்தியன் எக்ஸ்பிரஸ் " பத்திரிகைகள் மூலம்கம்யூனிசம் பற்றி "அறிந்து " கோண்ட கோடானு கோடி அப்பாவி இந்தியர்களில் அவரும் ஒருவர் .கம்யுனிஸ்டுகளுக்கு இரண்டு கைகள் அல்ல -நான்குகைகள் -ஒருகையில் அரிவாள், மற்றோன்றில் கம்பு ,ஒருகையில் துப்பாக்கி, அடுத்ததில் குண்டு என்று ஒரு படிமத்தை கொண்டவர்களிலொருவர்.


அவர் ஓய்வுபெற்ற பின் மகளொடு பத்து நாட்கள் தங்க மதுரை வந்திருந்தார்.78-79 ஆண்டாக இருக்கலாம். அப்பொது தான் பைபாஸ் சாலைக்கு தீக்கதிர் ஆபிஸ் வந்த நேரம் . பக்கத்தில் இன்று மாதிரி கட்டிடங்கள் கிடையாது. தீக்கதிர் ஆபீசை ஒட்டி ஒரு குடிசைபோட்டு ஜோசப்ஃ என்ற கேரளத்துக்காரர் டீக்கடை போட்டிருந்தார். ஆபிசில் "கம்யூன் " இருந்தது.


மதுரை வந்திருநத P . R அவர்கள் இரவு அங்கு தங்க வேண்டியதாயிற்று.


நிர்வாகியான ராமராஜ் அவ்ர்கள் "டேய் ! சாமா ! பி ஆர் "நான் மிர்ச்சி " கோஷ்டி. ராத்திரி டவ்னுக்குகூட்டி போய் சாப்பாடு எற்பாடு பண்ணனும் . நீ ..." என்று இழுத்தார்.


"எதுக்கு தோழர் ! நான் கொண்டுவரேன் ! இல்ல அவர் வந்தா நல்ல சூடா.." ..."


"அதுக்கு தாண்டா ஒங்கிட்ட சொன்னேன் .ராத்திரி ரண்டு இட்லி சாப்பிடுவாரு. பால் கண்டிப்ப வேணும் .ரண்டு டம்ளராவதுகுடிப்பாரு "


"எத்தன மணிக்கு வருவாரு ?"


"ஏழரை மணின்னு வச்சுக்கோயேன் "


வீட்டில் என் மனைவியிடம் சொன்னேன். என்மாமனார் கேட்டுக் கொண்டிருந்தார். அவர் முகம் கோணியது. கம்யூனிஸ்ட் தலைவர் - அவரோடு ஒரே வீட்டில் - போலிஸ் மோப்பம் பிடித்தால் - பாவம் குட்டிபோட்ட பூனைமாதிரி அலைந்தார். காலையில் ஒரே பரபரப்பு . நாலுமணி இருக்கும். "நான் வேணா ஒரு ஏழுமணிக்கு பிள்ளையார் கோவில்ல பூஜை பாக்க போகட்டுமா ? உங்க தலைவர் வந்து போனதும் சொல்லி விடு .நான் கொவில்லேர்ந்து வரேன் " என்றார்.


"உங்கப்பாவுக்கு போலிஸ் காரன் இவர பிடிச்சுட்டு போயிடுவானோ நு பயம் "என்மனைவியிடம் சொன்னேன்.


"No! No! it is not like that " என்றார் என் மாமனார் .


இருந்தாலும் இருப்புக்கொள்ளாமல் தான் இருந்தார்'


வீட்டு குள்ளேயே வரவில்லை. வராண்டாவிலேயே இருநதார்


ஏழுமணிக்கு பி .ஆர் வந்தார். ஹாலுக்குள் வந்த மாமனார் ஜன்னலோரத்தில் இருப்புக் கொள்ளாமல் நின்று கொண்டிருந்தார்.


"தோழர் ! இது என் மாமனார் "


பீ ஆர் அவர்களுக்கு என் குடும்பம் மனைவி ஆகியோரை தெரியும் .


உன் அத்திம்பேரா ?


"ஆமா தோழர் "


"நாக்பூரா ? "


என்மாமனார் தலையை ஆட்டினார் !


"அப்படியா ! உங்களுக்கு ஹிதவாதா பத்திரிகை எடிட்டோர் எ.டி. மணியைதெரியுமா ?"


என்மாமனார் முகத்தில் ஒரு தேளிவு கிடைத்தது.


"கோபால கிருஷ்ண கோகிலே யோட சிஷ்யன் servents of india society மெம்பர் "


"வார்தால இருந்திருக்கேன் சுவாமி ! உம்மா பெயர் என்ன ?"


"நடராஜன் "


"படிச்சதெல்லாம் எங்க ?"


"மெட்ராஸ்ல ? "


"எந்த ஸ்கூல் ?"


"இந்து ஹைஸ்கூல் ,திருவல்லிகேணி !"


"நானும் அங்கதான்யா படிச்சேன் "


"அப்படியா !"


"உமக்கு ரங்கநாதன தெரியுமா ?"


"பெரிய தெரு ரங்கநாதானா ?'"


"ஆம்மாம் ஐயா ! கிரிகெட் பிளேயர் !"


"நல்ல தெரியும் ! நான் பால் பாட்மிண்டன் 1 அவன் கிரிகெட் !"


இருவரும் அவர்கள் வாத்தியார்கள் ,பள்ளி வாழ்க்கை என்று பேசிக்கொண்டார்கள் .


"தோழர் ! உங்க மாமனார் என் ஸ்கூல் மேட் "


பி ஆர் உணவு அருந்தி விட்டு கிளம்பினார் ஜீப்பில் ஏறும்போது "வரட்டுமா நடராஜன்" என்று மாமனாரிடம் விடை பெற்றார்.


அவரை அனுப்பி விட்டு படியேறினேன் !என் மாமனார் தன மகளிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.


"எவ்வளவு சிம்பிள் ! காந்தி ,நேரு , இந்திரா , எப்பேர்பட்ட தலைவர்களோடு இருந்தவர்."


"P.R is a gentle man "



Tuesday, April 25, 2017






"இந்தி " 

எங்க ல பேசுதான்    ? " 

1996ஆண்டு ஒய்வு பெரும் முன்பு ஓர் அகில இந்திய பயணம் மேற்கொண்டேன். அப்பம் தேர்தல் வேற. அப்படியே மே .வங்கம், திரிபுரா,  வாரணாசி,சிம்லா, பி டர் ,வார்தா ஆகிய இடங்களில் நடக்கும் தேர்தலையும் cover பண்ணலாம் என்று யோசனை. மொழிபெயர்ப்பாளர் வேண்டுமே அதனால் முத்து மினாடசி அவர்களையும் அ ழைத்து சென்றேன்.

கல்கத்தா சென்றதும் "கண சக்தி " அலுவலகம் சென்று திரிபுரா செல்வதற்கான ஏற்படுகளுக்கு உதவி கேட்டுக்கொண்டேன்.அவர்கள் திரிபுரா  செல்வதை வீட .வங்க தேர்தலை பாருங்கள் என்றார்கள். மறுநாள் முதல்வர் ஜோதி பாசு  அவருடைய தொகுதியான "சத்காசிய்யா    " போகிறார் .விரும்பினால் நீங்களும் அவரோடு போய்வாருங்கள் என்று கூறினார்கள்.

நானும் முத்து மீனாட்ச்சியும்  ஸத்காசியா செல்ல முடிவு செய்தொம். நகரத்தில் மம்தா வின் தொகுதியை தாண்டி கிராமப்புரங்கள்  வழியாக சென்றோம். போகும் பொது ஒருகுறிப்பிட இடத்தில் நாங்கள் சென்ற ஜீப பழுதாகிவிட நாங்கள் covoy விட்டு விலகி நின்றோம். 

அது வயல் வேளி கள் நிறைந்த கிராமம். நாங்கள் கிழே  இறங்கி காலரா நடந்தோம். வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி இடம் பேச முனைந்தோம். முத்துமீனாட்ச்சி இந்தியில் பேச அந்தவிவசாயி முழித்தார் . நாங்கள் பேசுவதை பார்த்த ஜீப்பில் வந்த தோழர் ஒடி வந்தார்.

நகரத்தில் (கல்கத்தா ) மட்டும் தான் இந்தி யில் சமாளிக்க முடியும் இங்கு இவர்களுக்கு வங்க மொழி மட்டும் தான் தெரியும் என்றார். இந்தி இவர்களுக்கு அந்நிய மொழி.

ஓர்வழியாக ஜீப்கிள ம்ப நாங்கள் ஸத்காசியா சென்று அடைந்தோம். கூட்டம் ஆரம்பமாயிற்று. தலைவர் வங்க மொழியில் பேசினார். முத்து மினாடசி அவர்களும் நானும் திரு திரு வென்று முழித்தோம். திணறி விட்டொம்.எங்கள் பாடுகளை கண்ட ndtv  நிருபர் "தீபா அவர்கள் தன்மகளை அனுப்பி உதவினார்> அந்த மாணவி வங்காளி மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நாங்கள் தமிழில எழுதிக்கொண்டோம்.ஜோதி பாபு  பேசஆரம்பித்தார். அவர் முழுக்க முழு க்க வங்க மொழியில் தான் பேசினார்.   

இதே தான் வார்தாவில் ஏற்பட்டது. நகரங்களில் சமாளிக்கலாம்> ஆனால் கிராமப்புறத்தில் "இந்தி " என்ற பப்பு வேகவில்லை .

இதே அனுபவம் தான் "பிடர் " தொகுதியிலும் கிடைத்ததுஅசாம், நாகாலாந்து,மேகாலயா என்று வட கிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை.

இந்தியாவில் 26% மக்கள் இந்தி தெரிந்தவர்கள். அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தை படித்தால் இந்த பாவிகள் செய்த சூது  விளங்கும். ராஜேந்திர பிரசாத்செய்த அராஜகமான , ஜனநாயக விரோத செயல்பாட்டினால், ஒரு ஓட்டில் இந்தி வென்றது .

1965ம் ஆண்டு இந்தி போராட்டத்தை மாணவர்களும் மக்களும் வீரமாக நடத்தினார்கள் . 

அந்த வெற்றியை மொழியின் பேரால் ஆட்ச்சிக்கு வந்தவர்கள் விரயமாக்கினார்கள்.

இன்று புதிதாக எழுத  வேண்டும் வரலாற்றை !!!