(per month lecturer rs 5000/- Proff rs 8000/-)
பொறியியற் கல்வி
" அம்பேல் " ....!!!
சென்னையின் தென் கோடியில் இருக்கும் தாம்பரத்திலிருந்து கன்னியாகுமரி வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. அதன் இரண்டு பக்கமும் டாஸ்மாக் கடைகளும்,பொறியியற்கல்லூரிகளும் உள்ளன . குறைந்தது 50 கல்லூரிகளாவது கண்களில் தென்படும்.
இவை அத்தனையும் தனியார் கல்லூரிகள். இவர்களுக்கு நிலம் இலவசமாக கொடுக்கப்பட்டுள்ளது .அல்லது ஈனக்க கிரயத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கல்லூரிகளின் தரம்பற்றி எழுதாமலிருப்பது நல்லது.
மாணவர் சேர்க்கை என்பது அநேகமாக இல்லை. அரசியல் செல்வாக்குள்ளவர்கள் பட்டியல் மாணவர்களை சேர்த்துக் கொள்கிறார்கள். "தலித் மாணவர்களின் மேம்பாட்டுக்காக " என்று ஜம்பமாக சொல்லிக் கொள்வார்கள் உண்மை என்னவென்றால் இந்த மாணவர்களுக்கான ஸ்காலர்ஷிப் தொகையை அபேஸ் செய்வது தான் முக்கியம் . இந்த தொகையும் ஆண்டு இறுதியில் தான் வரும்.
இந்த கல்லூரிகளில் ஆசிரியர்களுக்கு சம்பளம் மாதா மாதம் கொடு க்கப்படுவது இல்லை.எப்போது வரும் என்பது அந்த அக்கல்லூரியின் முதல்வருக்கே தெரியாது .
இங்கு பணியாற்றும் விரிவுரையாளருக்கு மாதம் 5000/- ரூ சம்பளம் .பேராசிரியருக்கு 8000.-ரூ சம்பளம் அதுவும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை கிடைக்கும் .
பெரும் வசதி படைத்த குடும்ப பையன்கள் மதிப்பிற்காக BE பட்டம் போட்டுக்கொள்ள இங்கு சேருகிறார்கள் .இவர்களிடமிருந்து capitation fee லட்ங்சங்களில் வசூலிக்கப்படும்,. தாலாளாருக்கு அது போய்விடும்..
கல்லூரி நிர்வாக சிலவு அரசு ஸ்காலர்ஷிப் வைத்து நடக்கும்.
மற்ற கல்லூரிகளில் படித்து, compus interview வில் ஒப்பெறாத மாணவர்களை தேடிப்பிடித்து இங்கு விரிவுரையாளர்களாக போடுகிறார்கள். குறிப்பாக வெளியூர் சென்று வேலை பார்க்க முடியாதக்குடும்பத்து பெண்கள் கிடைத்தது பொதும் என்று இந்த பணியில் சேருகிறார்கள். திருமணம் ,வேறு வாய்ப்பு என்று வந்தவுடன் இவர்களும் சென்று விடுகிறார்கள்..
இத்தகைய கல்லூரிகளின் "முதலாளிகள் " கல்லூரியை மூடவும் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் தேசிய நெடுஞ்சாலையில் கிடைத்த prime land ன் மதிப்பு மட்டும் பல கோடிகள் பெரும்.
இந்த கல்வி வள்ளல்களின் முகம் இதுதான் !!!
0 comments:
Post a Comment