skip to main |
skip to sidebar
"இந்தி "
எங்க ல பேசுதான் ? "
1996ஆண்டு ஒய்வு பெரும் முன்பு ஓர் அகில இந்திய பயணம் மேற்கொண்டேன். அப்பம் தேர்தல் வேற. அப்படியே மே .வங்கம், திரிபுரா, வாரணாசி,சிம்லா, பி டர் ,வார்தா ஆகிய இடங்களில் நடக்கும் தேர்தலையும் cover பண்ணலாம் என்று யோசனை. மொழிபெயர்ப்பாளர் வேண்டுமே அதனால் முத்து மினாடசி அவர்களையும் அ ழைத்து சென்றேன்.
கல்கத்தா சென்றதும் "கண சக்தி " அலுவலகம் சென்று திரிபுரா செல்வதற்கான ஏற்படுகளுக்கு உதவி கேட்டுக்கொண்டேன்.அவர்கள் திரிபுரா செல்வதை வீட .வங்க தேர்தலை பாருங்கள் என்றார்கள். மறுநாள் முதல்வர் ஜோதி பாசு அவருடைய தொகுதியான "சத்காசிய்யா " போகிறார் .விரும்பினால் நீங்களும் அவரோடு போய்வாருங்கள் என்று கூறினார்கள்.
நானும் முத்து மீனாட்ச்சியும் ஸத்காசியா செல்ல முடிவு செய்தொம். நகரத்தில் மம்தா வின் தொகுதியை தாண்டி கிராமப்புரங்கள் வழியாக சென்றோம். போகும் பொது ஒருகுறிப்பிட இடத்தில் நாங்கள் சென்ற ஜீப பழுதாகிவிட நாங்கள் covoy விட்டு விலகி நின்றோம்.
அது வயல் வேளி கள் நிறைந்த கிராமம். நாங்கள் கிழே இறங்கி காலரா நடந்தோம். வயலில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி இடம் பேச முனைந்தோம். முத்துமீனாட்ச்சி இந்தியில் பேச அந்தவிவசாயி முழித்தார் . நாங்கள் பேசுவதை பார்த்த ஜீப்பில் வந்த தோழர் ஒடி வந்தார்.
நகரத்தில் (கல்கத்தா ) மட்டும் தான் இந்தி யில் சமாளிக்க முடியும் இங்கு இவர்களுக்கு வங்க மொழி மட்டும் தான் தெரியும் என்றார். இந்தி இவர்களுக்கு அந்நிய மொழி.
ஓர்வழியாக ஜீப்கிள ம்ப நாங்கள் ஸத்காசியா சென்று அடைந்தோம். கூட்டம் ஆரம்பமாயிற்று. தலைவர் வங்க மொழியில் பேசினார். முத்து மினாடசி அவர்களும் நானும் திரு திரு வென்று முழித்தோம். திணறி விட்டொம்.எங்கள் பாடுகளை கண்ட ndtv நிருபர் "தீபா அவர்கள் தன்மகளை அனுப்பி உதவினார்> அந்த மாணவி வங்காளி மொழியை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க நாங்கள் தமிழில எழுதிக்கொண்டோம்.ஜோதி பாபு பேசஆரம்பித்தார். அவர் முழுக்க முழு க்க வங்க மொழியில் தான் பேசினார்.
இதே தான் வார்தாவில் ஏற்பட்டது. நகரங்களில் சமாளிக்கலாம்> ஆனால் கிராமப்புறத்தில் "இந்தி " என்ற பப்பு வேகவில்லை .
இதே அனுபவம் தான் "பிடர் " தொகுதியிலும் கிடைத்ததுஅசாம், நாகாலாந்து,மேகாலயா என்று வட கிழக்கு மாநிலங்களிலும் இந்தி பேசப்படுவதில்லை.
இந்தியாவில் 26% மக்கள் இந்தி தெரிந்தவர்கள். அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதத்தை படித்தால் இந்த பாவிகள் செய்த சூது விளங்கும். ராஜேந்திர பிரசாத்செய்த அராஜகமான , ஜனநாயக விரோத செயல்பாட்டினால், ஒரு ஓட்டில் இந்தி வென்றது .
1965ம் ஆண்டு இந்தி போராட்டத்தை மாணவர்களும் மக்களும் வீரமாக நடத்தினார்கள் .
அந்த வெற்றியை மொழியின் பேரால் ஆட்ச்சிக்கு வந்தவர்கள் விரயமாக்கினார்கள்.
இன்று புதிதாக எழுத வேண்டும் வரலாற்றை !!!
0 comments:
Post a Comment