Tuesday, February 13, 2018







சுந்தரம் அவர்களின் சாதனை -

ஓய்வூதிய பாதுகாப்பு !!


குருமூர்த்தி பெருமிதம் 



"இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஓய்வூதியம் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் மறைந்த தோழர் NMS தான் " என்று பெருமிதத்தோடு குருமூர்த்தி அவர்கள் குறிப்பிட்டார்கள்..

 இன்ஷுரன்ஸ் ஓய்வூதியர்கள் அகில இந்திய மாநாட்டில் குருமூர்த்தி (jt secretary Aiiea )பேசும்போது " வாங்கி ஊழியர்களுக்கு இந்த பாது  காப்பு இல்லை . ஒவ்வொரு ஊதிய உயர்வு பேச்சு  வார்த்தையின் போதும் ஊதிய உயர்வுக்கு ஏற்ப ஓய்வூதியமும் உயரவேண்டும். அப்படி உயரும் பொது கூடுதலான தொகை ஒதுக்க வேண்டுமென்றால் ஊழியர்கள் ஒரு குறிப்பிட்ட சாதமானம் நிர்வாகத்திற்கு கொடுக்க வேணும் .இது தான் வங்கியில் நடைமுறை ! ஆனால் இன்சூரன்ஸ் ஊழியர் திட்டம் அப்படி அல்ல.!  இதனை சாதித்தவர் சுந்தரம் அவர்கள் "என்றார்.


"இன்சூரன்ஸ் ஊழியர்  ஓய்வூதிய திட்டத்தில் ஒரு சிறப்பு அம்சம் சேர்க்கப்பட்டது .விதி 5 (3) சேர்க்கப்பட்டது அதன்படி  ஊழியர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய ஓய்வூதிய நிதி எந்த வித ஊழியர் பங்கேற்பும் இன்றி பாதுகாக்கப்படும் " என்று அது உத்திரவாதப்படுத்தியது " என்று குருமூர்த்தி விளக்கினார்.


ஓய்வூதிய போராட்டத்தையும்,அதன் காரணமாக கிடைத்த நன்மைகளையும்  அரைமணிநேரத்திற்கும் மேல் விளக்கி குருமூர்த்தி உரையாற்றினார்

Monday, February 12, 2018




"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல !காங்கிரசும் ,பா.ஜ.கவும் இல்லாத பாரதம் வேண்டும் !!"


மதுரை சந்திர சேகர பாரதி  பேச்சு 


"காங்கிரஸ் இல்லாத பாரதம் அல்ல நாம் வேண்டுவது> காங்கிரசும் பா.ஜ.க வும் இல்லாத பாரதம் வேண்டும் " என்று சார்பாளர்களின் விவாதத்தை துவக்கிவைத்தமதுரை சார்பாளர் சந்திர சேகர பாரதி பேசினார் .

"காங்கிரஸ் "பிளான்"  போட்டு கொடுக்கும் அதனை எதிர்ப்பது போல் பா.ஜ.க எதிர்க்கும் .பதவிக்கு வந்ததும் காங்கிரசுபோட்ட "பிளானை " நிறைவேற்றும்."என்று பாரதி விளக்கினார் .மதுரை மாண்டல ஓய்வூதியர் சங்கத்தின் செயலாளரான பாரதியை  சார்பாளர்கள் விவாதத்தைதுவக்கி வைக்கும் பணியை அளித்தது பெருமைக்குரிய ஒன்று.

"மோடி இந்தியா வளருகிறது என்கிறார். இல்லை பிரசினைகள் தான் வளருகினறன> மக்களின் வேதனைகள் தான் வளருகின்றன " என்று கூறிய பாரதி ." ஸ்மிருதி இரானி அம்மையார் .பத்திரிகைகள் தங்கள் பணியை சிறப்பாக  செய்ய வேண்டும் "என்று கூறினார் .அமிதா ஷாவின் மகன் செய்த ஊழலை அம்பலப்படுத்திய wire பத்திரிகையின் மீது 100 கோடிக்கு வழக்கு போட்டிருக்கிறார்.என்று குறிப்பிட்டு ஆளும் பா ஜ க வின்  இரட்டை நாக்கை விளக்கினார்.

சார்பாளர்கள் விவாதம் தொடருகிறது.

Sunday, February 11, 2018






சாராய போதை அல்ல !

ரத்த போதையில் சமூகம் இருக்கிறது !!

அமானுல்லாகான் பேச்சு !!!



"சமூகம் இன்று சாராய போதையில் அல்ல ! ரத்த போதையில் சிக்கிக் கொண்டிருக்கிறது " என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லா கான் கூறினார் .

நாகபுரியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்திவூயர் சங்கத்தின் 7 வது  மாநாடு   துவங்கியது இதனை துவக்கி வைத்த aiiea சங்கத்தலைவர் அமானுல்லா கான் " புகழ் பெற்ற உருது கவிஞர் ஒருவரை மேற்கோள் காட்டி பேசும் பொது." ஒருவன் சாராயம் குடிக்க சாராயக்கடையை  எங்கே எங்கே என்று தேடினான். கடையை பார்த்தான். அங்கு கூட்டமே இல்லை ! எப்போதுமே சலசலவென்று கூச்சலும்   கும்மாளமுமாக இருக்கும் சாராயக்கடையில் அமைதியாக இருக்கிறதைப்பார்த்து அவன் கடை முதலாளியிடம் கேட்டான் . இப்போ சாராயம் குடிப்பதில்லை . ரத்தம் தான் குடிகாணுவ ! அந்த போதை தான் வேணுமாம்" என்று கூ றி இருக்கிறான் .இது ஒரு கிராமிய கவிதை . இன்று சமூகம் ரத்தபோதையில் சிக்கி இருக்கிறது" என்று அமானுல்லா கான் கூறினார் .

சுமார் ஒருமணிநேரம் பேசிய அமானுல்லா கான் கையில் எந்த குறிப்பும் இல்லாமல் ஆற்று வெள்ளம் போல் பேசியதை கேட்டு பார்வையாளர்கள் பிரமித்து நின்றனர் .    

Sunday, February 04, 2018





தோழர்  ராஜனுக்கு,

இது பதில் அல்ல !!!




புரட்ச்சி என்ற வார்த்தை தமிழகத்தில் மலினப்பட்டு இருந்தாலும் எல்.ஐ.சி ஊழியர்களை புரட்ச்சிப்படை என்று வர்ணித்திருந்த ராஜன் அவர்களுக்கு நன்றி !

+2 மாணவர்களின் பாடத்திட்டத்தில்" இன்சூரன்ஸ் "  பாடத்தை சேர்த்து இன்சூரன்ஸ் துறைக்கு சேவை செய்வதாக மாய்மாலம் காட்டினார்கள் .சென்னையில்உள்ளபத்மாசேஷாத்ரிபள்ளிஇதனை பயன்படுத்தி  மாணவர்களை சேர்க்க ஆரம்பித்தது. இந்த மாணவர்களுக்கு எல்.ஐ.சி யில் வேலை வாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கும் வகையில் காரியங்கள் நடந்தன .பல மாணவர்கள் " அப்ரசண்டி"களாக நியமிக்கப்பட்டனர்.இதன் பின்னணியில் உள்ள சதியையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட அகில இந்தியாய் இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இதனை வெற்றிகரமாக நிறுத்தியது .

1994ம் ஆண்டு மண்டல கமிஷன் விவாதம் வந்தது அதற்கு பல ஆண்டுகள்முன்பாகவேஏ.ஐ.ஐ.இ.ஏ  சங்கமபிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டினை கேட்டு போராடி வந்துள்ளது .இட ஒதுக்கீடு ரோஸ்டரை தனியாகாதயாரித்து நிர்வாகத்தோடு மோதியது இந்த சங்கம். தோழர்  பாஸ்கரன் இந்த ரோஸ்டரை தயாரிப்பார்.(மதுரை ) . நிர்வாகம் பல சந்தர்ப்பங்களில் தன தவறை பாஸ்கரனின் பட்டியலோடு ஒப்பிட்டு திருத்திக்கொண்ட காலம் உண்டு.

மண்டல்  கமிஷன் உத்திரவை இந்திய அளவில் பலர் எதிர்த்த பொது. உடனடியாக அதனை நடைமுறைப்படுத்த போராடியவர்கள் இன்சூரன்ஸ் ஊழியர்கள்.

பொதுத்துறை யில் முதன்முதலாக மண்டல் கமிஷன் உத்திரவு நடைமுறைப்படுத்தப்பட்டது எல்.ஐ.சியில்தான்.

இதனை எதிர்த்து பா ஜ.க தலைமையில் குஜராத்தில் போராட்டம் நடந்தப்போது   பாஜாகாவை எதிர் த்து போராடி தாக்குதலுக்கு ஆளானவர்கள் எல்.ஐ .சி ஊழியர்கள்.

இன்றைய நிலைமை என்ன என்பதை ராஜன் கேட்கிறார் எத்தனை சதம்  பிற்படுத்தப்பட்டவர்கள், மற்றவர்கள் எத்தனை  என்பதை சொல்லுங்கள் என்று கேட்கிறார்.

தெரியவேண்டியதை தெரிந்து கொள்ளும் நெருக்கமான இடத்தில் இருக்கும் ராஜன் இதனை ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தெரிந்து கொள்ளமுடியும் !

பொதுவெளியில் தான் விவாதிக்க வேண்டும் ......???!!!

Friday, February 02, 2018




A . I .I .E .A  தலைமைக்கு ,

"தியாகம் " என்பது வார்த்தை அல்ல !

வாழ்க்கை !!!




சென்றவாரம் சென்னை சென்றிருந்தேன். முத்த தோழர் ஒருவரை சந்தித்தேன். ஒவர் அருகில் இருந்தஇளம்தோழரைஅறிமுகப்படுத்தினார்   "ஐயா உங்களுக்கு எத்தனை குழந்தைகள் ? " என்று அந்த இளம் தோழர் கேட்டார் 82 வயதான என்னிடம் கேட்கக்கூடிய கேள்வி அல்ல !நான் பதில் சொன்னனேன் !

"நான்கு பையன்கள் தம்பி !" என்றேன் .

"டேய் ! ஏண்டா போய் சொல்கிறாய் ! உனக்கு சத்தியமூர்த்தி என்று ஒரு பையன் தானே "!என்றார்  40 ஆண்டுகள் என்னோடு பழகிய அந்த நண்பர்.

"yes ! sathyamoorthy  is my biological son ! saroj ,sunil ,sundhram are my idealogical sons ! B ' cause they have takenaway my oldage worries and gave a peaceful retired life "என்றேன்

அவன் என் கைகளை அழுத்தி குலுக்கினான் ! அவன்கண்கள் ஈரமாக இருந்தது.

1996 ம் ஆண்டு நான் ஒய்வு பெற் றேன் 1 அன்று என்னிடம் gratutity ,leavesalary காசோலைகளை கொடுத்தார்கள். Pf காசோலையை சில நாட்களில் அனுப்புவதாக சொன்னார்கள்.

தோழர்களே சரோஜ் ஒய்வு பெற்ற பொது அவருக்கு காசோலை கொடுக்கப்படவில்லை. வீட்டு கடன் பாக்கிக்காக அவர்தான் காசோலை நிர்வாகத்திற்கு கொடுக்க வேண்டியதாக இருந்தது. காரணம் ... .நாற்பது ஆண்டு பணியில் அவர் 16 ஆண்டுகள் loss of pay ல்  இருந்திருக்கிறார்.  pay loss  மட்டும் சங்கத்தால் மாதாமாதம்  கொடுக்கப்பட்டிருக்கிறது. pf , gratuity ஆகியவற்றை யார் கொடுப்பார்கள். leave  இருந்தால் தானே salary  என்று வரும்.

சரோஜுக்கும், சுனிலுக்கும் பென்ஷன் கிடையாது. கிடைக்காது என்பது அவர்களுக்கும் தெரியும். உனக்கும்,எனக்கும்,அவனுக்கும், அவர்களுக்கும் கிடைக்க போராடிய ஜீவன் கள் அவர்கள்.

ஊ ழியர்களுக்கு  பிஎப் ம்  கிராஜூடியும்  ஆக இரண்டு பலன்கள் உண்டு .மூன்றாவதாக ஓய்வூதியம் வேண்டும் என்று சங்கம் போராடியது . சிலரின் தலையிட்டால் நமக்கு அது கிடைக்க வில்லை , pf  ல் நிர்வாகம் செலுத்தவேண்டியதை  பிடித்துக் கொண்டு ஓய்வூதியம் தர ஒப்புக்கொண்டார்கள்.

"உங்கள் third benifit  என்னஆசசு?"  என்று எதிரிகள் ஏகடி யம் பேசினார்கள்.  தோழர் சுந்தரம்" thirdbenifit கிடைக்கவில்லை என்பது உண்மைதான்ஆனால் இப்போது கிடைத்திருப்பது 2-1/2 பெனிபிட் "என்றார்.

96ம் ஆண்டு என் பிஎப்   ல்  நிர்வாகத்தின் பாங்கான 1.லட்சம் 80 ஆயிரத்தை பிடித்துக் கொண்டார்கள். கடந்த 22 ஆண்டுகளாக நான் வாங்கிய ஓய்வூதியம் கிட்டத்தட்ட 23 லட்சம் இருக்கும்.

நம் தலைமையின் தீர்க்க தரிசனத்தை என்ன சொல்லி புகழ !

aiiea  வின் தலைமை யை என்ன வென்று சொல்ல !!

" தியாகம் "என்பது அவர்களுக்கு வாரத்தை அல்ல !

வாழ்க்கை !!