Sunday, February 11, 2018






சாராய போதை அல்ல !

ரத்த போதையில் சமூகம் இருக்கிறது !!

அமானுல்லாகான் பேச்சு !!!



"சமூகம் இன்று சாராய போதையில் அல்ல ! ரத்த போதையில் சிக்கிக் கொண்டிருக்கிறது " என்று அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் தலைவர் அமானுல்லா கான் கூறினார் .

நாகபுரியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்திவூயர் சங்கத்தின் 7 வது  மாநாடு   துவங்கியது இதனை துவக்கி வைத்த aiiea சங்கத்தலைவர் அமானுல்லா கான் " புகழ் பெற்ற உருது கவிஞர் ஒருவரை மேற்கோள் காட்டி பேசும் பொது." ஒருவன் சாராயம் குடிக்க சாராயக்கடையை  எங்கே எங்கே என்று தேடினான். கடையை பார்த்தான். அங்கு கூட்டமே இல்லை ! எப்போதுமே சலசலவென்று கூச்சலும்   கும்மாளமுமாக இருக்கும் சாராயக்கடையில் அமைதியாக இருக்கிறதைப்பார்த்து அவன் கடை முதலாளியிடம் கேட்டான் . இப்போ சாராயம் குடிப்பதில்லை . ரத்தம் தான் குடிகாணுவ ! அந்த போதை தான் வேணுமாம்" என்று கூ றி இருக்கிறான் .இது ஒரு கிராமிய கவிதை . இன்று சமூகம் ரத்தபோதையில் சிக்கி இருக்கிறது" என்று அமானுல்லா கான் கூறினார் .

சுமார் ஒருமணிநேரம் பேசிய அமானுல்லா கான் கையில் எந்த குறிப்பும் இல்லாமல் ஆற்று வெள்ளம் போல் பேசியதை கேட்டு பார்வையாளர்கள் பிரமித்து நின்றனர் .    

0 comments: