Tuesday, March 08, 2011

சில விளக்கங்களும் சில குறிப்புகளும்......

சில விளக்கங்களும் சில குறிப்புகளும்....


சென்ற இடுகையான இ.பி.கோ 375 பலவிதமான வினைகளை எற்படுத்தியுள்ளாது. பின்னுட்டம்,தொலைபேசி, மற்றும் மின்னஞ்சல் மூலம் நண்பர்கள் எதிர் வினை ஆற்றியுள்ளார்கள். அவர்களுக்கு என் நன்றியைத்தெரிவித்துக்கோள்கிறேன்.

புராண மறுவாசிப்பு என்று வரு ம்போது இது சகஜமானதும் ஆகும். பல சமயங்களில் இவை சர்ச்சைகளையும், சில சமயங்களில்நெருக்கடிகளையும் உருவாக்கியுள்ளன.என்னுடைய சிறுகதையான ""அவளும் அந்த அவளும்" இப்படி ஒரு நெருக்காடியில் சிக்கியது உண்டு.

பாஞ்சாலி என்ற சித்தாள் சந்தர்ப்ப வசத்தால் ஐந்து ஆண்களொடு வாழ நேர்கிறது. இறுதியில் அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். அவளுடைய ஆவி ஒரு காட்டில் இறங்குகிறது அங்கு அவள் புராணகாலத்து திரௌபதி(பாஞ்சாலி). யைச்சந்த்திக்கிறாள்.திரௌபதி ஐந்து கணவன் மார்களோடு வாழ்ந்தாலும் அவளுக்கு கர்ணன் மீது ஒரு ஈடுபாடு இருந்தது. அதனால் அவளை சொர்க்கத்திர்க்குள் அனுமதிக்காமல் பேயாய் அலைகிறாள் என்பது கதை.இதற்கன ஆதாரங்கள் வில்லிபுத்தூறார் மகாபாரதத்திலிருந்து,பல நூல்களில் உள்ளது. இந்தக்கதை பல மொழிகளில்வெளிவந்துள்ளது.இந்தி மொழியில் திருமதி.முத்துமீனாட்சி அவர்கள் என்னுடைய தொகுப்பினை கொண்டு வந்தார்கள் வடநாட்டில் உள்ள பதிப்பகம் வேளியிட்டுள்ளது. இதற்கு மதிப்பிற்குரிய தோழர் சீத்தாராம் எச்சூரி அவர்கள் முன்னுரை அளித்திருந்தார்கள். கடைசி நிமிடத்தில் அவளும் அந்த அவளும் கதையின் முடிவு திரௌ பதியை கேவலப்படுத்துவதால் என்னுடைய பதிப்பகத்தை தாக்குவார்கள் என்று பதிப்பகம் பயந்தது..இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளுக்கு சட்டபூர்வமான பொறுப்பு "காஸ்யபன் என்று புத்தகத்தில் அச்சடித்த பிறகெ அது வேளியிடப்பட்டது.

புத்தமதத்தைச்சேர்ந்த பெண்மணி ஒருவர்பர்மாவிலிருந்து ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தார். புனே நகரத்தில் தங்கிசமஸ்கிருதம் படித்தார் இந்திய இதிகாசங்களை ஆராய்ந்தார். மகாபாரதத்தில் மனம் பறிகொடுத்த அவர் " யுகாந்தார்" என்ற நூலை எழுதினார்.ஐராவதி கார்வே என்ற பெயர் கொண்ட அவருக்கு சாகித்திய அகாதமி விருது அளித்தது. மகாபாரதத்தில் ,கங்கா தேவி,சத்யவதி,அம்பா அம்பிகை அம்பாலிகை, குந்தி, திரௌபதி என்று அந்தப்பெண்கள் பட்ட பாடுகளையும் அவலங்களையும் சித்தரிக்கும் நூலாகும் அது. தமிழிலும் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது.

அதே போன்று "மிருத்தியுஞ்சய" என்ற நூல மராட்டிய மொழியில் வந்துள்ளது.சிவாஜி சாவந்த் என்பவர் எழுதியுள்ளார்.கர்ணாணின் அழகு, பிறப்பு, அவன் சந்த்தித்த ஒடுக்கு முறை ஆகியவற்றை மீறி அவன் இரவாப்புகழ் பெற்றதைச் சித்தரிக்கும் நூல் அது. " மிருத்துஞ்சய" என்ற தொலைக்காட்சி தொடராக வந்தது. என்ன காரனத்தாலோ அதுபாதியில் நிறுத்தப்பட்டது.

எல்லாவற்றிர்க்கும் மேலாக ஒருவர்மின்னஞ்சல் எழுதியிருந்தார்.மிகவும் புத்திசாலித் தனமாக கதை கட்டி யுள்ளீர்கள்.எந்த இடத்திலும் முனிவர் குந்தியை வன்புணர்ச்சிகு உட்படுத்தியதாக குறிப்பிடவில்லை.ஆனால் வாசகனின் மனதில் அப்படி ஒரு எண்ணத்தை உருவாக்கி வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று கூறியுள்ளார்.எழுத்து என்பது craftmanship என்றால் இதனையும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தான்.

சிறுகதை என்பது தனிமனிதனின் அனுபவம். புராண இதிகாசங்கள் ஒரு சமூகத்தின் அனுபவம். இதொடு நிறுத்திக் கொள்கிறேன்.

5 comments:

சிவகுமாரன் said...

\\சிறுகதை என்பது தனிமனிதனின் அனுபவம். புராண இதிகாசங்கள் ஒரு சமூகத்தின் அனுபவம்.//

மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா .
உங்கள் அனுபவத்தை சொல்வது உங்கள் உரிமை. ஏற்றுக் கொள்வதும் , மறுப்பதும் படிப்பவரின் உரிமை.

'பரிவை' சே.குமார் said...

\\சிறுகதை என்பது தனிமனிதனின் அனுபவம். புராண இதிகாசங்கள் ஒரு சமூகத்தின் அனுபவம்.//

உண்மைதான்... நீங்கள் உங்கள் மனதில்பட்டதை பதியவே வலைத்தளம்...

hariharan said...

ஒரு குறிப்பிட்ட காலத்தில் நடந்த நிகழ்ச்சிகள் இன்று நமக்கு அநாகரீகமாக தோன்றலாம். அதற்காக இதிகாசம் மோசமானவ்ற்றை கொண்டுள்ளது என்று பார்க்கமுடியாது.

இன்னும் மஹாபாரதம் பற்றி எழுதுங்கள், சோ எழுதிய ‘மஹாபாரதம் பேசுகிறது’ படித்தபோது பாண்டவர்கள் தென்னிந்தியாவிற்கு வருகிறார்களாம் அப்போது சோழ்/பாண்டிய மன்னர்கள் ஆட்சி நடந்ததாம். எங்கே போய் முட்டுவது. குருஷேத்திரப்போரை முந்தைய யுகத்தில் நடந்தது என்ரு சொல்லிவிட்டு பாண்டிய தேசத்தை பார்த்தார்கள் என்றும் சொல்கிறார்கள்.

அப்பாதுரை said...

எல்லாம் பூச்சாண்டி.

விடுங்கள், ஆதாரம் உண்டா என்று சிவகுமாரன் கேட்டது எனக்கு இன்னும் வியப்பாக இருக்கிறது.

ராமன் ராவணனைக் கொன்றான் என்பதற்கு ஆதாரம் உண்டா? அனுமன் மலையைத் தூக்கிக் கடலைத் தாண்டியதற்கு ஆதாரம் உண்டா? சிவன் திரிபுரம் எரித்ததற்கு ஆதாரம் உண்டா? கண்ணன் மாயங்களுக்கு ஆதாரம் உண்டா? இந்தக் கற்பனைகளை ஆதாரம் கேளாமல் ஏற்றுக் கொண்டாடும் மனம், இன்னொரு கற்பனையை - தகாத உறவு, உன்னத இடத்தில் வைத்தவர்கள் பற்றிய தகாத உறவு என்ற கற்பனையை மட்டும் ஆதாரம் கேட்டு அதிர்ச்சியடைகிறது. வியப்பாகவும் கொஞ்சம் சிரிப்பாகவும் இருக்கிறது. வசிஷ்டரும் விசுவாமித்திரரும் ருஷ்யஸ்ருங்கரும் வரவழைத்துக் கொடுத்த ரகசியப் புத்திரக் காமேஷ்டிப் பாயாசம்... க்குக்க்ம்.. என்னவாக இருக்கும்? புராணங்களில் வக்கிரமில்லை - வக்கிரம் என்று நினைக்கும் வரை.

அப்பாதுரை said...

ரிஷபன், ஹரிஹரனின் கருத்துக்கள் சுவையானவை.

புராணத்தை எழுதியவர்கள் மனதில் வக்கிரமில்லை. முறைக்கு வெளியே நடந்தவைகளை இயல்பாகவே சொன்னார்கள் என்று நம்புகிறேன். மந்திரமும் மகத்துவமும் பின்னால் வந்தவர்கள் செய்த பிழை.