Thursday, March 24, 2011

பொட்டப் பிள்ளை.....

சிறு கதை "பொட்டப் பிள்ளை"
இந்தி மூலம்: ராம் தரஸ் மிஸ்ரா
தமிழில் :முத்துமீனாட்சி
அவள் ஒருமுறை பார்த்தாள்.பின்னர் தலையைக் குனிந்து கோண்டு படிக்க ஆரம்பித்தாள. அவளுடைய அண்ணன் முக்கி முனகிக் கொண்டு பாலைக் குடிக்க ஆரம்பித்தான்.
"சாவித்திரி! நீ பால் குடிச்சுட்டியா?" நான் கேட்டேன்.
அவள் என்னை நிமீர்ந்து பார்த்தாள்.பிறகு மீண்டும் படிக்க ஆரம்பித்தாள்.
குளிர்காலக் காலை நேரம் வீட்டின் எதிரே கொஞ்சம் வெய்யில் வந்திருந்தது.நான் திண்ணையில் உட்கார்ந்து கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தேன்.என் எதிரே என் அண்ணனின் பேரக் குழந்தைகள் அவரவர் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்..நான் என் அண்ணனின் மகனைப் பார்க்கத்தான் வந்திருந்தேன். பேரன் ஸ்வெட்டரும் காலில் பூட்ஸும் அணிந்திருந்தான்.பேத்தியின் காலில் எதுவுமில்லை. சீட்டி துணியில் ஃப்ராக் அணிந்திருந்தள்.
" ஏண்டா என்னைக் குத்தர! படிக்கவிடு"சிறுமி கத்தினாள். நான் திரும்பிப் பார்த்தேன். பேரன் அவளைக் குத்திகோண்டே அவள் பெனாவைப் பிடுங்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
" நீயும் படிக்க மாட்டெங்கற.என்னையும் படிக்கவிடாம நாள் பூர சேட்டைபண்ணிட்டே திரியுற" பேத்தி பேரனை லேசாகத்தள்ளிணாள்.அவன் புரண்டு விழுந்துவிட்டான்.அவன் எழுந்து அவள் தலைமுடியைப் பற்றி இழுத்தான். சிறுமி அலறினாள்.
எனக்கு கொபம் வந்தது.எழுந்து போய் அந்தப்பயலை நாலு போடுபோடலாமா என்று வந்தது.விருந்தாட வந்தவன் நான். அடக்கிக் கொண்டேன்.இரண்டு நாள் தங்கிவிட்டு போகிரவன்.இதில் நான் தலையிட்டால் குழந்தைகளை பெற்றவர்கள் என்ன நீனைப்பார்களோ!"விடு,விடு.ஏன் அடிக்கற" என்ற அதட்டலோடு நிறுத்திக் கோண்டுவிட்டேன்.அவன் என் பேச்சைக் காதுகொடுத்துக் கேளாதவன் போல் அவன் வேலையைச் செய்து கொண்டிருந்தான்.
குழந்தைகளின் தாயார் எட்டிப்பார்த்தாள்.பிறகு உள்ளே சென்றுவிட்டாள்.
இவள் என்ன தாய்.இவளுக்கு இதைப்பற்றி கவலையே இல்லை.. இதுகளின் சண்டையை நாமதான் நிறுத்தவேண்டும் போல் இருக்கிறது வலி தாங்க முடியாத அந்தச் சிறுமி அவன் கையில் லேசாக கடித்து விட்டாள்.
"ஐயோ! என்னக் கொல்றாளே!" என்று அந்தப் பையன் அலறினான்.திரும்பிப் போன தாய் வந்து அந்தப்பையனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டாள்." இவ கடிச்சுட்டாமா! ஆ..அப்பா" என்று பையன் அலறத்தொடங்கினான்.பெண்ணின் முதுகில் நாலு அறை கொடுத்து "சனியனே! அவனை ஏண்டி கடிச்ச! நாயே.."என்று பொரிந்தால் தாய்.
அந்தப்பெண் அழுகையை அடக்க முடியாமல் விம்மிக் கொண்டே" நான் எழுதும் போது பேனாவைப் புடுங்கினான் .என்னைக் குத்தினான்.என் தலை முடியை இழுத்தான்.அவன் கையிலிருந்து முடியை விடுவிக்க லேசா கடிச்சேன்" என்றாள்.
"இல்லமா! என்னை அழுத்திக் கடிச்சுட்டா"
"சனியனே பேனாவைப் புடுங்கினா கொடுத்திட வேண்டியது தானே! படிச்சு கவர்னரா வரப்போறியோ!" என்ரு கூறிய தாய் அவளிடமிருந்து பேனாவை பிடுங்கி அவனிடம் கொடுத்து" எழுதுடா கண்ண்ணா" என்று கொஞ்சினாள்.
"வவ்வவ்வே!எழுதுடா கண்ணா!எழுதவும் தெரியாது!ஒண்ணும் தெரியாது.தினம் கிளாசுல அடிவங்கறான்" என்று அந்தப் பெண் சிணுங்கியது.
"வாயை மூடு!போய் வேலையை பாரு!விடிந்து எந்திரிச்சதும் புஸ்தகத்தை எடுத்து வச்சு ஒக்காந்துட்டா!பொறவாசல்ல சாம்பல் இருக்கு.அத வயக்காட்டுல போட்டுட்டு வா"
அந்தப்பெண் எழுந்து சென்றாள்..சிறிது நேரத்தில் சாம்பல் கூடையுடன் வெளியேறினாள்.அந்தப் பெரிய மனுஷன்பேனாவைத்தூக்கி எறிந்துவிட்டு விளையாட ஒடிவிட்டான்.
.மதிய வேளை.அந்தச்சிறுமி தாயின் ஏவலுக்கேற்ப அங்கும் இங்கும் ஓடி வேலைபார்த்துக் கொண்டிருந்தாள்.
என் அண்ணன் மகனுடன் சாப்பிட உட்கார்ந்தேன்.அந்தச் சிறுமி மௌனமாக உட்கார்ந்திருந்தாள்.
"சாவித்திரி! நீ இன்னும் சாப்பிடல!முகம் தொங்கிப் போயிடுச்சே!வா!சாப்பிட! எம்பக்கத்துல உக்காரு"என்றேன் நான்.
"இல்லல்ல!நீங்க சாப்பிடுங்க! அவ அப்புறமா சாப்பிடுவா"
அண்ணன் மகனைப் பார்த்தேன்.அவன் முகத்தில் எந்த உணர்வும் இல்லை.அவன் சாப்பிட்டுக் கொண்டிருந்தான் அப்பொழுதுதான் அந்தப் பய புழுதிபடிந்த காலோடு ஒடிவந்தான்.
"அம்மா! ரொம்பப்பசி!சப்பாடு போடு!" என்று அலறியபடி வந்தான்.
"வாடா!கண்ணா! வா! கைய கழிவிட்டு வா! நான் தட்டுல வக்கிறேன்."
எதிரிலிருந்த கிண்ணத்த உதைத்தான். "முடியாது.எனக்கு பசிக்குது.முதல்ல சாப்பாடு பொடு!பொடூ" என்று கத்தினான்."சரிப்பா! எதுக்கு கத்தற" என்று கூறிய அம்ம தட்டை வைத்தாள். நான் அண்ணன் மகன்முகத்தைப் பார்த்தேன் மாற்றமில்லை.சாப்பிடுக் கொண்டிருந்தான். அந்தச் சிறுமி அமைதியாக உடம்பைக் குறுக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள்.
எனக்கு இது அதிசயமாக இருந்தது.சாப்படு முடிந்தது.வராந்தாவில் வந்து உட்கார்ந்தேன்.பையன் அங்கேயே விளையாடிகொண்டு இருந்தான்.
"ஐயோ! அம்மா! வயத்தை வலிக்குது..." என்று திடீரெண்று கத்த ஆரம்பித்தான்.
"கன்னா பின்னவென்று தின்றிருப்பான்" என்றேன் நான்.
"அப்படி ஒண்ணுமில்லை.நம்ம சாப்பிட்டதை தான அவனும்சாப்பிட்டான்" என்றான் அவனுடைய அப்பாவாகிய என் அண்ணன் மகன்
"நிறைய சாப்பிட்டானோ
" நிறையவா! அவன் எங்க சாப்பிடறான்.கொறிக்கத்தான் செயறான்.
" நேத்திலேருந்து பாக்கறென்.கொறிகர மாதிரி தான் சாப்பிடறான். "என்றேன் ஒப்புக்கு.விருந்துக்கு வந்தவன் நான். வம்பு எதற்கு.
" ஐயோ! வலிதாங்கலியே" என்று சிறுவன் கத்தினான்.
"சாவித்திரி"
"ஏன்ன பாபுஜி"என்று ஒடி வந்தாள் சாவித்திரி.அவள் கையில் பருப்பும் சோறும் இருந்த கிண்ணம் இருந்தது.சாப்பிட ஆரம்பித்திருக்கிறாள்.பாதியில் ஓடி வந்திருக்கிறாள்.
'சாப்பாடெல்லாம் அப்புறம்.முதல்ல ஒடிபொய் டாக்டர கூட்டி வா! நான் போய் சோடா வாங்கிட்டு வரேன்" என்ரு கூறிவிட்டு" ஏய்! வென்னிபோட்டுவை.இந்த்ப்பயலுக்கு வயத்த வலிக்குது" என்றான் மனைவியைப் பார்த்து.
சிறுமி கையிலிருந்த கிண்ணத்தைப்பார்த்தேன்.பருப்பும் ஆறி விறைத்துப்போன சோறுமிருந்த்தது.எனக்கு நல்ல சோரும் காய்கறி எல்லாம் இருந்ததே இவளுக்கு..அண்ணன் மகன் கடையிலிருந்து திரும்பி விட்டான், அவன் முகத்தில் எரிச்சல் தெரிந்தது."ராஸ்கல்! ஒண்ணும் கிடையாது.கடையை மட்டும் திறந்து வச்சிருப்பானெதுகேட்டாலுக் இருக்காது..சாவித்திரி வந்துவிட்டாள். " பாபுஜி! டாக்டர் எங்கேயோ போயிருக் காராம்"
குடிகேடி! எங்க போனாலும் காரியமாகாது!"என்றாள் அம்மா பையன் கத்திகொண்டு இருந்தான்.
இரு!இரு! எங்கிட்ட மாத்திரை இருக்கான்னு பார்க்கிறேன்" மாத்திரை இருந்தது கொடுத்தேன்.பையன் கொஞ்சம் ஆசுவாசமாகி விட்டான்.தூங்கி விட்டான்.தாய் அவனை தூக்கி கொண்டு
உள்ளே போனாள்.
" சாவித்திரி! ரெண்டு மூணூ பாத்திரமிருக்கு தேச்சுவை"
சாவிதிரியை மடியில் வைத்துகொண்டேன்.இந்தச்சிறுமிக்காக என் நெஞ்சு ஈரமாகியது.அவளை அணைத்து கொஞ்சினேன்."சாப்படு இருக்குடா கண்ணு! போய் சாப்பிடு" மடியிலிருந்து இறங்கினாள்.மெதுவாக சாப்பிட ஆரம்பித்தாள்.அவள் முகத்தில் மெல்லிய சொகம் இருந்தது.
" சாவித்திரி! அம்மா" மென்மையாக அழைத்தேன்.
என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
"உனக்கு கஷ்டமாயில்லயா?"
"என்ன தாத்தா?
"இதெல்லாம்?"
. இல்லை என்பது போல் தலையசைத்தாள்.
"ஏன்?"
"நான் போட்டைப்பிள்ளையல்லவா"
எதுவுமே நடக்காத மாதிரி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்

3 comments:

அப்பாதுரை said...

சின்ன சவுக்கடி.

kashyapan said...

"பொட்டப் பிள்ளை "என்ற இந்தக்கதையின் ஆசிரியர் ரம் தரஸ் மிஸ்ரா முனைவர் பட்டம் பெற்றவர்.டெல்லி பல்கலை கழகத்தில் பெராசிரியராக் இருந்து ஓய்வு பெற்றவர்.N.C.E.R.T இந்தக் கதையை கேந்திரிய வித்யாலய 7ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடமாக வைத்திருந்தது. "செம்மலரி"ல் இந்தக் கதை மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்ததும் பல பள்ளிகளீல் பள்ளிக் குழந்தகளால் நாடகமக நடிக்கப்பட்டது.---காஸ்யபனாக்.

hariharan said...

சாவித்திரி ஏதோ வேலைக்கார பொண்ணு நினைச்சேன், திரும்ப மேல வாசிச்சவுடனே ஆச்சரியப்படலை, கதைன்னு தோணலை நாம இத அன்றாடம் எங்கயாவது பார்க்கமே.