Saturday, March 19, 2011

வலைத்தளத்திற்கு வருகிறது பூட்டு.....

"வலைத்தளத்திற்கு வருகிறது பூட்டு"
2008ம் ஆண்டு வலைதளம் பற்றிய தொழில் நுட்ப சட்டாம் வந்தது. அதில் புதிதாக மத்திய அரசு ஒரு விதியினைச்சேர்த்திருக்கிறார்கள்.மத்திய அரசோ அல்லது அதனால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியோ நடு முழுவதும் வலைத்தலங்களை செயல் படாமல் செய்யும் அதிகாரம் கொண்டது அந்தப் புதிய விதி.
நாட்டின் இறையாண்மைக்கு கேடு விளைவிக்கும் எழுத்துக்கள்,தகவல்கள் என்ருகருதப்படும் வலைத்தளங்களை தடுக்களாம். மீறிச்செயல்படுபவர்களுக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை அளிகலாம் என்பதும் உள்ளது
இன்று இந்தியவில் 7கோடி வலைத்தளங்கள் உள்ளன. இது ஆண்டுக்கு 11/2கோடி வீதம் அதிகரித்து வருகிறது. பொய்யான தகவல்கள், மற்றும் வதந்திகலளை பரப்புவதைத்தடுக்கவே கொண்டுவருவதாக கூறுகிறார்கள். எந்த் ஒரு சட்டத்தையும் கொண்டுவரும் பொது அப்படித்தான் சொல்வார்கள். நடைமுறைப் பதுத்தும்போது அது ஜனநாயகத்தையும் கருத்துச்சுதந்திரதையும் நசுக்கவே பயன்படுத்துவார்கள் என்பது நம் அனுபவம். ..
இந்த விதிக்கு ஆதரவாகவும் எதிர்த்தும்குரல்கள் எழுந்துள்ளன.பல நாடுகள் அமெரிக்க உட்பட இத்னைக் கொண்டுவருவது பற்றி அலோசித்து வருகின்றன.சமீப காலங்களில் எகுப்து, டூனிசியா ஆகிய நாடுகளில் டுவிட்டர், ஃபேஸ் புக் ஆகியவை வெகுவாக பயன் படுத்தப் பட்டதகவும் அதன் மூலம் மக்கள் எழுச்சியுற்றதாகவும் நம்பப்படுகிறது.அந்த நாடுகளில் வலைதளங்களை செயல் படாமல் ஆட்சியாளர்கள் செய்தார்கள்.
நவீன தொழில் நுட்ப வளர்ச்சி அபரிமிதமாக உள்ளது.அதனால் தடுக்க முடியாது என்று கணிணீ நிபுணர்கள் கருதுகிறார்கள். தவிர நீதிமன்றம் இத்னை ஏற்காது என்றும் கூறுகிறார்கள்.
கூட்டிக்கழித்துப் பார்த்தால் ஒரு கேள்வி எழுகிறது!
நாம் என்ன செய்யப்போகிறோம்?
(ஆதாரம் "தீக்கதிர்"17-3-11)

16 comments:

'பரிவை' சே.குமார் said...

enna seiyappogirom...
eppavum pol pathivugalil nam veeraththai kattuvom... avalavuthaan...
poruththirunthu porpom sir...

எல் கே said...

எனக்குத் தெரிந்து ஒரு சட்டம் கட்டாயம் வேண்டும். இலவச வலைப்பூ இருக்கிறது என்பதாலேயே கண்டதையும் எழுதுபவர்களுக்கு வேட்டு வைக்க இது வேண்டும்

kashyapan said...

கண்டதை என்பதை முடிவு செய்வது யார்? நீங்களா? நானா? ஹேட்கான்ஸ்டபிளா? இன்ஸ்பெக்டரா? கலக்டரின் எடுபிடியா? யார்?----காஸ்யபன்!

எல் கே said...

காஷ்யபன் சார் , முதலில் யாரை வேண்டுமானாலும் தரக் குறைவான வார்த்தைகளில் எழுதலாம் என்ற நிலை மாறும்

ராஜ நடராஜன் said...

தமிழகத்தில் கூட பூட்டு சட்டம் கொண்டு வருவதற்கு பூங்கோதைக்கு ஆணைப் பிறப்பிக்கப்பட்டது.

நீரா ராடியாவுடன் பேசுவதற்கும்,ஸ்பெக்ட்ரம் தொகையை எங்கே சேர்க்கலாம் என்ற திட்டமிடலுக்குமே நேரம் போதாததால் அது இந்தக் கணம் வரை கிடப்பில் போடப்பட்டு விட்டது.

தொலைக்காட்சி ஊடகங்கள் உடனடியாக செய்ய வேண்டிய பொதுநல விழிப்புணர்வை இணைய தளமே செய்து கொண்டிருக்கிறது.

Shanmugam Rajamanickam said...

திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுங்க சார். அதுவும் வலையுலகில் சொல்லவே வேணாம்...

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

சகோ.காஷ்யபன்,
நல்லதொரு பகிர்வு. நன்றி.

//பொய்யான தகவல்கள், மற்றும் வதந்திகளை பரப்புவதைத்தடுக்கவே கொண்டுவருவதாக கூறுகிறார்கள்.//
---என்றால், நம் நாட்டின் பல முன்னணி பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் எல்லாமே பல ஆண்டுகளாய் இதைத்தானே அவ்வப்போது செய்து வருகின்றன..?!?

அவ்வளவு ஏன்..? இதற்கு முற்றிலும் அடிக்கல் நாட்டியவர்களே நம் அரசியல்வாதிகளும் பிரபல ஊடங்ககளும்தானே..?

என்னைக்கேட்டால், வெகுஜன ஊடகங்களை விட (பத்திரிக்கை/தொலைகாட்சி), இன்றைய வலைத்தளங்கள் பெரும்பாலும் எவ்வளவோ நேர்மையாக உள்ளன.

வலையில் யாராவது பொய் சொன்னால், தேடுபொறிகள் மூலம் உடனே தெரிந்து விடுகிறது.

பொய்யான தகவல்கள், மற்றும் வதந்திகளை வலைத்தளங்கள் மூலம் பரப்புவது என்பது மிக மிக மிக மிக மிக மிக மிக கடினம். நம்ப முடியாதது.

Unknown said...

எதுவா இருந்தாலும் நம் நாட்டுக்கு இதன் பயன்பாடு இருக்குமா ?

தமிழ்வாசி பிரகாஷ் said...

ம்ம்ம். வரட்டும் பார்க்கலாம்.....


எனது வலைபூவில் இன்று: வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

suvanappiriyan said...

சிறந்த பதிவு. அளவுக்கு அதிகமான சுதந்திரமும் சிலரை எல்லை மீறி போகச் சொல்கிறது என்பதையும் மறுக்க முடியாது.

அப்பாதுரை said...

தடுப்புச்சட்டம் அடிப்படை உரிமையைப் பாதிப்பதாகத் தெரியவில்லை - இந்தியச் சட்ட விவரம் தெரியாது. அமெரிகாவில் தீவிரவாதம், தீவிர இனப்பகை இவற்றைக் கண்காணிக்கவும் தேவைப்பட்டால் ஒடுக்கவும் மட்டுமே சட்டம் வழி செய்கிறது. பத்து வயதுப் ஆண்/பெண்களை இணையத்தில் sex trade செய்வதை தடுப்பதில் ஒரு தவறுமில்லையே? 'மந்திரி பிடிக்கவில்லை, குண்டு போட்டு சாகடி' என்று பொதுவாக எழுதுவதைத் தடுப்பதில் தவறில்லையே? பிராமணன், தலித் (?), முஸ்லிம் என்று ஆளுக்காள் பூசல் செய்வதைத் தடுப்பதில் தவறில்லையே? பூட்டு என்றதுமே பயப்படுவதும் பயமுறுத்துவதும் sensationalism. எதற்காகப் பூட்டு என்பதைத் தெரிந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். 'பொய்யான தகவல்கள்...' என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது சரியென்றே நினைக்கிறேன்.

எல்லாருமே சைனா போல் சாதாரண உரிமைகளை மிதித்து நாசமாக்குவார்கள் என்று தோன்றவில்லை. பொதுவாக இது போன்ற உரிமைமீறல் சட்டங்களைத் தகாத முறையில் பயன்படுத்துவது கம்யூனிச நாடுகள் மட்டுமே - வெளியே கருத்து உரிமை எழுச்சி என்று சொல்லிக்கொண்டு மக்களை அடக்கி வைப்பது பெரும்பாலும் கம்யூனிச மற்றும் சர்வாதிகார அரசாங்கங்கள் தான்.

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! சும்மாயிருக்க மாட்டீரே. கொளுத்திப் பொட்டுவிடுவீர் என்று எதிர்பார்த்தென். "வொக்கிலீக்ஸ் கு.பிறகும் தோன்றுகிறதே. .முதல் U.P.A அரசாங்கம் எப்படிவந்தது? "வால்ட் ஸ்டிரீட்" பத்திரிகையில் தலையங்கம் எழுதினார்கள்.மன்மோகன் சிங் பொரதமர். சிதம்பரம் நிதி. மாண்டேக் சிங் அகுவாலியாவுக்கு அமைசர் அந்தஸ்தில் பதவி. அப்படியானால் சோனியா இந்திய அரசியலில்செயல் படலாம் என்றார்கள். இரண்டாவது U.P.A அகுலிவாலியாவை கோண்டுவர திருமதி கிளிண்டன் வேலை செய்தார்..ஒரு ஏம்.பிக்கு 10கோடி.பஜக உட்பட 19 பேர் cross votting. இவை யெல்லாம் வலைபூக்களில் நாருகிறது. லிபியாவில் என்ன கொள்ளை?. அமெரிக்காவிற்கு என்ன லாபம்? வலைப்பூக்களில் வரத்தான் போகிறது. அவர்களால் தடுக்க முடியுமானால் தடுக்கட்டும்.முடியாது, நண்பரே!---காஸ்யபன்

இராஜராஜேஸ்வரி said...

கட்டுப்பாடான சுதந்திரமே வரவேற்கத்தக்கது.

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

எழுத்து சுதந்திரம் அவசியம் தான்... ஆனால் தணிக்கையும் தேவையே... அந்த வகையில் இந்த சட்டம் வரவேற்க தக்கதே... ஆனால் இதிலும் ஊழல் புகுந்து "கட்சிக்கு ஒரு டிவி" கதை போல் ஆகி விடாமல் இருந்தால் புண்ணியம்... நல்லா பதிவு

அப்பாதுரை said...

லிபியா விவகாரத்தில் அமெரிகா தலையிடுவதில் எனக்குக் கொஞ்சம் கூட உடன்பாடு இல்லை.

ஹ ர ணி said...

அன்புள்ள...

எந்தவொரு புதிய நிலைப்பாட்டிலும் அதைக் கண்மூடித்தனமாகத் தடுப்பதற்கு உடன் சட்டம் வந்துவிடுகிறது. பலருக்கு நியாயமாகப்படுவது அரசுக்குத் தவறாகக்கூடப்படலாம். அரசு வலைப்பூக்களைப் பார்வையிட்டு அல்ல முழுமையாகப் படித்து தணிக்கை செய்வதில் தவறேதும் இல்லை. பொய்யான தகவல்களைத் தந்தோரைத் தண்டிக்கட்டும். அதேசமயம் பல நல்ல செய்திகளையும் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சிந்தனைகளையும் தரும் வலைப்பூக்களைக் கண்டு அதனை உடனடியாக நடைமுறைப்படுத்துமா? அதனை உலகறிய அறிவிக்குமா? பொறுத்திருந்து பார்க்கலாம். பயனுள்ள பதிவு. நன்றிகள்.