Saturday, March 19, 2011

புள்ளியும் விபரமும்....

சிறு கதை


புள்ளியும் விபரமும் (காஸ்யபன்)

ஸ்டேட் பாங்கைத்தாண்டியவுடன் என்னையறியாமல் நின்றுவிட்டேன்.என் மண்டையில் ஏதோ குறுகுறுப்பு....ஞாபகத்தில் மெல்லிய வார்த்தைகள்....."சாகவேண்டும்....சாகத்தான் வேண்டும்". இந்த வார்த்தைகள் யார் கூறியது? எப்போது கேட்டது?யார்....யார்....ம்...மவுண்ட்றொடு கூட்டநெரிசலில் அவ்ர் என்னக் கடக்கும் போது காதில் விழுந்த வார்த்தைகள்....கோட்டும் சூட்டும் அணிந்த அவர் யார்? யார் அவர்? நான் திரும்பிப் பார்த்தேன்.

கலைந்த தலை-கோட்டு சூட்டு அணிந்த அந்த மனிதர் அந்தபெரியகட்டிடத்தினுள் நுழைந்தார். மாலை எழு மணிக்குள் ஆசிரியரைப்பார்த்து அன்றய செய்திகளை எழுதிக் கொடுக்க வேண்டும்.இருந்தும் நிருபருக்குள்ள புத்தி என்னை விடவில்லை.வெகமாக நடந்து அந்த மனிதரைப் பிடிக்க முனைந்தேன்.அவர் கட்டிடத்தினுள் அமைந்திருந்த லிப்டின் வரிசைக்காக காத்திருந்தார்.நான் அவருக்குச்சற்று தள்ளி நின்று கொண்டேன்.

லிப்டில் நுழைந்ததும் பதினோன்று என்றார். நான் உடனே சமாளித்துக் கொண்டு பத்து என்றேன். பத்தாவது மாடியில் இறங்கி மெதுவக பதினோன்றாம் மாடிக்கு ஏறினேன்.அதற்குள் அவர் மறைந்து விட்டார். சிறிது நேரம்நிதானித்தேன்.மேல் மொட்டை மாடிக்கு போகும் ஆள் அரவம் கேட்டது..நானும் மெதுவாகச் சென்று மொட்டைமாடியை அடந்தபோது அந்த மனிதர் கைப்பிடிச்சுவர் மீது ஏறிவிட்டார்.நான் பாய்ந்து அவர் கைகளைப் பற்றி இழுத்தேன்.

"சாகவேண்டும்..சாகத்தான் வேண்டும்" அவ்ர் வாய் முணுமுணுத்தது.மூக்குக் கண்ணாடியின் வழியாகத் தெரிந்த அவர் கண்கள் குழப்பத்தையும் அவநம்பிக்கையையும் தெரிவித்தன..

"இல்லை! நீங்கல் வாழவேண்டும்..வாழத்தான் வேண்டும்" என்றேன் அவரை அணைத்தவாறே.

" நீங்கள் யார்? எதற்காக என் சொந்தவிஷயத்தில் தலயிடுகிறீர்கள்"என்றார் அவர். அவ்ர்கண்களங்குமிங்கும் அலைபாய்ந்தன.நான் பிடியத்தளர்தியவாறே "சகமனிதன் என்ற ஒரேகாரனத்திர்காகவே நன் உங்களைக் காப்பாற்ற வேண்டும்"என்றேன்.

"எனக்கு எதுவுமே இல்லை.நான் சாகத்தான் வேண்டும்"

" அப்படி என்னதான் வந்துவிட்டது உங்களுக்கு?"

" உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டிருக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை"என் கையை உதறினார். ஒரே பாய்ச்சலில் கைப்பிடிச்சுவர் எறி...நான் அவருடைய கோட்டைப் பற்றி கொண்டேன்.கிழே மவுண்ட் ரோட்டில் ஜனங்களின் கவனத்தை நாங்கள் கவர ஆரம்பித்தோம் ஒரே ஆரவாரம்.கூட்டம் கூடிவிட்டது.போக்குவரத்து ஸ்தம்பித்துவிட்டது.நான் பலமாக அவரை இழுத்து கீழே தள்ளினேன். "நீங்கள் யார்?" என்றுஅவரைஅதட்டினேன்.

" நான் யார் என்று கூறுகிறேன்.அப்படியானால் என்னை சக அனுமதிப்பாயா?" என்றார்.

"சரி " என்றென்.எனக்கு அவகசம் தேவை.இந்த மனிதரைப் பேச வைக்க வேண்டும்.அதன்மூலமவர் மனப்போக்கை மாற்ற வேண்டும்

"நீங்கள் யார்?"

" நான் புள்ளீத்திட்ட பொருளாதாரக்கமிஷனின் தலைவர்......நான் சாகலாமா?"

"இருங்கள். இன்னும் சில கேள்விகள் இருக்கின்றான?"

"முடியாது"

"அப்படியென்றால் உங்களை விடமாட்டேன்"

விருட்டென்று பாய்ந்து முண்டி சுவரை அடந்துவிட்டார்.கீழே ஜனங்களின் கூட்டம் பெரும் திரளாகிவிட்டது.இந்த மனிதரின் தலையைக் கண்டதும் ஒரே கூச்சல்.நான் அவருடைய கோட்டை கெட்டியாகப் பிடித்துக்கொண்டே கேட்டேன்"நீங்கள் ஏன் சாகவேண்டும்?"

"நான் சொன்னதெல்லாம் பொய்யாகிவிட்டது"

"இல்லை! நீங்கல் சொன்னதெள்ளாம் பொயாகிவிடவில்லை"

"அதெப்படி உனக்குத் தெரியும்?"இ

"நீங்கள் சொன்னது என்ன வென்று தெரியதபோது அது பொய் என்று எப்பட்த்தெரியும்?'

" நான் இந்தவருடம் இரண்டு சதம்வேலையில்லாமை அதிகரிக்கும் என்றேன்"

"ஆமாம்"

"அது இப்போது நூருசதமாகிவிட்டது"

"அதனால் என்ன?'

"அதனால் என்னவா! நூலட்சம் ட்ன் விளையும் என்றேன்.நூற்றைம்பது லட்சம் டன் விளைந்துவிட்டது. "

"அவ்வளவுதானே"

"அது மட்டுமல்ல'

:"பின்?"

" நாள் ஒன்றுக்கு ஒரு நபருக்கு இரண்டுகிளோ அரிசி கிடக்குமென்றேன்."

"சரி"

"இப்போது அரிசி வாங்க வழியில்லாமல் இருக்கிறார்கள்"

அவரை சடக்கென்று நான் இழுத்துக் கொண்டுவிட்டேன்.மாடி ஒரத்தில் போலீஸ் வந்துவிட்டது.அவர்களைக் கைகாட்டி நிற்கச்செய்தேன்.இந்த மனிதர் திமிறினார். நான் பிடியை விடவில்லை. கிழே உள்ள ஜனங்களுக்கு மெலே குதிக்க முயற்சித்தது யார் என்று தெரிந்துவிட்டது.ஆயிரக்கணக்கில் ஜனங்கள் கூச்சல் போட்டார்கள். "தடுக்காதே! அவர் குதிக்கட்டும்"என்ற அவர்கள் கூச்சல் எங்களுக்குக் கேட்டது.

" பார்த்தீர்களா! ஜனங்கள் என்னை வேறுக்கிறார்கள்.நான் சாகத்தான் வேண்டும்"

"எதர்காக நீர் சாக்வேண்டும். உம் குடும்பத்தை நினைத்துப்பாரும்.உம் குழந்தைகள்..மனைவி..."என்வாயை அவர் பொத்தினார்.

"மனைவியின் பெயரை இழுக்காதே.இனி அவள் முகத்தில் முழிக்க முடியாது"

"ஏன் ஏதாவதுதவறான வழியில்.."

"சீ! அதெல்லாம்"

"பின்"

"பொனவாரம் கடலை எண்ணை ஐந்து தொண்ணுராக இருந்தது."

"சரி"

"அப்போது எண்ணை விலைகுறையுமென்றேன்.எப்படிஎன்ரு கேட்டாள்.அந்நிய செலாவணி நிறைய இருக்கிறது.நாம் இறக்குமதி செயாப்போகிறோம் என்றேன்"

"அதுதான் உண்மையாகிவிட்டதே"

"எது"

" இறக்குமதிதான்"

"இறக்குமதியானது உண்மைதான்.ஆனால் கடலை எண்ணை பத்துரூ எழுபது பைசாவாகிவிட்டது.இன் ந் ஆன் என் மனைவியின் முகத்தில் முழிக்க முடியாது." திமிறிகொண்டு ஒடினார்.

அவர்டைய கையைபிடித்து இழுத்துக்கொண்டே கிழே எட்டிப்பார்தேன்.பயங்கரமான ஜனத்திரள்.அவர்கள் எல்லாரும் தங்கள் கண் எதிரே ஒரு மனிதன் கீழே விழுந்து சாகப் போவதைப்பார்க்க தயாராக இருக்கும் ஆவலோடு காத்திருந்து கூச்சல் போடுகிறார்கள்.

"நீங்கள் சாகத்தான் வேண்டுமா?"

"ஆமாம்"

"நீங்கள் இங்கே சாகத்துடிக்கிறிர்கள்.அங்கே உங்கள் ஆபீசில் என்ன நடக்கிறது தெரியுமா?"

"ஒன்றும் நடக்காது.எங்கள் கமிஷனையே கலைத்துவிடும்படி குறிப்பு எழுதிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்"

"ஆனால் உங்கள் உதவிதலைவர் கமிஷன் கூட்டத்தையே கூட்டிவிட்டார்"

"என்ன" திகைத்தார்.

"உன் களுக்கு புத்திசவாதீனம் இல்லயென்றும் உங்கல் இடத்தில் அவரத்தலைவராகா ஆகியும் தீர்மானம் போட்டு விட்டார்கள்."

"பாவி! அவன் அப்படிச்செய்வானேன்று எனக்குதெரியும்.அவனை என்ன செய்கிறென் என்று பார்" என்று கூறிகொண்டே படிகட்டை நோக்கி ஓடினார்.

போலீஸார் கூட்ட நெரிசலை விலக்க அவர்காரெறிசென்றபோது அங்கு கூடியிருந்த ஜனங்களைப் பார்த்தென்.அவர்கள் முகத்தில் தான் எத்தனை எமாற்றம்

(1977ம் ஆண்டு செந்தில் நாதனின் "சிகரம்" பத்திரிகையில் வந்தது.)

6 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

இதை விட புள்ளிவிவரங்கள் மீதான நையாண்டியைப் பார்த்துவிட வாய்ப்பில்லை காஸ்யபன் சார்.

துவக்க வரியிலிருந்து இறுதிவரி வரை நல்ல சீரான ஓட்டமும் கிண்டலும் கலந்து எழுதப்பட்ட இந்த எமெர்ஜென்சி காலக் கதை என்றும் பொருத்தமானதாக இருக்கும்.

மதுரை சரவணன் said...

பதவிமீது மோகம்... சமூக நையாண்டி யில் வைத்துள்ள விசயங்கள் அருமையாக வரிசைப்படுத்தப்படுள்ளது..வாழ்த்துக்கள்

அப்பாதுரை said...

புன்னகையை மறைக்க முடியவில்லை.

பாரதசாரி said...

கடலை எண்ணெயின் விலையை மட்டும் மாற்றினால் இது இன்றைய கதை :)

இராஜராஜேஸ்வரி said...

என்றும் பொருந்தும் எவர் கிரீன் கதை.

சிவகுமாரன் said...

சரியான கிண்டல்.
கடலை எண்ணெய் பத்து ரூபாயா?