Tuesday, March 15, 2011

சமஸ்கிருத மொழி பற்றி ஒரு விளக்கம்......

சம்ஸ்கிருத மொழி பற்றி ஒரு விளக்கம்.....


சென்ற இடுகையில் "காளிதாசனும் தர்க்கவியலும்" என்று எழுதியிருந்தேன்.அருமை நண்பர் சிவகுமரன் அவர்கள் தன் தந்தை சமஸ்கிருதத்தை படிக்கச்சொன்னபொது அது பிராம்மணர்கள் மொழி அதனை நான் ஏன் படிக்கவேண்டும் என்ரு தர்க்கம் செய்து படிக்காமல் விட்டதாகவும் கூறியிருக்கிறார்.மெட்றாஸ் மாகாணத்தில் இடைக்கால அரசு வந்த போது அதில் கல்வி அமைச்சராக இருந்த அவினாசிலிங்கம் சேட்டியார் அவர்கள் சில சீர்திருத்தங்களைக் கோண்டுவந்தார். ஆங்கிலத்தின் முக்கியத்துவம் மாறி தமிழிலேயே,விஞ்ஞானம்,வரலாறு,புவியியல்,சமூகவியல் என்று வந்தது.நிற்க

1975ம் ஆன்டு நாமக்கல்லில் நடந்த ஒரு கருத்தரங்கில்" சம்ஸ்கிருத மொழியின் தாக்கம்:

என்பது பற்றி நான் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.எனக்கு சமஸ்கிருதம் எழுதப்படிக்க மட்டுமே தெரியும். பதறிப் போன நான் அலுவலகத்தில் தினம் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு வரும் ஒர் மாமாவிடம் உதவிகேட்டுப்போனேன். அவர் கணபதிஎன்று மற்றொரு நண்பரைகாட்டி" கண்பதி சம்ஸ்கிருதத்தில் மககெட்டிக்காரன்.அவனை பிடி"என்றார்.கணபதி முதலில் மசியவில்லை.வெகு சிரமத்திற்குப் பிறகு உதவ சம்மதித்தார். சென்ற இடுகையில் நான் கூறியிருந்த வார்த்தையும் பொருளும்(வாகர்த்தாவிவ) துதிப்பாடல் பற்றி சொல்லித் தந்தவர் அவர்தான்.மெடையில் பேசுவதற்கு இது போதாது என்பதால் மேலும் சில தகவல்களைச் சொன்னார்.

இந்தியாவில் சனாதன தர்மத்தை அனுசரிப்பவர்கள் குறிப்பாக பிராமணர்கள் காலையில் ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை வாசிப்பார்கள்.இந்த ராமாயனத்தை எழுதியவன் வால்மீகி.இவன் அந்தணன் அல்ல. வைசியன் அல்ல.சூத்திரன் அல்ல.தாழ்த்தப்பட்டவன் அல்ல. அதற்கும்கீழே உள்ள அடுக்கான பழங்குடி மகன். மகாபாரதத்தை எழுதியவன் "வேத வியாசன்" வியசன் பிராமணன் அல்ல. ஏன்? அவர்கள் முதன் முதலில் பாடும் துதிப்பாடலை பாடிய காளிதாசன் நவீன யுகத்தின் கணக்குப்படி மிகவும் பிற்படுத்தப்பட்டவன். இதனை நண்பர் கணபதி தான் விளக்கிச் சொன்னார்.கணபதியின் பேயர் வீர கணபதி. சமஸ்கிருதத்தில் விற்பன்னரான அவர் பிராமணர் அல்ல.இரு நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த "மாம்பழக் கவிராயரின்" வம்சம்.பரம்பரையாக கோவில்களுக்கு இறைவனின் சிலைகளைச்செய்யும் சிற்பிகுலம். ஆகம விதிகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள் சமஸ்கிருத ஏடுகளை வீட்டில் பாதுகாத்து வருபவர்கள். ஆகையால் அந்த மொழியில் நிபுணத்துவம் பெற்றவர்கள்.சமஸ்கிருதம் படிக்க சாதி கிடையாது. அது பாதியில் வந்தது.

எப்போது வந்தது? 1978 ஆண்டு வாக்கில்மதுரையில் உள்ள இறையியல் கல்லூரியில் ஒருகருத்தரங்கம் நடந்தது. த.மு.எ.சவின் தலைவர் ச.செந்தில்ந்திருந்தார். அங்கு நடந்த விவாதத்தி கிருத்துவம் பற்றி பெச்சு வந்தது. "கிருத்துவத்தை பரப்புவதில் போதகர்கள் சிரமப்பட்டார்கள். பாரம்பரியமான இந்து மதத்திலிருந்து உழைக்கும் மக்களை கோண்டுவருவது எளிதாக இருக்கவில்லை.இதற்குபெரும் தடையாக இருந்தது மேல் சாதியினர். குறிப்பாக பிராமணர்களும், வெள்ளாலர்களும். திருவாவடுதுறை, சம்மந்தர்,சிருங்கேரி மடாதிபதிகளின் பிடிப்பு இறுக்கமாக இருந்தது.ஆகவே பிரிட்டோ, கால்டுவெல் ஆகியோர் பல்லக்கில் வர ஆரம்பித்தார்கள்.காதி கடுக்கண், நெஞ்சில் நூல், காவிஉடை,தலைபாகை அணிந்து பவனி வந்தார்கள். போத்கரை "ஐயர்" என்று அழைக்கும் பழக்கத்தை உருவக்கினார்கள். எல்லாவற்றிர்க்கும் மேலாக ப்ராம்மணர்களின் மொழி சமஸ்கிருதம். அது ஆரிய மொழி. அது நமது மொழியல்ல என்ற கருத்தை விதைதார்கள். அப்போது ஆண்ட பிரிட்டிஷாருக்கு கிருத்துவ மதம்பரவுவது அரசியல் ரீதியாக

உவப்பானதாகவே இருந்தது

1979ம் ஆண்டு மதுரையில் த.மு.எ.ச இலக்கியப் பயிற்சி முகாம் நடத்தியது.சமணமும் தமிழும், வைணவமும்தமிழும், சைவமும் தமிழும், கிருத்துவமும் தமிழும் என்று தலைப்புகள். பெராசிரியர் சாலமன் பாப்பையா கிருத்துவமும் தமிழும் என்ற தலைபில் இரண்டுமணி நேரம் கருத்துரையாற்றினார்.அவரும் இதனை குறிப்பிட்டார்.

இந்திய சுதந்திரப்போராட்டத்தின் போது தமிழ் நாடு பிரிவினையை வலியுறுத்தியவர்கள்

இதனை தங்கள் ஆரிய திராவிட பிரச்சாரத்திற்கு பயன் படுத்திக் கொண்டார்கள் இது வரலாறு.

19 comments:

ரிஷபன் said...

அப்போது ஆண்ட பிரிட்டிஷாருக்கு கிருத்துவ மதம்பரவுவது அரசியல் ரீதியாக உவப்பானதாகவே இருந்தது
இதுதான் உண்மை.
ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு விதமாக ஆண்டவர்கள் பிற பிடிக்காத சமயங்களை/ இனங்களை ஒடுக்கி வந்திருக்கிறார்கள். இன்று அரசியல்வாதிகள் அவர்கள் வீட்டு பிள்ளைகளை எல்லா மொழியும் படிக்க வைத்து பொது மக்களிடம் மொழி வெறுப்பை விதைத்து அறிவு வளர்ச்சியை தடை செய்து விட்டார்கள். பகுத்தறிவு என்பது ஒரு இனத்தின் மீதான வெறுப்பாகவே இனம் காணப்பட்டுவிட்டது!

RVS said...

அப்படியே வரிக்கு வரி ரிஷபன் சாரின் கருத்துக்கு ஒத்துப் போகிறேன். ;-)))

ராம்ஜி_யாஹூ said...

ஆங்கிலேயருக்கு சம்ஸ்கிருத மொழி பேசும் பிராமணர்களை அதிகம் பிடித்து இருந்தது என்றே பலர் சொல்லி நான் கேள்விப் பட்டேன்.
ஆங்கிலேயர்கள் சமஸ்கிரத மொழியை விட தமிழை அதிகம் நேசித்தனரா/முக்கியத்துவம் கொடுத்தனரா

சமுத்ரா said...

உண்மை தான்..நன்றி

Anonymous said...

On reading your profile I presumed you would examine the past and give your opinions.

But I find nothing of that sort.

You believe Ramayanam was written by a dalit?

That is a legend. Such legends are needed to bring a 'come hither' attraction to the religion. All religions adopt that unfair trade practices.

Valmiki was a hunter. He was a tribal in that sense. He lived in forests only. Any sort of academic learning of languages, let alone acquiring a mastery over it, is impossible to think.

Ramayanam was written in chaste Sanskrit with poetic beauty. And you accepted that concocted story that a forest dwelling tribal could write that.

I find so many other things also in your post. I first read you on Vanchinaathan where you accepted the received stories as they came to you. After that, now.

Kashyaban, please examine. Write your own opinions after such examiantions.

Historical happenings are mostly lies passed on to us.

Truth is unknown. It is ofter made to serve some vested interests.

In relgious history, such thins are so common. The brahins who rule the Hindu religions I mean wrote it, wrote it in a way they wanted. For e.g denying dalit saints dalit births. Because they could not accept an idea of a dalit woman's womb can produce a saint !

Please dont join the crowd and lose yourself. Examine everything on your own and tell us about the results of your examiantions.

I am looking forward to better posts from you.

Anonymous said...

About Robert Caldwell.

Why dont u know about him yourself ? Why to accept some fellow speaking from a public platform and reproducing them here to make others believe everything blindly?

Robert Caldwell was a passionate hater of Brahminism and Brahmins. You are saying here he imitated their manners. Never he did that.

He knew Sanskrit just as he mastered Malayalam, Kannada, Tamil and Telugu and also, Tulu - only for his reseach into dravidian languages.

He lived in Idyangudi, a tiny hamlet in Tuticorin district where no brahmins ever lived in any capacity. During summers he lived in Kodaikkanal.

RC kept away from Brahmins all his life. His brief interaction with them, in some church activities, had convinced him that they are frauds. He said that boldly.

You are saying here that he was fascinated with Sanskrit and Brahminical customs.

Roberto D' Nobili is the missonary an Italian sent by Roman church to India, who imitated the brahminism so much so that he was nicknamed 'White Brahmin'.

His imitation was with the motive of getting closer to Brahmins and he wanted them the prime catch. His efforst did not, however, bear fruit. Except his Sanskrit teacher Sharma, a Teluge Brahmin of Tanjavoor, no brahmin was converted to Christianity.

kashyapan said...

Dear sri Amalan sir! I am not a beleiver,For me No Rama.No Jesus. Before comenting on yourr reactions for my posting i suguest you to read "ramaayana rasana" by sri Parameswara iYer, and "Ramaayana as i see it",by Amirthalingam iyer both are in english. My point of discussion in the posting is sanskrit is not a language of Brahmins alone. Sir! permit me to maintain it---kashyapan

'பரிவை' சே.குமார் said...

வரிக்கு வரி ரிஷபன் சாரின் கருத்துக்கு ஒத்துப் போகிறேன்...

சிவகுமாரன் said...

எது எப்படியோ இன்றைக்கு சமஸ்கிருதம் பிராமணர்கள் மட்டுமே அறியும் மொழியாக இருப்பது உண்மைதானே. என் ஆதங்கம் அந்த அருமையான மொழியை கற்கவில்லையே என்பது தான்.
என் மகன் கேந்திரிய வித்யாலயாவில் ஒரு வருடம் படித்த போது 2 வது மொழிப்பாடமாக சமஸ்கிரிதம் படிக்க வைத்து என் ஆசையை தீர்த்துக் கொண்டேன்,
பின் மதுரை வந்த போது அதுவும் போயிற்று.
Joe Amalan அவர்களே நீங்கள் குறிப்பிடும் எல்லோரும் மதம் பரப்பத் தானே வந்தார்கள். உண்மையில் பாரதம் நலிந்து கிடக்கிறது, அதை முன்னேற்றுவோம் என்று வந்தார்களா?

அப்பாதுரை said...

ஜோ அமலன் சொல்லும் சில கருத்துக்களில் எனக்கு உடன்பாடு உண்டு.
(தலித் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது, காந்தி கிளப்பி விட்ட இன்னொரு அரிஜன் வகையா? ignorance is bliss sometimes) - படிப்பறிவில்லாத வேடனால் ராமாயணம் எழுதியிருக்கவே முடியாது. வால்மீகி மட்டுமல்ல வியாசன், காளிதாசன் என்று அத்தனை பேரையும் காட்டான், குயவன், திருடன் என்று கல்வியறிவு இல்லாத past இருப்பதாகக் காட்டி திடீரென்று பொக்கிஷமாக எழுதத் தொடங்கியது ஒரு dramatic effectக்காகத் தானே தவிர உண்மையல்ல. முற்போக்காக நினைக்கவும் பேசவும் செய்யும் நாம் சில சமயம் கண்மூடி விடுகிறோம் - வால்மீகி அந்தணன் என்பதில் உண்மையோ அல்லவோ, எந்தக் குறையும் அல்ல. அந்த நாளில் கல்வி ஒரு குறிப்பிட்ட வகுப்புக்குத் தான் வழங்கப்பட்டதென்றால் அதைப் பயன்படுத்தி ஒரு உன்னதக் காவியம் எழுதியவனை ஜாதி அடிப்படையில் பார்க்காமல் படைபபின் வழியாகப் பார்க்க வேண்டும். வால்மீகியை தலித் என்று கொடி பிடிப்பதும் பாரதியை பார்ப்பான் என்று கிண்டல் செய்வதும் ஒன்று தான். கலைஞர்கள் தங்கள் பிறப்பை மீறிப் படைக்கிறார்கள். கலைஞர்களின் பெற்றோர்களைப் பற்றிப் படித்தால் நான் சொல்வது புரியும். எத்தனையோ அந்தணர்கள் வந்து போன போது இந்த ஆள் காவியம் எழுதினான். அதுதான் முக்கியம். அவன் எந்த வகுப்பைச் சேர்ந்தவன் என்பதல்ல. வால்மீகி தலித்தோ அல்லது வேறு ஏதாவது வகுப்பில் பிறந்திருந்தாலும் திறமையிருந்ததால் ராமாயணம் எழுதியே இருப்பான்.

அப்பாதுரை said...

இரண்டு வார ஜூரிப்பணியில் நிறைய miss செய்திருக்கிறேன் போலிருக்கிறதே?

Pranavam Ravikumar said...

Great Post! My next plan is actually to learn sanskrit. The rhythm amazes me a lot when I chant the Manthras like Rudram, Purusha Sooktham. Thanks for the post.

அப்பாதுரை said...

வடமொழிச் சொல்வளம் பிரமிப்பூட்டினாலும், கவிதையில் தமிழ் போல் வளமான உருக்கள் கிடையாது. சாதாரண rhyme கூட பார்ப்பது அரிது. எதுகை பார்த்ததில்லை.

வடமொழி பேசுவது பிராமணர் என்பது எங்கிருந்து தோன்றிய கருத்தோ தெரியவில்லை. மற்றவரெல்லாம் அந்நாளில் எந்த மொழியில் பேசியிருப்பார்கள்?

அப்பாதுரை said...

வந்தவர்கள் அன்றைய பாரதத்தின் வளத்தையும் அதைப் பாதுகாக்கத் தெரியாத மக்களின் முட்டாள்தன உட்பகையையும் பார்த்து வந்தார்கள். மதம் எல்லாம் இரண்டாம் பட்சம்.

kashyapan said...

ஜோ அமலன் அவர்களே! அப்பாதுரை அவர்களே! சிவகுமரன் அவர்களே! வருகைக்கு நன்றி.சம்ஸ்கிருதம் எந்த ஒரு சாதிக்கும் சொந்தமானதல்ல என்பது தான் என்வாதம்.திராவிடமொழிக்குடும்பம் என்ற கருத்துக்கு அடிபடையான கூறுகள் என்ன என்பதைப்ப்ற்றி இன்னமும் ஆராய்ச்சிகள் நடந்தவண்ணம் உள்ளன. "கடவுள்" என்ரறு எழுதுகிறோம்." கம்பீரம்"என்கிறோம். "கல்யாணி" என்கிறோம். மூன்று இடத்திலும் "க" என்ற எழுத்தை பயன் படுத்துகிறொம். என் மராட்டிய நண்பர்களுக்கு क,ग,ख என்று எழுதினால் தான் வாசிக்கமுடியும். நாம் வாசிப்பதைப்பர்த்து ஆச்சரியப்படுகிறார்கள்.அவர்களுக்கு சதுர்வர்க்க வரிவடிவம். மலையாளம்,தெலுங்கு,கன்னடம் ஆகியவற்றிலும் இந்தவரிவடிவங்கள் தான்.
சாகுந்தலத்தில், துஷ்யந்தன்,சகுந்தலை, முனிவர்கள் ஆகியோர் சமஸ்கிருதத்தில் பெசுவார்கள்.தாதிகள், வெலைக்காரர்கள் ஆகியோர் பிராகிருதத்தில் பேசுவார்கள். நன்கு திருத்தப்பட்ட பிராகிருதம் தான் (சம்யகு+கிருதம்) சமஸ்கிருதம் என்கிறார்கள். பௌராணிகர்கள் வால்மீகியை,வியாசனை, காளிதாசனை அந்தணன் இல்லை என்று கூறுகிறார்கள்.அப்படியானால்,அவர்களால் சமஸ்கிருதம் எப்படி படிக்க முடிந்தது? என்ற கெள்வியை முன் வைத்தேன்.
ஆங்கிலெயர் வந்தபிறகு மொழியும் சாதியும் பெசப்பட்டுள்ளது. இங்குள்ள திராவிடக் குஞ்சுளும் அதனைப் பயன் படுத்திக்கொண்டன. வையாபுரிகளும்,மணிமேகலைகளும், ---- நிதிகளும்,பல மொழிகளைக் கற்று,அமெரிக்காவிலும் பிரான்சிலும் வசிக்கலாம். குப்பனும் சொக்கனும் முடியாது.மொழியும்,சாதியும் அரசியலாக்கப்பட்டு விட்டது...
தமிழ் தொன்மையான மொழி. ஆனால் கல்லும் மண்ணும் உருவாவதற்கு முன் தோன்றியது என்பது மூடநம்பிக்கை.
மொழி பற்றி நாம் நிரம்ப விவாதிக்க வெண்டியதுள்ளது. தெளிவு பெற வேண்டியதுள்ளது. ---காஸ்யபன்.

அப்பாதுரை said...

அருமையான விளக்கம் காஸ்யபன்!
இலக்கண சுத்த வடிவம் சம்ஸ்க்ருதம் என்றும், பரக்ருதம் தெரு வழக்கு என்றும் எல்லாரும் பொதுவாகப் பேசியது என்றும் படித்திருக்கிறேன். அரசன் தெய்வம் என்றால் உடனே நாம் சுத்த தமிழில் பேசுவதாகக் கற்பனை செய்யவில்லையா - அதே போல் தான்.

அழகிய நாட்கள் said...

//இந்த ராமாயனத்தை எழுதியவன் வால்மீகி.இவன் அந்தணன் அல்ல. வைசியன் அல்ல.சூத்திரன் அல்ல.தாழ்த்தப்பட்டவன் அல்ல. அதற்கும்கீழே உள்ள அடுக்கான பழங்குடி மகன்//இன்றைக்கு வால்மீகி என்றொரு சாதி வடபுலத்தில் மலம் அள்ளும் சாதியினராக வயிற்றைக்கழுவிக்கொண்டிருக்கிறார்கள். தவிரவும் வேதங்கள் என்பது சமஸ்கிருதம் மூலமாகவே அறியப்படும். என்றால் அதைப்படிப்பவர் பிறருக்கு சொல்லித்தரக்கூடாது. அல்லது வேதங்களின் உச்சரிப்பைக்கேட்டவன் காதுகளில் ஈயத்தைக்காய்ச்சி ஊத்த வேண்டும்(மனு).தவிரவும், சமஸ்கிருதம், இந்துஸ்தானி,உருதுவின் கலப்படத்தில் உருவான ஹிந்திதான் நமது தேச(ராஷ்ட்ர) பாஷை.

அப்பாதுரை said...

வால்மீகி என்று ஒரு ஜாதியா! அதிர்ச்சி திலீப்.

John Chelladurai said...

ஐயா,
நல்லதொரு கருத்து வாதத்தை தொடங்கி வைத்துள்ளீர்கள், பலனுள்ள தகவல்கள் பல வந்து கொட்டுகிறது, சுவாரசியமாக உள்ளது.
நன்றி.

1. வரலாறு பெரும்பாலும் நற்சிந்தனையுடன் எழுதப்பட்ட அனுமானக்கதைகளாகவே உள்ளன. ஒரு தனி மனிதன் தன் வாழ் நாளை தினக்குறிப்பாகத் தந்தாலே அது 100 வால்யும் தாண்டி விடும் அளவு அவன் வாழ்க்கை நிகழ்வு நிறைந்ததாக உள்ளது. அப்படியிருக்கையில், பல்லாயிரக்கணக்கான வருடங்களாக வாழ்ந்துவரும் மானிட இனத்தின் இயல்பை முழுமையாக சில பல புத்தகங்களில் அடைத்து விட்டதாக வரலாற்றுத் துறையும் மார் தட்ட முடியாது; அதன் புத்தகக்கட்டின் வழி உண்மையை முழுமையாக உணரந்து விட்டதாக தனிமனிதனாகிய நாமும் மமதை கொள்ள முடியாது. இது போக, குறைகளாலானவனே மனிதன் என்பதால், இயல்பாகவே காமாலைக் கொண்ட நமது கண்களுக்கு படிப்பதனைத்தும், சாதக பாதக தகவல்களாகவே நம்மில் வந்து விழுகிறது.
Truth lies in between the facts we know
2. நல்ல விஷயங்களைப் படிக்கும் போது, அதில் நாம் லயிக்கும் போது, அதனை நம் கருத்தாகவே கொள்வது மனித இயல்பு. கார்ல் மார்க்ஸை, முகம்மது நபியை, இயேசுவை, சாக்ரடீஸை, 'நம்மாளுயா' என நாம் கருதுவதில்லையா? இது உண்மையா பொய்யா என்பது வாதிடுபவர் பார்க்கும் கோணத்தில் உள்ளது என்பதால், இது உண்மைதான் (வால்மீகி நம்மாளுடா) என ஒரு சாரார் கூறுவது தவறு ஆகாது. உணர்ந்தவர்க்கு அது உண்மையே.

3. மானிட பயணத்தில் பல் வேறு மைல்கல்கள். அவற்றில் சிலவற்றை வரலாறு கோடிட்டுக் காட்டுகிறது பல வெளிச்சத்துக்கு வராமலே போனது. சொல்லப்போனால், ஒவ்வொரு மனிதனும் தனக்கேயுரிய வகையில் ஒரு மைல்கல்லாக இருந்திருக்கிறான். இன்று நாம் வாழும் வாழ்க்கை, இதுவரை வாழ்ந்த மானிடரின் ஒட்டுமொத்த பங்களிப்பின் விளைவே என்பதை நாம் மறுக்கமுடியாது.
எனவே, வரலாற்று விஷயத்தில் பங்காளிச்சண்டையும், வரப்புத் தகறாரும் நம்மைதான் குறுக்கிக் காட்டுமேயொழிய, மைல் கற்களையல்ல.