இந்த அரைக்கிறுக்கர்களும் உ.பி தேர்தல்களும்....
"அன்னா ஹசாரே" என்ற பெயரை கெட்டாலே எனக்கு கோபம் கோபமாக வரும். அதனாலேயே என்மீது கோபம் கொள்ளும் பதிவர்களும் உண்டு. உண்ணாவிரதமிருந்து முடிந்தவுடன் காந்தி சமாதிக்கு போனார். உலகம் பூராவிலிமிருந்து வந்த ஊடகங்கள் முன்னால் ஐந்து மாநில தேர்தலிலும் காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று பிரச்சாரம் செய்யப் போவதாக அறிவித்தார்.
சமீபத்தில் மகாராஷ்ற்றாவில் நடந்த தேர்தலில் இந்த புண்ணியவான் வாக்குச்சாவடி பக்கமே பொகவில்லை!
இவருடைய பிரதம "சிஷ்யன் " அரவிந்த கேசரிவால் . உ.பி யில் உள்ள இந்திரபுரம் வாக்குச்சாவடியில் அவர் வாக்குப் போடவேண்டும். அவரோ கொவாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டெல்லி விமானநிலயட்ந்திற்கு சென்றுவிட்டார்.இதை அறிந்த உள்ளூர் மக்கள் அவர் வீட்டிற்கு சென்று சத்தம் போட்டனர். உடனெயே தகவல் டெல்லி விமான நிலயத்தில் காக்திருந்த கேசரிவாலுக்கு தெரியாபடுத்தப் பட்டது ."மறந்து விட்டேன். இதோவருகிறென்" என்று கூறி காரில் திரும்பி வந்தார். வாக்குச்சாவடிக்குப் போனார் வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை .
அரவிந்த் கேசரிவால் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளாதா என்று பரிசீலிக்க மாட்டார். அன்னா ஹசாரே இருந்தாலும் வக்குச்சாவடிக்கு வரமாட்டார்..
இந்த கிறுக்கர்கள் சென்னை வந்த போது இவர்களுக்கு மண்டபம் பிடித்துக் கொடுத்தவர் யார்? உங்களுக்குத்தெரியுமா?
6 comments:
யார் ? தெரியாதே,
உங்களுக்காவது அன்னா ஹசாரே பேரைக் கேட்டால் கோபம் வருகிறது. எனக்கு அரசியல்வாதிகள் பேரைக் கேட்டாலே அலர்ஜியாகிறது. .
அருமை சிவகுமரன் அவர்களே! காமராஜர் பெயரைக் கேட்டால் அலர்ஜி வருகிறதா? கக்கன் பெயரைக்கேட்டால் அலர்ஜி வருகிறதா? முத்துராமலிங்கதேவர்,பி.ராமமூர்த்தி பெயர்களைக் கேட்டால் அலர்ஜியா? இ.எம்.எஸ், நிருபன் சக்ரவர்த்தி , பெயர்களும் அலர்ஜியா? ஏ.கே .அந்தொணியின் மனைவி இன்றும் பள்ளியாசிரியை தானே? அலர்ஜியா? நமது பொதுப்புத்தி சொல்வது எப்பொதும் சரியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை ! ---காஸ்யபன்
கிறுக்கர்களுக்கு எந்த நோக்கமும் இருக்காது, இவர்கள் காரியக்கிறுக்கர்கள்.
ஆமாம்!ஹரிஹரன் அவர்களே! ஊழலுக்கு எதிரன மக்கள் கோபத்தை திசை திருப்பி விட்டார்களே!---காஸ்யபன்
நான் இன்றைய அரசியல் வாதிகளை சொன்னேன்.
ஒன்று ஊழல்வாதிகளாய் இருக்கிறார்கள். இல்லை சந்தர்ப்பவாதிகளாய் இருக்கிறார்கள்.
உங்கள் கேரள கம்யுனிஸ்ட்கள் முல்லை பெரியாறு விசயத்தில் ஏன் நேர்மையாக நடக்கவில்லை?
சந்தர்ப்பவாதிகள். ஓட்டுப் பொறுக்கிகள்.
ஊழல் வாதிகள் - இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றில் அத்தனை அரசியல்வாதிகளும் அடக்கம்.
சிவகுமரன் அவர்களே! முல்லைப்பெரியார்,கூடங்குளம் , என்று அத்துணைபற்றியும் தங்கள் நிலையை விளக்கித்தான் அறிக்கை உள்ளது.அதனை நீங்கள் பார்க்கும் பத்திரிகைகள் போடாது.போட்டாலும் திரித்துப் போடும். www.http://epaper.theekkathir.org ல் தீக்கதிர் பத்திரிகையை பார்க்கலாம் . ---காஸ்யபன்
Post a Comment