Saturday, March 31, 2012

இலங்கைத் தமிழருக்காக .........

இலங்கை தமிழர்களுக்காக........

இலங்கை ராணுவத்தின் திறமை பற்றி ஒரு அனுமானமுண்டு . கிட்டத்தட்ட இருபது விமானங்கள் பராமறிப்பு இல்லாமல் ,இயந்திரக் கோளாரினா ல் வீழ்ந்து நொறுங்கின.தற்போது கற்ற பாடமும் நல்லெண்ணமும் என்ற அறிக்கை ( L.L.R.C) புதிய தகவல்களத்தருகின்றன.

போர் முடிந்து பரிசொதனையில் இந்த விமனங்கள் விடுதலைப்படயினரால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக தெரியவந்துள்ளது/ அவர்களின் ஆயுத்க்கிடங்குகளில் மிச்சமிருந்த எவுகணைகளை இலங்கராணுவம் கண்டெடுத்துள்ளது.இவை ரஷ்யாவிலிருந்து பெறப்பட்டவை. அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை ரஷ்யா ,சீனா போன்ற நாடுகள் எதிர்த்தன .அதற்காக அந்தநாடுகளை திட்டியவர்கள் --அம்மா,அக்க பேரைச்சொல்லவில்லை--உண்டு .நிருபர்கள் கேட்டால் ரஷ்யத்தலைவர்கள். மறுப்பார்கள்.ஏனென்றால் இதில் ராஜீயச்சிக்கல் உண்டு
எனது குடும்பத்தச்சேர்ந்தவர் விமானப்பட்டையில் இருந்தார். தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து கொள்ளும் இடத்தில் இருந்தர். "என்ன செய்ய மாமா ! அமதிப்படன்னு தான் பேரு! ஹெலிகாப்டர் வந்தா கைகால் போன சொல்ஜர்கள்தான். பாதிப்பேர் தமிழ் பேசரவங்க" என்பார்.

என் சகோதரரின் மகளுக்கு திருமணம் ஆகும்போது மாப்பிள்ளை காஷ்மீரி இருந்தார்.தமிழர் என்பதால் அமைதிபடை மூலம் இலங்கை சென்றார்.எனக்குப் பெருமைதான். வெளிநாட்டில் இருப்பது பெருமை இல்லையா? கூடுதல் சம்பளம் என்று மகிழ்ச்சியாக இருந்தது. நீங்க ஒண்ணு! முக்காத்துட்டு கூட தரமாட்டான் .கைகால் போச்சுன்னா ஆக்சிடென் கணக்கு .அமைதிப்படையில்லா? என்றார். மனம் "திக்" என்றது.

கார்கில் போரின் போது சவப்பெட்டியைச்சுமந்து வந்து" ஓட்டு" கேட்டது ப.ஜ.க அப்போது இறந்த தமிழர்களைவிட அமைதிப்படயில் இறந்த தமிழாகத்து சோல்ஜர்கள் அதிகம்.இவை எல்லம் வரலாற்றின் இண்டு இடுக்குகளில் தான் இருக்கும் .இவற்றை அதிகார பூர்வமாக எற்கவோ மறுக்கவோ மாட்டார்கள்.

எண்பதாம் ஆண்டுகளில் மதுரை பாத்திமா கல்லூரிக்குப் பின்புறம் உள்ள சாந்தி நகரில் குடியிருந்தேன். அங்குள்ள ரயிலார் நகரை ஒட்டி கண்மாய்.மழை காலத்தில் மட்டுமே நீர் இருக்கும். சிறுவர்கள் கிரிக்கெட்,கால்பந்து விளையாடுவார்கள்.விடுதலைபடையினர் அங்கு பயிற்சி எடுப்பார்கள்.கூடல் நகரிலிருந்து அலங்காநல்லுர் வரை " ரூட்மார்ச்சு" நட்த்துவார்கள். அலங்காநல்லுரூர் அருகில் உள்ள அணைக்கரையில் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடக்கும். வத்திறாயிருப்பு,குற்றாலம்,ஆனைமலை , மத்தியப் பிரதேச காடுகளில் பயிற்சி நடக்கும். இது உலகம் பூராவும் தெரியும்.

இந்திரா அம்மையார் காலத்திலும் நடந்தது. ராஜீவ் காலத்திலும் நடந்தது.

இந்தியாவின் நல்லேண்ணத்தை வேண்டாம் என்று ஒதுக்கியது யார்?

பட்டு வேட்டிக்கு ஆசைப்பட்டது யார்?

கோவணத்தையும் இழந்து நிற்பது யார்?

2 comments:

சிவகுமாரன் said...

பகிர்வுக்கு நன்றி அய்யா

hariharan said...

அண்டை நாட்டுக்கு எதிரான தீவிரவாதத்தை இந்தியாவும் ஊக்குவித்தது என்ற உண்மை கசப்பாக இருக்கிறது. தமிழ்நாட்டின் தமிழர்களுக்காக எல்டிடியினரை ஆதரிக்கவில்லை மாறாக அமெரிக்கவின் தளம் திரிகோணமலையில் அமைந்துவிடக்கூடாது என்பது தான் இந்தியாவின் நோக்கமாக இருந்திருக்கிறது. இப்போது அப்படியே அணிகள் மாறிவிட்டன. இன்னும் தனீஈழம் தீர்வு மட்டுமே தீர்வு என்று முழங்குகிறவர்கள் தமிழகத்தில் உள்ள இன்வெறி அரசியல்வாதிகள் மட்டுமே.